Monday, August 16, 2021

அதற்கு காரணம் தீண்டாமை அல்ல, அல்லவே அல்ல‌.

 கர்ப்பகிரகத்தில் ஏன் எல்லோரும் நுழைய முடியவில்லை அதை கட்டிய கொத்தனார் ஏன் நுழையமுடியவில்லை, செதுக்கிய சிற்பி ஏன் நுழையமுடியவில்லை , சிற்பிக்கு சோறுபோட்ட அவன் மனைவி ஏன் நுழையமுடியவில்லை என கிளம்பிவிட்டார்கள் ஒரு சிலர்

கிளப்பிவிட்டது இப்போதைய அறமில்லா அமைச்சர், தன் அதிகாரம் மீறி எல்லை
ஆலயத்து கர்பகிரகம் தனித்து காக்கபட வேண்டும் என்பது அக்காலத்து விதி, அது இந்துமதத்துக்கு மட்டுமல்ல யூத மதத்திலும் இன்னும் சில பண்டைய மதங்களிலும் இருந்தது
அதற்கு காரணம் தீண்டாமை அல்ல, அல்லவே அல்ல‌
ஞானிகளுக்கான ஞானி சாலமோன் அமைத்த ஆலயத்திலே முக்கியமான பீடத்திற்கு குரு தவிர யாரும் நுழைய அனுமதியில்லை என்கின்றது சான்றுகள், ஆம் அவன் கட்டிய ஆலயத்து கர்ப்பகிரஹத்துக்குள் அவனே நுழையவில்லை
ராஜராஜ சோழனும் அப்படியே தன் ஆலயத்தில் தள்ளி நின்றான், ஏன் அப்படி விதி வைத்தார்கள்?
முதல் விஷயம் பாதுகாப்பு, சிலைகளும் அவற்றின் நகைகளும் இன்னு விலைமதிக்கபடா பொக்கிஷங்களும் அந்த சந்ததியில்தான் இருந்தன, கருவறை தெய்வமே எல்லா வளங்களுக்கும் சாட்சியாய் நின்றது
எல்லோரையும் உள்ளே விட்டால் அதை காப்பதும் சிரமம், இன்னொன்று அழகிய சிலைகளை சேதபடுத்தும் ஆபத்தும் உண்டு
முக்கியமான விஷயம் பாதுகாப்பு என்பதால் தள்ளி இருந்து மக்களை தரிசிக்க வைத்தார்கள்
கருவறையும் அதன் நகையும் பொன்னும் வைரமும் ஒரு நாட்டின் செழுமையின் அடையாளமாய் இருந்தது
இன்று டிரம்போ மோடியோ வருகின்றார்கள் என்றால் ஓடிசென்று நெருங்கமுடியுமா? தள்ளி நின்றுதான் தரிசிக்கமுடியும்
மானிடருக்கே இப்படி என்றால் அன்று தெய்வத்தின் சிலைகளுக்கு எப்படி எல்லாம் பாதுகாப்பு வழங்கியிருப்பார்கள்
அடுத்த விஷயம் எல்லா மக்களையும் கருவறையில் அனுமதித்தால் மூல தெய்வத்தின் பாதம் முதல் முகம் வரை தொட்டு வணங்குவார்கள், அந்த தெய்வத்தின் மேல்தான் பக்தி அதிகம் ஓங்கும்
எல்லோரும் தொட்டு அல்லது எல்லோரும் அபிஷேகமும் அலங்காரம் செய்தால் என்னாகும்?
