Friday, August 20, 2021

அந்தணர் பற்றி கம்பர் எச்சரிக்கை.

 ராம பிரானுக்கு முடி சூட்ட தசரதன் ஏற்பாடு செய்கிறார். ஊர்ப் பெரியோர்கள் மற்றும் மந்திரிசபை, குல குரு ஆகிய மக்களை ஜன நாயக முறையில் கருத்துக் கேட்டு அப்படி முடிவு செய்கிறார். எல்லோரும் Yes, Yes ‘யெஸ் , யெஸ்‘ என்று தலையை அசைத்துவிட்டனர். அப்போது தசரத மா மன்னன் குல குரு வசிஷ்டருக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறான். ராம பிரானைச் சந்தித்துக் கொஞ்சம் அரசியல் விஷயங்களைக் கதைத்து விட்டு வாருங்கள். எது, எது தர்மம் என்று கற்பியுங்கள் , ‘ப்ளீஸ்‘ Please என்கிறான்.

வசிட்டனும் ராமனைச் சந்திக்கிறார். அவருக்குச் சொல்கிறார்.
“அன்பரே அந்தணர் /பார்ப்பான் விஷயத்தில் ஜாக்கிரதையாக இரும்.
அவர்கள் நினைத்தால் அது அப்படியே நடக்கும்
‘ஆவதும் ஐயராலே ? அழிவதும் ஐயராலே ! கபர்தார், உஷார், ஜாக்கிரதை!’ என்கிறார்.
இதோ கம்பன் வாய் மொழி மூலம் அறிவோம்.
ஆவதற்கும் அழிவதற்கும் அவர்
ஏவ ,நிற்கும் விதியுமென்றால், இனி
ஆவது எப்பொருள் இம்மையும் அம்மையும்
தேவரைப் பாரா வுந்துணை சீர்த்ததே
மந்தரை சூழ்ச்சிப் படலம், அயோத்யா காண்டம், கம்ப ராமாயணம்
பொருள்
ஒருவரை உயர்த்துவதற்கும் தாழ்த்துவதற்கும் விதி கூட அந்தணப் பெருமக்களின்
கட்டளைக்குக் காத்திருக்கும் என்றால் இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் பூலோக
தேவர்களாக விளங்கும் பார்ப்பனர்களை போற்றுவது சிறப்புடையது ஆகும் .
இதனைவிட மேலான பொருள் வேறு எதுவும் இல்லை “.
(இங்கு அந்தணர் என்பதற்கு ஒழுக்கம் உடைய அறிஞர்கள் என்பது பொருள். ‘வெளுத்தது எல்லாம் பால் அல்ல’. ‘மின்னுவதெல்லாம் பொன் அல்ல’; பூணுல் போட்ட எல்லோரும் பார்ப்பனர் அல்ல. மனம், மொழி, மெய் என்ற மூன்றிலும் சுத்தம் உடைய- திரி கரண சுத்தி உடைய — பெரியோர் அந்தணர். அந்தக்காலத்தில் அப்படி இருந்தனர் நூற்றுக்கு 99 சதம் பிராமணர்கள்!)
இதில் அந்தணர் என்ற சொல்லே இல்லையே என்று சிலர் நினைக்கலாம்.
அதற்காக முன்னிரு பாடல்களையும் தருகிறேன் .
அந்தணாளர் முனியவும் , ஆங்கவர்
சிந்தையால் அருள் செய்யவும் , தேவரில்
நொந்துளாரையும் , நொய்து உயர்ந்தா ரையும் ,
மைந்த! எண்ண வரம்பும் உண்டு ஆங்கொலோ
பொருள்
டேய் சின்னப்பையா (ராமா ) கேள் !
ஐயர்கள் நினைத்த மாத்திரத்தில் சிலர் பதவி இழந்து அதல பாதாளத்தில் விழுந்தனர் ; ஐயர்கள் நினைத்த அளவில் சிலர் ‘பிரமோஷன்’ Promotion பெற்று பெரிய பதவியை அடைந்தார்கள் . இந்த விஷயத்தைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேவலோகத்திலேயே கணக்கற்றவர்கள் இருக்கிறார்கள்!
