Wednesday, August 18, 2021

இடைக்கால நிவாரணங்களை பெறுவதுமே சாத்தியம்.

 #அர்ச்சகர்_பிரச்சனையை #திராவிடம் வாழ்வும் விடாமல், சாகவும் விடாமல்தான் பிடிக்கும். திராவிடம் இதை எந்த லாஜிக்கல் முடிவுக்கும் விடாது.

இடைசாதிகளிடம் அவ்வபொழுது பிராமணர்களை இரண்டு குத்து விட்டு காட்டுவதற்கு பயன்படுத்தும். இது ஒரு பலம் காட்டும் இடம். இந்துக்கள் கவனத்தினை திசைத் திருப்ப ஒரு கருவி. பொதுமக்கள் இதை ஒரு எண்டெர்டெய்ண்மெண்டாக பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அடிச்சி காட்டறான் பார்ரா ரேஞ்சில் இருக்கின்றார்கள்.
அரசியல் அதிகாரத்தில் இந்து தரப்பு வலுவாவதும், சாதிக்க கற்றுக் கொள்வதும், கோர்ட் ப்ரோசிஜர் வழியே இடைக்கால நிவாரணங்களை பெறுவதுமே சாத்தியம்.
இதை தெரிந்துதான் தமிழக பாஜக திராவிடம் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடாமல் இருக்கனும் என்ற புதிய அப்ரோச் எடுக்கின்றது. தமிழகத்தில் பிஜேபி இந்துக் கட்சி அல்ல, பிராமணர் கட்சி என திராவிடம் காட்ட நினைக்கின்றது என புரிந்து கொள்வதால் அப்ரோச் வேறு எடுக்கின்றது.
திராவிடத்துக்கு தன்னை தவிர எல்லாரையும் குறிப்பிட்ட ஜாதிக் கட்சியாக்கி மற்றக் கட்சிகளை தனக்கு அடிமையாக்க தெரியும். தமிழகத்தில் புதிதாக வந்த சிறுத்தைகள், பாமக, புதிய தமிழகம் தொடங்கி எல்லா கட்சியையும் அதே முறையில்தான் காலி செய்தது. அதே போல தேசியக் கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இரண்டையும் லாடம் கட்டி, கடிவாளம் போட்டு தொட்டிலில் கட்டவும் செய்து விட்டது. விஜய்காந்த், வைகோ போல போட்டிக்கு வந்த திராவிடர்களும் முடக்கப்பட்டார்கள்.
அண்ணாமலை , முருகன் வழியே பிஜேபி இளைய தலைமுறைக்கான கட்சி, அனைவருக்குமான கட்சி என நகருகையில் ஏற்கனவே திராவிடம் உருவாக்கி வைத்துள்ள பிராமணக் கட்சி என்ற லேபிளில் பிஜேபியை அடக்க நினைக்கின்றது. தமிழக மக்களுக்கு ஒரு ஹீரோயின் தங்கை கேரக்டரில் நடித்தால் அப்புறம் ஹீரோயினாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், அவ்வளவு சென்சிட்டிவ். அது போல இதுதான் இந்த கட்சி என முடிவெடுத்து விட்டால் அப்புறம் சொன்னாலும் விளங்காது. அது தெரிந்துதான் திராவிடம் பிராமணர்களுக்கான கட்சி லேபிளில் தமிழக பாஜகவை அடக்க அர்ச்சகர் பிரச்சனையை எடுக்கின்றது. இது வரை தமிழக பாஜக இதை நேர்த்தியாகவே கையாள்கின்றது...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...