சிலையின் ஆயுள்தான் என்னாகும்? எல்லோரும் தொட்டால் சேதமாகாதா? இதனால் தள்ளி இருந்து வணங்க சொன்னார்கள்
இன்னொன்று ஆகம விதி
சைவ உணவும் கட்டுபாடான விரதமும் இன்னும் மந்திர உச்சாடனைகளில் தேர்ச்சியும் முழுநேரமும் இறைவனை பற்றி சிந்தித்து அந்த பாடங்களில் தேர்ச்சியும் முதிர்ச்சியும் பெற்றவர்களே அங்கு அனுமதிக்கபட்டனர்
முதல் காரணம் அவர்கள் வாழ்வினை முழுநேரமும் கடவுளுக்காக அர்பணித்தவர்கள், கடவுளின் பணியாளர்கள்
மனசாட்சியும் தெய்வபக்தியும் நிறைந்தவர்கள்
அவர்களால் ஆலய பீடமோ சிலையோ நகையோ எதுவும் ஆகாது எனும் நம்பிக்கையில் அனுமதிக்கபட்டாரகள்
ஆம் இறைவனுக்கு வாழ்வினை முழுக்க அர்பணித்தவர்களே செல்லலாம் என்பதுதான் பண்டைய மதங்களின் விதி, அதன் தொடர்ச்சியான இந்துமதத்தின் விதியும் கூட‌
ஆலயத்தையும் வழிபாட்டையும் தவிர ஏதுமறியா குருக்கள் அங்கு அனுமதிக்கபட்டனர்
காரணம் கர்பகிரகத்து அமைப்பு முதல் தன்மை வரை சிலையின் பராமரிப்பு வரை அவர்களுக்குத்தான் தெரியும்
சும்மா நேரம் போகவில்லை என்றாலோ இல்லை நாளில் 10 நிமிடம் கடவளை வணங்க அல்லது புலம்ப வருபவர்களை கர்பகிரகத்தில் விட என்ன அவசியம் உண்டு?
மனமும் சிந்தனையும் உடலும் எல்லாமும் ஆலயத்தில் பின்னி பிணைந்த மானிடர்களே குருக்கள் என மகா தூய்மையான சந்நிதானத்தில் அனுமதிக்கபட்டார்கள்
அதிலும் வழிபாட்டு நேரம் மட்டும் செல்லமுடியுமே தவிர அமரவவோ அங்கு ஓய்வெடுக்கவோ அனுமதி இல்லை
இன்னும் சிலர் சொல்வார்கள் சமஸ்கிருதம் ஏன்?
அங்குதான் இருக்கின்றது ரகசியம்
இந்நாடு அன்றே மொழியால் பிரிந்தாலும் மதத்தால் ஒன்றாயிருந்தது
அன்றைய பாரதத்திலும் பாரதத்துக்கு வெளியிலேயும் இந்து ஆலயம் இருந்தன மொழிவேறு
ஒரு இந்து எந்த ஆலயத்துக்கு சென்றாலும் புரிந்து வழிபடும் மொழியாக இணைப்பு மொழியாக சமஸ்கிருதம் இருந்தது
இன்று இஸ்லாமியர் தொழுகைக்கும் அழைப்புக்கும் அரேபிய மொழி உலகளாவிய நிலையில் இருக்கின்றதல்லவா?
கிறிஸ்தவருக்கு ஆங்கிலம் உண்டல்லவா?
