Friday, September 27, 2019

முட்டைக்கு பின் இதைச் சாப்பிட்டா சங்கு தான்... மறந்தும் சாப்பிட்டுவிடாதீங்க மக்களே...!

முட்டையில் புரதச் சத்து அதிகம். ஆம்லேட், ஆப்பாயில், செட், புல்சை, கலக்கி, பிரட் ஆம்ளேட் என முட்டையை பல வடிவிலும் உணவாகக் கொள்கிறோம். முட்டை அந்த அளவுக்கு உடலுக்கு ஆரோக்கியமானதுதான். ஆனால் அதேநேரம் முட்டையை சாப்பிட்ட பின் சில பொருள்களை சாப்பிட்டால் உயிருக்கே வேட்டு வைத்துவிடும்.
பொதுவாக சாப்பிட்ட பின் டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. முட்டை சாப்பிட்ட பின்னர் டீ குடித்தால் சிக்கலே...தேயிலையில் இருக்கும் டானிக் அமிலம் முட்டையில் இருக்கும் புரோட்டீனுடன் சேர்ந்து நம் உடலுக்கு ஆபத்தினை உருவாக்கும். இதனால் குடல் இயக்கம் பாதிக்கப்படுவதுடன், உடலில் தேங்கும் நச்சுகளும் அதிகரிக்கும்.
இதேபோல் முட்டை சாப்பிட்ட பின்னர் வாத்து இறைச்சியும் சாப்பிடக் கூடாது. இதற்கு குளிர்ச்சி, இனிப்பு குணங்கள் உள்ளது. இவை செரிமான உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு வயிற்றுப் போக்கையும் உருவாக்கும்.
சிலர் காலையில் முட்டையும், சோயாபாலும் சாப்பிடுவார்கள். முட்டையில் இருக்கும் புரதம், சோயாபீன் பாலில் இருக்கும் டிரிப்சினுடன் இணைகையில் சிதைவு பிரச்னை ஏற்படும். நம் உடல் புரோட்டீனை உறிஞ்சுவதும் தடுக்கப்படும். ஆக இனி முட்டை சாப்பிடும் போது இதையெல்லாம் தவிர்த்துவிட்டு எச்சரிக்கையாக இருங்க நண்பர்களே...
Image may contain: food

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...