Wednesday, September 25, 2019

ஒரு நாத்திகருக்கும் ஆன்மிகவாதிக்கும் நடந்த சுவையான உரையாடல்:

நாத்திகர்: கடவுள் யார்? சரியான விளக்கத்தைக் கொடுங்கள்.
ஆன்மீகவாதி: "ஆதியுமில்லா அந்தமுமில்லா அருட்பெருஞ்ஜோதி தான் கடவுள் "
நாத்திகர்: இதுதான் பிரச்சினை. அதெப்படி துவக்கமுமில்லாத முடிவுமில்லாத என்ற ஒன்று எப்படி இருக்க முடியும். திட்டமிட்டு உறுதியாக இவன்தான் கடவுள் என்றுகூடச் சொல்லமுடியவில்லை. ஆனால் அறிவியல் திட்டவட்டமாக ஒவ்வொரு விஷயத்தையும் வரையறுத்துச் சொல்கிறது. அதனால் தான் அறிவியலை நம்புகிறேன். உங்கள் விளக்கங்கள் கடவுளை நம்பத்தகுந்ததாக இல்லை. கடவுள் பற்றிய அடிப்படைக் கேள்வியிலேயே உங்களால் கடவுள் பற்றி திட்டவட்டமாக சொல்லமுடியவில்லை. அதெப்படி தொடக்கமும் முடிவுமில்லா ஒன்று இருக்க முடியும். அறிவியலைப் பாருங்கள். கதிரவனுக்கும் பூமிக்குமான தொலைவைத் துல்லியமாக சொல்கிறது. உறுதியாக வரையறுத்துச் சொல்ல முடியாத ஒரு விளக்கத்தையல்லவா நீங்கள் தருகிறீர்கள்.
ஆன்மீகவாதி : அப்படியா நல்லது. அறிவியலுக்கான அடிப்படை என்ன?
நாத்திகர்: கணிதம்
ஆன்மீகவாதி: கணிதத்திற்கான அடிப்படை என்ன?
நாத்திகர் : எண்கள்
ஆன்மீகவாதி : நல்லது. ஒரேயொரு கேள்விக்கான பதிலை மட்டும் சொல்லுங்கள் போதும். ஆகப்பெரிய எண் எது என்று சொல்லுங்கள்.
நாத்திகர் : (திகைக்கிறார்).
[ ஆன்மீகவாதியோ அவர் எந்த எண்ணைச் சொன்னாலும் கூடுதலாக ஒன்றைப் போட்டு சொல்கிறார். பகுத்தறிவுவாதியால் ஆகப்பெரிய எண்ணைச் சொல்லமுடியவில்லை.]
ஆன்மீகவாதி: விடுங்கள் . ஆகச் சிறிய எண்ணையாவது திட்டமிட்டு, வரையறுத்து சொல்லுங்கள்.
நாத்திகர் மீண்டும் பதில் சொல்ல முடியாமல் திணறுகிறார். இறுதியாக வரையறுத்துச் சொல்வதாக நினைத்துக் கொண்டு " ∞ "(infinity) என்று சொல்கிறார்.
ஆன்மீகவாதி: அது குறியீடுதானேயப்பா. அது எண் இல்லையே என்கிறார். ஏனப்பா, நாங்கள் கல்லை குறியீட்டாக்கி அதற்கு உருவம் கொடுத்து பெயர் கொடுத்தால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்கிறாய். இப்போது infinity க்குக் கொடுத்த குறியீட்டை எப்படி எண் என்று சொல்ல முடியும். infinity யை தமிழில் எப்படி சொல்வீர்கள் என்கிறார்.
நாத்திகர் : முடிவிலி என்போம்.
ஆன்மிகவாதி : பெரிய எண்ணுக்கும் சின்ன எண்ணுக்கும் முடிவிலிதானே குறியீடு.
நாத்திகர்: ஆமாம்.
ஆன்மீகவாதி: அறிவியல் திட்டவட்டமாக, வரையறுத்து சொல்கிறது என்றாயே. எண்களின் மிகப்பெரிய எண்ணையோ சிறிய எண்ணையோ ஏன் சொல்ல முடியவில்லை? அடிப்படையிலேயே வரையறுத்து இந்த எண் தான் இறுதி எண் என்று ஏன் சொல்ல முடியவில்லை என்கிறார். நான், ஆதியுமில்லா அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதி என்று சொல்வது சரிதானே என்கிறார்.
*ஓம் நமோ நாராயணாய*
இன்றைய நாள் இனியதாக, ஆனந்தமாக, ஆரோக்யமாக, அமைதியாயக அமைய வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...