அப்படி இந்து ஆலயங்களை இணைத்த மொழி சமஸ்கிருதம், அதுதான் உண்மை, அதுதான் சத்தியம்
கவனியுங்கள்
அந்த ஆலயத்தை கட்ட சொல்லி பொன்னும் பொருளும் கொடுத்து வழிபாட்டு மானியமும் கொடுத்த அரசன் உள்ளே செல்ல முடியாது
அவனோ அவனின் குடும்பமோ கர்ப்பகிரகத்தினுள் நுழைய முடியாது
அரசனின் பலம் வாய்ந்த தளபதிகளும் நுழைய முடியாது
அதாவது அந்த சமூகம் அப்படி கட்டுபட்டு நின்றது, கடவுளுக்காக வாழ்வோர் மட்டும் உள்ளே சென்றால் போதும் மன்னனே ஆயினும் வெளியில் நிற்க என வகுத்தது
மன்னனும் அதை ஏற்று மனமார பின்பற்றினான்
ஆம் ஆலயத்தில் ஆண்டான் அடிமை பார்ப்பான் சூத்திரன் வைசிகன் எனும் பேதத்தை யாரும் கண்டதில்லை
ஆலயத்துள் நுழைய எல்லோருக்கும் அனுமதி இருந்தது, இந்த மதுரை வைக்கம் போன்ற ஆலயங்களில் இருந்த சர்ச்சை சில காலமே. அதுவும் வெள்ளையன் வந்து செய்த குழப்பங்களின் பின்பே
அப்பொழுதும் மற்ற ஆலயங்களில் எல்லோரும் செல்லும் அளவுதான் நிலமை இருந்தது, அங்கெல்லாம் சிக்கல் இல்லை
இறந்த ஆடுமாடுகளை சுமப்போர், வெட்டியான் போன்ற சிலரால் நோய்பரப்பும் ஆபத்து இருப்பதால் சிலரை பொதுஇடங்களில் அக்கால சமூகம் அனுமதிக்கவில்லை
ஆலயமும் பொதுவிடம் என்பதால் நோய்தடுப்புக்காக சில தொழில் செய்வோரை அனுமதிக்கவில்லை
அது சாதிவிரோதம் அல்ல, பைரவர் கபாலி மாவிரதர் போன்ற சைவ அடியார்கள் கூட ஆலயத்துனுள் அனுமதிக்கபடவில்லை, அவர்களை கண்டும் இந்து சமூகம் தள்ளி நின்றுதான் வணங்கிற்று
மற்றபடி ஆலயத்துள் யாரும் செல்லலாம் ஆனால் மகா முக்கியமான கர்ப்பகிரகத்தில் கடவுளுக்கு அர்பணிக்கபட்டோரும் மகா நம்பிக்கைக்கு உகந்தோரும் பந்த பாசம் அறுத்தோரும் மட்டும் செல்லலாம் எனும் விதி இருந்தது
குருக்கள் செல்வாரே அன்றி குருக்களின் மனைவியும் மக்களும் செல்லமுடியுமா?
பார்ப்பான் என்பதுதான் கர்ப்பகிரகத்தில் நுழையும் தகுதி என்றால் பிராமண பெண்களும் குழந்தைகளும் செல்லலாமே? சென்றார்களா?
இல்லை ஒரு காலமும் இல்லை
பாதுகாப்புக்காகவும் இன்னும் பல காரணங்களுக்காகவும் அன்றே ஏற்படுத்தபட்ட விஷயங்களை இன்றளவும் பின்பற்றி வருகின்றது தூய்மையான இந்துமதம்
கர்ப்பகிரகம் பார்ப்பனருக்கு மட்டுமான இடம் அல்ல, கடவுளுக்காக அர்ப்பணிக்கபட்ட மற்ற சாதியின வழிபாடு நடத்தும் எத்தனையோ ஆலயங்கள் இங்கு உண்டு
கத்தோலிக்க கிறிஸ்தவ பீடங்களிலும் குருக்கள் தவிர யாரும் வழிபாடு நடத்தமுடியாது, பெண்களுக்கு பீடத்தில் வழிபாடு நடத்த அனுமதி இன்றும் இல்லை
