Wednesday, August 18, 2021

#கோவில்_பூசாரி...!

  மாதம் ₹2000 ரூபாய்க்கு கோவிலில் பூஜாரியாக இருக்கும் நபர்களையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா..? அவர்களது குழந்தைகள் முற்பட்ட வகுப்பினராம், அதாவது வாழ்வில் அனைத்து சலுகைகளும் கிடைக்கப்பெற்றவர்களாம், அதனால் அரசாங்க பள்ளியில் அனைவருக்கும் கிடைக்கும் சலுகைகள் கூட அவர்களுக்கு கிடைக்காது என்பதாவது தெரியுமா?

அந்த 2000ம் ரூபாய் சம்பளத்திற்கு விடிகாலை 4 மணிக்கு எழுந்து குளித்து, அவருக்காக அந்த வீட்டம்மாவும் எழுந்து சாமி பூஜைக்கு வேண்டிய பிரசாதங்களைச் செய்துகொடுத்து (அப்படியெனில் அந்த அம்மா அதற்கு முன்பே எழுந்து குளித்து முடித்து சமைத்திருக்க வேண்டும்), பின்னர் 6 மணிக்குள் கோவிலைத் திறந்து அபிஷேகம் முடித்து ஆரத்தி காட்டி பிரசாதத்தினை அனைவருக்கும் கொடுத்து, பின்னர் 10 மணிக்கு மேல் ஃப்ரீ டைம் கிடைக்க, அப்போதுதான் வீட்டில் தனக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களுக்கு உடுக்க உடையில்லை, பள்ளிக்குச் செல்ல நல்ல புத்தகங்கள் இல்லை என்பதே அந்த பூஜாரிக்கு உறைக்கும், அதற்கு பிறகு நல்ல நாள் என்றால் வேறு ஏதேனும் பூஜைகள் செய்து பணம் பெறுவர்.
சரி வேறு வேலைக்கு போகலாம் எனில், அவர்களால் ஒரு பொழுது கூட சுவாமிக்கு பூஜை செய்யாமல் இருக்க முடியாது, அது மனதளவில் ஏதோ குற்றவுணர்வாக படிந்துவிடும். (நாம் தினசரி வீட்டில் பூஜை செய்து வழிபட்டுவிட்டு ஒரு நாள் வேலை அவசரத்தின் காரணமாக பூஜை செய்யாமல் வீட்டினை விட்டு கிளம்பினால் ஒரு மன சங்கடம் தொடருமே நம்மை அது போல), இதனால் இவர்களால் வேறு வேலையை நினைத்துக்கூட பார்க்க முடியாது, மற்றபடி இவர்கள் உழைப்பிற்குத் தயங்கியவர்கள் அல்ல, ஏனெனில் விடியற்காலை 4 மணிக்கு ஒருவனால் எழ முடிகிறதென்றால் அவன் உழைப்பிற்குத் தயங்கும் சோம்பேறியாக இருக்க முடியாது.
யாராவது ஒருவர் கூறுங்கள்... இந்த ஏழை ஐயனால் உங்களுக்கு என்ன மரியாதைத் குறைவு நேர்ந்தது..!? இந்த ஏழை பிராமனனால் சாதிய ரீதியாக நீங்கள் ஒதுக்கப்பட்டுள்ளீர்களா..!?
இப்படியானவர்களைத்தான் அழிக்கத் துடிக்கிறது திமுக என்னும் ஆதிக்க வெறிபிடித்த ஜமீன்தாரிக் கூட்டம்...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...