துள்ளுகிற முரட்டு குதிரைக்கு கடிவாளம் போடுவதில் வல்லவர் கருணாநிதி என்றால் மிகை இல்லை ! உதாரணமாக திமுக எம் ஜி ஆர் மறைவுக்கு பின் 13 ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்தது ! சேவல் சின்னத்தில் ஜெயித்த ஜெயலலிதா அணி அதிமுக எதிர்கட்சி ஆனது ! எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதாவும் துணை எதிர்க்கட்சி தலைவராக திருநாவுக்கரசு ( அப்போது அவர் அரசர் இல்லை )இருந்தனர் ! திருநாவுக்கரசு ஜெயா அவையில் இல்லாதபோது மிகவும் ஆவேசமாக திமுகவை எதிர்த்து குரல் கொடுப்பார் ! அப்படி அவர் ஒரு முறை பேசியபோது கருணாநிதி பதில் தந்தார் ! அவர் திருநாவுக்கரசை பார்த்து ஜானகி எம் ஜி ஆர் 45 நாள் ஆட்சியில் அமைச்சர்கள் என்னென்ன ஊழல்கள் செய்து கொள்ளை அடித்தார்கள் என்கிற முழு தகவல் கோப்புகள் என் பார்வைக்கு வந்திருக்கின்றன என்றார் ! அதோடு அடங்கி போனார் திருநாவுக்கரசு ! பின்னர் ஜெயாவினால் கட்சியிலிருந்து துரத்தப்பட்டு பல கட்சிகள் மாறி இப்போது காங்கிரஸில் இருக்கிறார் ! இப்போதும் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது ! அதிமுக எதிர்கட்சியாகி தலைவராக ஈ பி எஸ் ம் துணை எதிர்க்கட்சி தலைவராக ஓ பி ஸ் ம் இருக்கிறார்கள் ! ஓ பி எஸ் ஏன் பழைய திருநாவுக்கரசு போல பம்முகிறார் ? வரலாறு திரும்புகிறதா ?
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment