மன்னன் அம்பரீஷன் பெருமாளின் பரம பக்தன்.
ஒரு ஏகாதசி விரதத்தன்று, துர்வாசரிடம் அம்பரீஷன் அபச்சாரப்படுகிறான்.
மன்னனே, என்னை ஏகாதசி விரதத்தில் அவமதித்ததால் நான் உன்னை சபிக்கிறேன் என்றார் துர்வாசர்.
மன்னன் வணங்கி நிற்க, கண்ணன் இடைபுகுந்தான்.
துர்வாசரே! அம்பரீஷன் எனது பக்தன்! நேற்று எனக்காக விரதமும் இருந்தவன்! அவனை மன்னித்து விடும். அவனை சபிக்காதீர்!
திருமாலே! இத்தனைக் கரிசனம் உமக்கு உண்டென்றால், அந்த சாபங்களை அவனுக்கு பதிலாக நீரே ஏற்றுக்கொள்ளும்! துர்வாசரே! இதுதான் உம் விருப்பமென்றால், அந்த சாபங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றான் கண்ணன்!
திருமாலே! நீ!
மீனாக
ஆமையாக
பன்றியாக
பல பிறவிகள் எடுக்கக் கடவது!!
சாபங்களை ஏற்றான் பெருமான்! நம் பெருமான்!!
*வேதங்களை மீட்க மச்சமாக அவதரித்தான்!*
*பாற்கடலை கடைவதற்கு மந்திரகிரியே மத்தாக, அது அமிழும் நேரம் தானே ஆமையாக அவதரித்து மலையைத் தாங்கினான்!*
*பிரளய நீரினில் அழுந்திக் கிடந்த பூமியை மீட்க வராஹனாய் அவதரித்தான்!*
தன் பக்தனையும் காத்தான்!
முனிவரின் சாபங்களையும் காத்தான்!!
No comments:
Post a Comment