டில்லியில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டில்லியில் வரும் பிப்., மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு திட்டங்களை, ஆளும் ஆம்ஆத்மி அரசு அறிவித்து வருகிறது. டில்லியில் பஸ், மெட்ரோ ரயில்களில் பெண்களுக்கு இலவச பயணம் என கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

மேலும், 200 யூனிட் மின்சாரம் மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு இலவச மின்சாரம் என, கடந்த ஆக., மாதம் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். 201 முதல் 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 50 சதவீத மானியத்துடன் பாதி கட்டணம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என நேற்று(செப்.,25) அறிவித்தார்.
இதுகுறித்து அவரது அறிக்கை: வாடகை வீட்டில் குடியிருப்போர், ரூ.3 ஆயிரம் செலுத்தி, பிரிபெய்டு மீட்டர்களை பொருத்த வேண்டும். இதனை பொருத்த வாடகை ஒப்பந்தம், வாடகை ரசீதை சமர்ப்பிக்க வேண்டும். மீட்டர் பொருத்தப்பட்ட பின், முதல் 200 யூனிட்கள் இலவச மின்சாரம் வழங்கப்படும். 200 யூனிட்டுக்கு மேல் வரும் மின்சாரத்திற்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். இதனால் டில்லி அரசுக்கு, ஆண்டுக்கு, ரூ.1800 - ரூ.2000 கோடி இழப்பு ஏற்படும்.
No comments:
Post a Comment