பீடத்தை அடுத்த அந்த நற்கருணை பெட்டியினை குருவானவர் தவிர யாரும் தொடக்கூடாது, திறக்க கூடாது
அவர்கள் காக்கும் புனிதம் அப்படி
இன்றும் புனிதமான மெக்காவின் கபாவில் அரசகுடும்பம் தவிர யாரும் செல்லமுடியாது
எல்லோரையும் அனுமதித்தால் அந்த மகா புண்ணிய இடத்தை பராமரிப்பது கடினம் என்கின்றது சவுதி அரச குடும்பம்
அட வேளாங்கண்ணி கோவிலிலே மூல விக்கிரகத்தை யாரும் தொடமுடியாது
பீடத்துக்குள்ளே பக்தர்கள் செல்லமுடியாது, காரணம் அந்த காணகிடைக்கா சொரூபத்துக்கான பாதுகாப்பு
இதுதான் இந்து ஆலயங்களிலும் நடக்கின்றது, அது தீண்டாமையாம்
ஆம் தனித்துவமும் புனிதமுனான விஷயங்களை எல்லோருக்கும் பொதுவாக தூரத்தில் வைப்பதுதான் சரி
அனுமதிக்கபட்ட சிலரை மட்டும் வைத்து வழிபடுவதுதான் சால சிறந்தது
அதில் மந்திர உச்சாடனை,சிலையினை உருவேற்றுதல் என சில விஷயங்கள் உண்டு என நம்புபவர்கள் நம்பட்டும்
நம்பாதோர் அதில் இருக்கும் பாதுகாப்பு இன்னபிற விஷயங்களை நம்பினாலோ போதும்
ஒரு மருத்துவருடன் நோயாளி கைகுலுக்கினால் அடுத்த நோயாளி வருமுன் மருத்துவர் கைகளை பலமுறை டெட்டால் போட்டு கழுவுகின்றார் மருத்துவர்
ஏன் நோய் பரவிவிடுமாம், ஆம் கொரோனா காலத்தில் இது தெளிவாய் விளங்கும்
எல்லோரையும் கர்பகிரகத்தில் விட்டு சொரூபத்தை தொட்டு வணங்க சொன்னால், ஒவ்வொரு முறையும் சிலையின் பாதத்தை கழுவுவது நடக்கும் காரியமா?
இதனால்தான் தள்ளி நின்று வணங்க சொன்னார்கள் அன்றைய இந்துக்கள்
ஆலயங்களை கழுவி விடுவதும் மிக சுத்தமாக பார்த்துகொள்வதும் இந்த தத்துவமன்றி வேறல்ல‌
அதில் சூத்திரன் அது இது தீட்டு என சொல்ல ஒன்றுமில்லை இன்றைய சுத்தத்தின் அவசியத்தை அன்றே சொன்னது இந்துமதம்
குருவானவர் பூஜை செய்யும் பொழுது மணி அடிக்கின்றார்களே ஏன்?
அந்த ஓசை கேட்கும் பொழுதுஎல்லோர் கண்ணும் கர்ப்பகிரகம் நோக்கி திரும்ப வேண்டும், அந்த தெய்வத்தை எல்லோரும் ஒன்றாய் தொழ வேண்டும்
அரசன் முதல் ஆண்டிவரை அன்று மணியோசை எழுப்பும் பொழுது தள்ளி நின்று வணங்கினார்கள்
மாறாக நீங்களே சென்று வணங்கிவிட்டு வாருங்கள் என அனுப்பினால் கூட்டம் என்னாகும்? கருவறை என்னாகும்?
இதெல்லாம் அன்றே திட்டமிட்டு உருவாக்கபட்ட நுட்பமான விஷயங்கள்
வைர நகையினை ஒருவர் வைத்திருந்தால் அதை பொத்தி பொத்தி பாதுகாப்பாரா இல்லை? எல்லோரும் வந்து பாருங்கள் என எல்லோர் கையிலும் கொடுப்பாரா?
