Sunday, August 29, 2021

கண்ணாடி வைத்து #பூஜை செய்தால் #முன்னோர்கள் மகிழ்வார்கள்.

சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது.
அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து நமது முன்னோர்கள் வழிபட்டனர். ஆனால் தற்போது அந்த வழக்கம் சற்று மாறிவருகிறது..
கண்ணாடியை வைத்து வழிபட்டதன் காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிப்படும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள் என்று மகிழ்வார்கள்.
இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னத்தான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம்.
அதுபோல,வெளியில் இருந்த வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது.
May be an image of 2 people and text that says '大ー h и பூஜை அறையில் கண்ணாடி வைக்கும் முறை'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...