Thursday, August 26, 2021

மதன் அவர்களுக்கு சில கேள்விகள்.

 1. தாங்கள் பாஜகவில் சேர்ந்த உள்நோக்கம் என்ன? யாருடைய ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறீர்கள்? உங்களை அனுப்பியவர்கள் யார்?

2. உண்மையிலேயே கட்சியின் மீது உங்களுக்கு விசுவாசம் இருந்தால் இந்த விவகாரத்தை கட்சியிடம் பேசாமல் பொதுவெளியில் எதற்கு எடுத்து சென்றீர்கள்?
3. கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தாங்கள் குற்றச்சாட்டின் ஆதாரத்தை கேட்டிருக்கிறார். நீங்களோ ஆதாரத்தை அவரிடம் சமர்பிக்காமல் வலைதளத்தில் வெளியிட்டதன் நோக்கம் என்ன?
4. உங்கள் வீட்டில் உங்கள் சகோதர சகோதரிகள் யாரும் தவறு செய்தால் அதை தங்கள் தந்தையிடம் கூறாமல் வீதி வீதியாக போய் சொல்லுவீர்களா?
5.இன்னும் 15 பேருடைய வீடியோக்கள் இருக்கிறது என்கிறீர்களே அதில் எத்தனை பேர் மற்ற கட்சியினர்? அவர்களின் வீடியோக்களை தைரியமாக வெளியிட முடியுமா? இதன் மூலம் யாரை மிரட்ட எண்ணுகிறீர்கள்?
6. உங்கள் தோழி இன்பா பேசும் போது இதனால் உங்கள் உயிருக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு பாஜக தலைமை தான் பொறுப்பு என்கிறாரே அப்போ உங்களுக்கு இந்த கட்சியின் தலைமை மீது நம்பிக்கை இல்லையா? நம்பிக்கை இல்லாமல் இந்த கட்சியில் இணைந்தது ஏன்? தொடர்வது ஏன்?
7. இந்த கட்சியில் இணைந்ததே இங்கு உள்ளவர்களை உளவு பார்க்கத்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
8.மொத்தத்தில் உங்கள் குறி கே.டி.ஆரா இல்லை பாஜக வா?
இனியும் இவர் விஷயத்தில் பாஜக தலைமை மௌனம் காப்பது சரியில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...