வைர கண்காட்சியிலே அது பாதுகாப்பாக தள்ளிதான் வைக்கபட்டிருக்கும்
உயர்ந்த மதிப்புமிக்க பொருட்களுக்கான இடம் அப்படியானது, மகா மகா தூய்மையான கற்பகிரகமும் அப்படியே
ஆழ சிந்தித்தால் அதிலுள்ள உண்மை விளங்கும்
புனிதமான விஷயங்களில் சாணி அடிக்க வேண்டாம்
அங்கு பிறப்பால் எதுவும் வருவதில்லை தனக்கு பின் மகனும் பேரனும் கர்ப்பகிரகத்தில் வந்து தட்சனை பிச்சை வாங்க வேண்டும் என எந்த பிராமணனும் நினைப்பதில்லை
மாறாக திராவிட கட்சி தலைவர்கள்தான் தங்கள் கட்சியின் தலமை பதவி பிறப்பால் நிர்ணயிக்கபடுகின்றது
என் அப்பனுக்கு பின் எனக்கு, எனக்கு பின் என்மகனுக்கு அவனுக்கு பின் என் பேரனுக்கு என பிறப்பால் வரும் உரிமையினை நிலைநாட்டுகின்றார்கள்
ஆலயங்களும் அவற்றின் அமைப்புகளும் நுட்பமான நிர்வாகம், பக்தி, இயங்குமுறை , பாதுகாப்பு, உடல்நலம் இன்னும் ஏகபட்ட விஷயங்களை உள்ளடக்கியவை
பெண்களுக்கு கர்பகிரகத்தில் அனுமதியில்லை என்பதை விட நோக்க வேண்டிய விஷயம் அவர்கள் மந்திரங்களை உச்சரிக்க கூட அனுமதியில்லை
காரணம் மந்திரங்கள் உடலை சூடாக்க கூடியவை அது பெண்களின் கர்ப்பையினை பாதிக்கும் என்பதால் அனுமதி இல்லை
இதே அனுமதிதான் கருவறையிலும் மறுக்கபட்டது, மாத விலக்கான நாள் மட்டுமல்ல சூடு நிறைந்த கருவறை மந்திர உச்சாடனைகளுடன் சேர்ந்தால் பெண்ணின் கர்ப்பபை பாதிக்கபடும்
இதனாலே அவளுக்கு விலக்கு அளித்தது இந்துமதம்
கர்ப்பகிரகம் செல்ல அவளுக்கு அனுமதியில்லை தவிர, பூச்சூடி பட்டு உடுத்தி தேர்போல் வர அவளை அனுமதித்தது, பாடல் பாடவும் ஆடவும் அவளுக்கு தடை இல்லை
சில மதங்களை போல் முக்காடு இட்டு, முழுக்க மூடி புண்ணாக்கு மூட்டைபோல் வர சொல்லவில்லை இந்துமதம், அது பெண்களை பெண்ணாக கொண்டாடியது
ஆக ஒரு காலத்தில் இருந்த மிக பெரும் அறிவான சமூகத்தால் ஏற்படுத்தபட்டவை, அறிவும் ஆழ்ந்த கவனமும் இருந்தால் அது புரியும், புரிந்தால் கை எடுத்து வணங்க தோன்றும்
சில விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம், முதலில் கற்பகிரகம் நுழைய வேண்டும் என்பார்கள், பின் தொட வேண்டும் என்பார்கள் மெல்ல ஆலயத்தில் மீன்குழம்பும் கருவாட்டு பொறியலும் சமைக்க அனுமதிக்க வேண்டும் என்பார்கள், ஒவ்வொன்றாய் சொல்லி ஆலயத்தை மீன் சந்தையாக ஆக்க நினைப்பார்கள்
அவர்களுக்கு கொடுக்கபட்டிருக்கும் அசைன்மென்ட் இதுதான், அதனால் இப்படி ஏதாவது சொல்லிகொண்டே இருப்பார்கள்
இவ்வளவு சொல்வார்கள், சரி பூசாரி மகன் பூசாரி என கற்பகிரகத்தில் நுழைவதில்லை ஆனால் தலைவன் மகன் அடுத்த முதல்வராவார், அவருக்கு பின் அவர் மகனும் அவர் மகனும் முதல்வராவார்களே, பிறப்பால் ஏற்ற தாழ்வு எங்கே உண்டு என கேளுங்கள்
நடிகனுக்கு பின் அவர் மகன் நடிகனாய் வந்து சம்பாதிக்கலாம் இன்னொருவன் வந்தால் வளரவிடாமல் அடிப்பார்கள், அவனவன் போராடி வரும் இடத்தை நடிகன் மகன் எளிதாக வரமுடிகின்றதே எப்படி பிறப்பால் ஏற்றம் எங்கே இருக்கின்றது என கேளுங்கள்
பதிலே வராது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...