Wednesday, September 25, 2019

தற்பொழுது திரையிடப்படும் சினிமாவின் அனைத்து சுவாரசியங்களையும் இரண்டு கதைகளும் உள்ளடக்கியுள்ளன .

“மலரும் நினைவுகள்” கருணாநிதியின் காம படைப்புகள்! – திரைப்படங்களாக உதயநிதி எடுக்கலாம்; கதாநாயனாகவும் நடிக்கலாம்!!
கருணாநிதி தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றி, தமிழை அவர்தான் வாழ வைத்து வருகிறார் என்றும், அதனால்தான் அவரை “முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் என்று அழைக்கிறோம்” என்கின்றனர் உடன்பிறப்புகள்.
கருணாநிதியின் எழுது கோலால் வர்ணம் தீட்டப்பட்ட ஒரு சில காவியங்களும், அவை பற்றிய சிறு குறிப்புகளும் இங்கே தரப்படுகிறது. ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நாங்கள் ஒரு சில சோறுகளை தந்துள்ளோம்.
கருணாநிதியின் மூளையில் உதயமான முதல் கதை “வான்கோழி”.
இந்த கதையில், முதலாளிக்கு ஆண்மை இல்லாததால், வேலைக்காரன் மூலம் முதலாளியம்மாவிற்கு குழந்தை பிறப்பதாக கதை. அதுவும் முதலாளியின் சம்மதத்தோடு, இருட்டில் நடக்கும் சமாசாரம்.
குழந்தை பிறக்கும்பொழுது, விஷயம் தெரியவந்த முதலாளியம்மா உயிரை மாய்த்துகொள்வது முடிவு.
கருணாநிதியின் மற்றொரு முக்கிய படைப்பு, “வாழ முடியாதவர்கள்”.
மனைவியை இழந்த ஒரு போலீஸ்காரன். வறுமை தவழ்ந்து விளையாடும் சின்னஞ்சிறு வீடு அவன் குடியிருப்பு. மாண்டுபோன அவன் மனைவி சும்மா போகக்கூடாதென்று ஒரு மகளை விட்டுப் போயிருந்தாள்.
கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள், தளதளவென்று வளர்ந்து பளபளவென்று மெருகேறிக் கவர்ச்சிப் பாவையாக விளங்குகிறாள்.
சின்னஞ்சிறிய வீட்டில் தன்னந்தனியாக இருக்கும் அவள், திருமணத்திற்காகக் காத்துக் கிடக்கிறாள். இரவுகள் வந்துபோகின்றன.
திருமணம் வரவில்லை.
ஒவ்வொர் இரவிலும், தந்தையும் மகளும் மட்டுமே அந்த வீட்டில் துயில்கின்றனர்.
அவளோ கல்யாணமாகாதவள்; அப்பனோ மனைவியை இழந்தவன்.
மழைக் கால இரவில் தந்தை, மகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்.
இந்த கதைகளை அப்போதைய தனது நண்பன் கவிஞர் கண்ணதாசனிடம் கருணாநிதி படிக்க கொடுத்துள்ளார். கதைகளைப் படித்த கண்ணதாசன் காறி துப்பியுள்ளார்.
இது கூடுதல் தகவல்.
“மறக்க முடியுமா” என்ற கதையை கருணாநிதி படமாக எடுத்துள்ளார். அந்த படத்தில், சொந்த அக்காவையே தம்பி, பாலியல் இச்சைக்கு ஆட்படுத்துகிறான்…
இதுபோல எண்ணற்ற பொக்கிஷங்களை திமுக உடன்பிறப்புகளுக்காக கருணாநிதி வாரி வழங்கி சென்றுள்ளார்.
அவைகளை உதயநிதி, திரைப்படங்களாக தயாரித்து தனது தாத்தாவின் காவியங்களை, உடன்பிறப்புகளிடம் கொண்டு சேர்க்கலாம். இது அவரது கடமையும் கூட.
இதன் மூலம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் கருணாநிதியின் கதை, வசனத்தில் நடிக்கும் வாய்ப்பும் உதயநிதிக்கு கிடைக்கும். சரி, உதயநிதி ஏன் இதுவரை கருணாநிதி கதையில் நடிக்கவில்லை?
ஒட்டன்சத்திரத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போத அவர் கூறியதாவது:-
1967-ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியை பிடிப்பதற்கு காரணம் அண்ணாவின் உழைப்பும், எம்.ஜி.ஆருக்கு மக்களிடையே இருந்த எழுச்சியும்தான். ஆனால் அந்த அண்ணாவின் மறைவுக்கு பின் தி.மு.க.வை தனது குடும்பத்தின் அடிமை கட்சியாக மாற்றிவிட்டார் கருணாநிதி. தி.மு.க.வினர், அவரது குடும்பத்துக்கு உழைக்கும் கொத்தடிமைகளாகி விட்டனர்.
கருணாநிதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் முடிசூட்டிக்கொண்டார். அவருக்கும்பின் உதயநிதி ஸ்டாலின். உதயநிதிக்குப்பின் அவரது மகன் இன்பநிதி. இப்படி ஒரே குடும்பத்தால் சுரண்டப்பட்டு, தி.மு.க. பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. தி.மு.க. என்பது, திருக்குவளை முன்னேற்ற கழகம் ஆகி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...