Saturday, August 28, 2021

வீடு.

 தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்கள் மட்டுமல்லமால் பலரும் loan வாங்கி வீட்டை வாங்கி விட வேண்டும் என நினைக்கின்றனர்.. அதனால் ஏற்படும் விளைவுகளை யோசிப்பதில்லை..

சென்னை போன்ற நகரங்களில் 2BHK flat வாங்க குறைந்தது 35 லட்சம் தேவைபடுகிறது. தந்தை PF பணம், தனது கொஞ்சம் சேமிப்பு, தாய் அல்லது மனைவியின் நகை போன்றவற்றை சேர்த்து 10 லட்சம் முன்பணம் கொடுத்து, மீதமுள்ள 25 லட்சங்களுக்கு loan பெற்று, மாதம் ரூ.25000 EMI ஆக 20 வருடங்களுக்கு கட்டுகின்றனர்.
இதில் உள்ள பிரச்சனைகள்:
1. பெரும்பாலான சம்பளம் வீட்டு கடனாக செல்கிறது.
2. 20 வருடங்கள் வரை வேலை இருக்குமா என்று தெரியாது. உங்களுக்கு தெரியாமல் வட்டி விகிதம் மாறும் போது வருடங்கள் அதிகரிக்கும்.
3. அவசர தேவைக்கு கூட கையில் பணம் இல்லாமல் போகிறது.
4. ஒரு சிலர் வீட்டுக்கு வாடகை கொடுப்பதற்கு பதில், EMI கொடுக்கலாம் என்பார்கள். ஆனால் நீங்கள் 25000 வாடகை கொடுக்கப்போவதில்லை. முன்பணம் வங்கியில் FD ஆக சேமித்தால், அதை வைத்து வாடகை கட்டலாம். 25000 EMI பதிலாக RD இல் சேமித்தால் அவசர தேவைக்கு உதவியாக இருக்கும்.
5. ஒரு சிலர் tax benifit கிடைக்கும் என வாதிடுவர். மாதம் 2000 சம்பளத்தில் கூட வருவதற்கு, 25000 loan கட்டுவது சரியா?
உதாரணமாக, 25 லட்சத்திற்கு 25000 EMI கட்டினால், நீங்கள் வங்கிக்கு 60 லட்சங்கள் மொத்தம் கட்ட வேண்டும்.
அதற்கு பதில், 25000-த்தை RD மூலம் சேமித்தால், 1.6 கோடி உங்களுக்கு கிடைக்கும். வட்டிக்கு வரி பிடித்தம் செய்தாலும் 1.3 கோடி கிடைக்கும்.
ஆனால் எதையும் சிந்திக்காமல், மற்றவர்கள் வீடு வாங்குகிறார்கள் என தானும் வாங்குகின்றனர். யார் வீடு வாங்கலாம் என்றால், எவரால் குறைந்த நாட்களில் கடனை அடைக்க முடியுமோ அவர்கள் வாங்கலாம். கடனை அடைக்க 20 வருடங்கள் தேவைபடுபவர்களுக்கு, எந்த பயனும் இல்லை.
நமது பெற்றோர்கள் கடைசி காலத்தில், தனது சேமிப்பை வைத்து வீடு வாங்குவர்.. இப்போது உள்ள இளையதலைமுறையினர், எடுத்த உடனே நல்ல சம்பளம் கிடைப்பதால், loan எடுத்து வீட்டை வாங்கி ரியல் எஸ்டேட் துறை கொழுத்த லாபம் அடைகிறது.
இது வீடு வாங்குவதை குறை கூறும் பதிவு கிடையாது.. எந்த சேமிப்பும் இல்லாமல் அனைத்தையும் வீட்டில் முதலீடு செய்வது சரியான தீர்வு கிடையாது.. வேலை இல்லாமல் போனால் கூட, சிறு தொழில் தொடங்க பணம் தேவைப்படும்போது கையில் பணம் இல்லை. உங்களால் 5 வருடங்கள் அல்லது அதற்கு முன்போ அடைக்க நேரிட்டால், உங்களுக்கு நல்லது தான்...
கொஞ்சம் யோசியுங்கள். இங்கு குறிப்பிட்டுள்ள விளக்கம் புரியவில்லையென்றால், email id யை பதிவு செய்யுங்கள், நான் ஒரு excel sheet இல் மிக தெளிவாக உருவாக்கி உள்ளேன். உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். மற்றவர்களுக்கும் பகிருங்கள்...
நண்பர்களே... ஒவ்வொருவருக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் அவசியம் தெரிந்திருக்க வேண்டும். அரசியல் தான் பலருக்கு பிடிக்கவில்லை. பொருளாதாரத்தையாவது கற்று கொள்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...