Thursday, August 19, 2021

புதிய வாழ்வு மலரட்டும் - இன்று மொகரம்.

 இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதம் முஹ்ரம் எனப்படும் மொகரம். ஜனநாயகத்தின் சிறப்ப மகள்ளாட்சியின் மாண்பைக்காப்பதற்ாக நாயகத்தின் பேரர்ஹலரத் ஹூசைன் கர்பலா களத்தில் தன் இன்னுயிரை ஈத்த நிகழ்வு மொகரம் பத்தாம் நாளில் அரங்கேறியது.

 
புதிய வாழ்வு மலரட்டும் - இன்று மொகரம்


நாயகத்தின் காலத்திற்கு முன்பிருந்த இம்மாதத்திற்கு எனத் தனிச்சிறப்பினை மக்கள் அளித்து வந்துள்ளனர். இந்நாளில் போர் புரிவதில்லை. யூதர்களும் இந்த நாளில் நோன்பு நோற்றுள்ளனர்.
பிர் அவ்னையும் அவனது கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து மூஸா அவர்களையும், அவர்களின் மக்களையும் இறைவன் ஈடேற்றும் பெற வைத்த சிறப்பு இம்மாதத்திற்கு உண்டு. மொகரம் பத்தாம் நாளில் மூஸா நோன்பு நோற்றார்கள்.

மொகரம் மாதத்தின் 9,10-ம் நாளில் நோன்பு நோற்பது அவசியம். இந்த நாளிலே நோன்பு வைப்பது அதற்கு முன்னர் செய்திருக்கும் ஓராண்டிற்கு உரிய சிறிய பாவங்களை போக்கும் என்கிறார் நாயகம். இந்நாளில் நாம் ஒவ்வொருவரும் குடும்பத்தினருக்கு அதிகப்படியாக செலவழிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். மொகரம் மாதத்தின் பத்தாம் நாளில் ஹலரத் ஹூசைன் தியாக வரலாற்றை மக்களுக்கு விளக்கிட அறிஞர்கள் மூலம் கூட்டங்கள், புத்தக வெளியீடு விழாக்கள் நடத்த வேண்டும். இந்நாளில் புதிய வாழ்வு மலர வேண்டும் என பிரார்த்தனை செய்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...