சட்டசபையில் இந்த பாஜக எம்.எல்.ஏ 4 பேரும் என்ன செய்கின்றார்கள் என்பதுதான் தமிழகத்தில் இப்பொழுது 1,70,000 கோடி ரூபாய் கேள்வி
அவர்கள் பாஜக உறுப்பினர்கள், ஆனால் அர்ச்சகர் விவகாரத்தில் 4 பேரும் வாயே திறக்காமல் இருப்பதுதான் ஆச்சரியம்
ஒரு தேசியகட்சியின் உறுப்பினர்கள் இப்படி இருப்பது சரியல்ல, இது தேசிய கொள்கையினை மாநில அரசியலுக்கு பலிகொடுக்கும் விஷயம், செருப்புக்கு ஏற்றபடி காலை வெட்டும் முழு மடத்தனம்
இவர்கள் குரல் கொடுப்பதால் பாஜக முழு பிராமண ஆதரவு கட்சியாக ஆகிவிடாது, அதுவும் பாஜக இங்கு மிக பெரிய வோட்டு வங்கியும் வைத்திருக்கவில்லை
பாஜக உறுப்பினர்கள் நியாயமான கோரிக்கையினை விவாதத்தினை வைத்திருக்கலாம்
எவ்வளவோ ஆலயங்கள் அர்ச்சகரின்றி தடுமாறும் பொழுது இந்த முள் பிடுங்கும் அர்ச்சகர்களை அங்கு அனுப்பலாம், இவர்களுக்கும் சேர்த்து அர்ச்சகர் சம்பளத்தை உயர்த்தலாம்
மாறாக கருணாநிதி முன்பு உத்தரவிட்டு நீதிமன்றம் கண்டித்த நிலையில், அந்த கண்டனம் அப்படியே இருக்கும் நிலையில் ஆகம விதிகளுக்கு உட்பட்ட ஆலயங்களில் இப்படி வலிய திணிப்பது சட்ட விரோதமும் இந்து விரோதமும் ஆகும்
இதை பாஜ உறுப்பினர்கள் இந்து சம்பிரதாயமாக எடுத்து சொல்லலாம்
இந்த 4 பேரும் பிராமணர்கள் அல்ல, அதே நேரம் தங்கள் இல்லத்திலும் தாங்கள் இந்துமத கடமையிலும் பிராமணரை அழைக்கும் இந்துக்கள்
அதை சொல்லி வாதிடலாம், இது ஆகம விதி என சொல்லி வாதிடலாம்
மாறாக இவர்கள் 4 பேரும் மிக அமைதிகாத்ததுதான் மாபெரும் அதிர்ச்சி கலந்த சோகம்
இதில் நாகேந்திரனும் வானதியும் தொழிலதிபர்கள் சில விஷயங்களுக்காக அமைதியாகலாம், சரஸ்வதி பற்றி எமக்கு தெரியாது ஒருவேளை ஈரோட்டு பாசம் இருக்கலாம்
ஆனால் எம்.ஆர் காந்தியின் அமைதிதான் மிகபெரிய அதிர்ச்சி, "நீங்களுமா காந்தி அய்யா" என மனம் நொந்த கேள்வி மட்டும் எழுகின்றது
இந்த 4 பேரும் தங்கள் பதவியினை ராஜினாமா செய்துவிடல் ஒன்றுதான் பாஜக இங்கு வளர ஒரே வழி, அதை உடனே செய்யட்டும்.
No comments:
Post a Comment