(இந்த இடத்தில் உரைகாரர்கள் மூன்று எடுத்துக்காட்டுகளை இயம்புகின்றனர்: தேவர்களை விட அந்தணர்கள் உயர்ந்தோர் ஆவர். அருளிக்கூறினும் வெகுண்டு கூறினும் அது அப்படியே நடந்து விடும். அவர்கள் ஆற்றல் மிக்க நிறைமொழி (மந்திரம்) மாந்தர்கள். இந்திர பதவியில் இருந்த நகுஷன் அகத்தியன் சாபத்தினால் பூமியில் மலைப் பாம்பாக விழுந்தான். துருவாசருக்கு ஒரு தேவ லோகப் பெண் ஒரு மாலை அளித்தாள் . அதை அந்தப் பக்கம் ஐராவத யானை மேல் பவனி வந்த இந்திரன் மீது துர்வாசர் எறிந்தார். அவன் அதை வாங்கி யானையின் தலை மீது வைத்தான். அது மலரிலுள்ள மது வாசனையால் அதைத் தூக்கி கீழே எறிந்தது ; கோபத்தின் சின்னமான துருவாசர் , இந்திரா! பிடி சாபம்! இந்த மாலை கீழே விழுந்தது போல நீயும் உன் பதவியிலிருந்து விழ க்கடவாய் ! என்றார் . இந்திரன் பதவியும் போச்சு. இன்னொரு எடுத்துக்காட்டு ; பிருகு- விஷ்ணு மோதல் ஆகும். பிருகு முனிவர் மும்மூர்த்திகளையும் சோதிக்க ஓவ் வொருவரையாக இன்டர்வியூ interview செய்யக் கிளம்பினார் . ஒவ்வொருவரும் அவரைக் கவனிக்காததால் ஒவ்வொரு சாபம் பெற்றனர். விஷ்ணு எப்போதும் அறிதுயிலில் இருப்பவர். தன்னைக் கவனிக்காமல் தூங்கிக் கொண்டு இருக்கிறார் என்று நினைத்து அவருக்கு சாபம் இட்டார். நீவிர் பூமியில் அவ்வப்போது மனிதனாக அவதாரம் எடுத்து யான் பெற்ற துன்பம் பெறுக என்று சபித்தார்)
அந்தணர் என்போர் துறவியரா அல்லது பார்ப்பனரா என்ற கேள்வி சிலருக்கு எழும். ‘நான் மறை அந்தணர்’ என்று சங்க இலக்கியமே பல இடங்களில் பேசுவதால் மறை ஓதும் அந்தணர் பார்ப்பனர் என்பதில் சந்தேகமில்லை. ‘நான்மறை அந்தணர்’ என்ற சிலப்பதிகார , மணிமேகலை வரிகளாலும், ‘நான்மறை முதல்வர்’ என்ற புறநானுற்றுச் சொற்களின் உரைகளாலும் வேதம் ஓதும் அந்தணர்களேதான் அவர்கள் என்பதில் ஐயம் வராது
இதோ கடைசி பாடல்
அனையர் ஆதலின் , ஐய! இவ்வெய்ய தீ
வினையின் நீங்கிய மேலவர் தாளிணை
புனையும் சென்னியை ஆய்ப்புகழ்ந்து ஏத்துதி ;
இனிய கூறி நின்று ஏயின செய்தியால்
அந்தணர்கள் சொன்னபடி நடந்தே தீரும் என்பதால் , கொடிய பாபத்தினின்று
நீங்கிய அந்த அந்தணர்களின் திருவடிகளைப்ப போற்றிப் புகழ் ந்து துதிப்பாயாக . மேலும் அவர்கள் ஏவிய பணிகளையும் மனமுவந்து செய்வாயாக.
ஆக அந்தணரைப் பணிவதோடு இல்லாமல் அவர்கள் சொன்னதையும் செய்க என்பது வசிட்டன் வாய் மூலம் கம்பன் தரும் கட்டளை.
இதை சிலப்பதிகாரத்தில் காணலாம். வெற்றிக் களிப்பில் மிதந்த செங்குட்டுவனைத் தட்டி எழுப்புகிறான் மாடல மறையோன் என்னும் பார்ப்பனன். “ஏய் ! போதும் உன் போர்கள். இனி போகும் வழிக்குப் புண்ணியம் சேர். யாக யக்ஞங்களைச் செய் ! என்று சொன்னவுடன் அப்படியே செய்கிறான் சேரன் செங்குட்டுவன். அது மட்டுமின்றி அந்தப் பார்ப்பனனுக்கு எடைக்கு எடை தங்கமும் பரிசாகத் தருகிறான்.
May be an image of 1 person and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...