Thursday, February 28, 2019

மதுரையில் இருந்து சென்னைக்கு அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயில் இன்று மதியம் இயக்கம்.

மதுரையில் இருந்து சென்னைக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெட்டிகளை கொண்ட அதிநவீன தேஜஸ் ரெயில் இன்று மதியம் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலை, அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கன்னியாகுமரி வருகை தரும் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் மதியம் 2 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

மதுரையில் இருந்து சென்னைக்கு அதிநவீன சொகுசு தேஜஸ் ரெயில் இன்று மதியம் இயக்கம்

இதற்காக மதுரை ரெயில் நிலையத்தின் 1-வது பிளாட்பாரத்தில் மேடை மற்றும் காணொலி திரை அமைக்கும் பணிகள் நடந்தன. இதற்கான பணிகளை மதுரை ரெயில் நிலையத்தின் இயக்குனர் வீரேந்திரகுமார் மற்றும் கோட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ரெயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் முகைதீன் தலைமையிலான போலீசார் செய்து வருகின்றனர்.

தேஜஸ் ரெயிலுக்குள் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா.

தேஜஸ் ரெயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் கண்காணிப்பு கேமரா, தீயணைப்புக்கருவிகள், தீ தடுப்பு அலாரம், தானாக மூடித்திறக்கும் கதவுகள், சொகுசு இருக்கைகள், நவீன கழிப்பறைகள், இருக்கையில் எல்.இ.டி. திரை வசதி, காலை உணவு, இரவு உணவு, டீ, பிஸ்கெட் ஆகிய வசதிகள் உள்ளன.

இந்த ரெயில் மதுரையில் இருந்து சென்னை செல்லும் வழியில் கொடைரோடு மற்றும் திருச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும். மதுரை கோட்ட டிக்கெட் பரிசோதகர்களுக்கு மதுரையில் இருந்து சென்னை வரை டிக்கெட் பரிசோதனை செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் மாலை 3 மணிக்கு தேஜஸ் ரெயில் இயக்கப்படும். ஆனால், இன்று ஒரு நாள் மட்டும் மதியம் 2 மணிக்கு புறப்படும். வியாழக்கிழமை தவிர பிறநாட்களில் தேஜஸ் ரெயில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்படுகிறது.

மதுரையில் இருந்து சென்னைக்கு ‘எக்சிகியூடிவ்’ வகுப்புக்கு ரூ.2,295, சேர்கார் இருக்கை வகுப்புக்கு ரூ.1,195 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும். மதுரையில் இருந்து திருச்சிக்கு முறையே ரூ.1,080 மற்றும் ரூ.535 கட்டணமாகவும், கொடைரோட்டுக்கு ரூ.650 மற்றும் ரூ.325 கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து திருச்சிக்கு எக்சிகியூடிவ் வகுப்புக்கு ரூ.1,655 மற்றும் சேர்கார் இருக்கை வகுப்புக்கு ரூ.830 கட்டணமாகவும், கொடைரோட்டுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.980 கட்டணமாகவும், மதுரைக்கு ரூ.2,110 மற்றும் ரூ.1,035 கட்டணமாகவும் வசூலிக்கப்படும். இந்த கட்டணம் ஜி.எஸ்.டி. மற்றும் உணவுக்கும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. உணவு வழங்க வேண்டாம் என்றால் மதுரையில் இருந்து புறப்படும் ரெயிலுக்கு ரூ.1,940 மற்றும் ரூ.895 கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


அரைஞாண் கயிறு கட்டுவதற்கு பின் ஒளிந்துள்ள அறிவியல் உண்மை!!!!.

 பெண்கள் காலில் கொலுசு அணிவது, மெட்டி அணிவது போன்றவற்றிக்கு பின்பு எப்படி அறிவியல் ஒளிந்துள்ளதோ அதுபோல தான் ஆண்கள் அரைஞாண் கயிறு அணிவதற்கு பின்பும் அறிவியல் ஒளிந்துள்ளது.
 பொதுவாக பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு குடல் இறக்க நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ஹெரணியா என்று அழைப்பர். ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதன் மூலம் இந்த நோயை வராமல் தடுக்க முடியும்.
 உடல் எடை அதிகரிப்பதனால் ஆண்களுக்கு இந்த குடல் இறக்க நோய் ஏற்படும் என்று கூறப்படுகிறது. நம் முன்னோர்கள் காலத்திலும் இந்த நோய் இருந்திருக்க கூடும். அதனாலேயே அரைஞாண் கயிறு கட்டும் படி அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 ஆரம்பகாலத்தில் கருப்பு நிறத்திலேயே அரைஞாண் கயிறு கட்டப்பட்டது. ஆனால் கால மாற்றம் மற்றும் அவரவர் வசதிக்கு ஏற்ப இப்போது வெள்ளி மற்றும் தங்கத்தாலும் அரைஞாண் கயிறு கட்டப்படுகிறது.
 ஞாண் என்றால் கயிறு என்று பொருள். உடம்பின் சரிபாதியை குறிக்கும் பகுதி இடுப்பு. அரை உடலை குறிக்கும் இடுப்பு பகுதியில் கட்டுவதால் இதற்க்கு அரைஞாண் கயிறு என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.
 நமது நவீன அறிவியலுக்கு எட்டியவரை அரைஞாண் கயிறு குடல் இறக்க நோயை தடுப்பதற்காகதான் கட்டப்படுகிறது என்றாலும் கூட அதையும் தாண்டி வேறு சில காரணங்களும் அதில் நிச்சயம் ஒளிந்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

விஜய் சேதுபதி, கார்த்தி, பிரபுதேவா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல துறையினருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு.

பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர்களுக்கு கலைமாமணி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சினிமாத் துறையில், 

2011  
நடிகர்கள் - ஆர்.ராஜசேகர், பி.ராஜீவ், 
நடிகை - குட்டி பத்மினி, 
நகைச்சுவை நடிகர் - பாண்டு, 
நடன இயக்குனர் - புலியூர் சரோஜா
பாடகி - சசி ரேகா

2012
நடிகர்கள் - என்.மகாலிங்கம், எஸ்.எஸ்.செண்பகமுத்து, 
நடிகைகள் - டி.ராஜஸ்ரீ, பி.ஆர்.வரலட்சுமி
கானா பாடல் கலைஞர் - உலகநாதன்
இயக்குனர் - சித்ரா லட்சுமணன்

2013
நடிகர், இயக்குனர் - சி.வி.சந்திரமோகன்
பாடகர் - ஆர்.கிருஷ்ணராஜ்
நடிகர் - பிரசன்னா,
நடிகை - நளினி
பழம்பெரும் நடிகைகள் - குமாரி காஞ்சனா தேவி, சாரதா
நடிகர்கள் - ஆர்.பாண்டியராஜன், டி.பி.கஜேந்திரன்
நாட்டுப்புறப் பாடற்கலைஞர் - வேல்முருகன்
நாட்டுப்புறப் பாடகி - பரவை முனியம்மா


2014
நடிகர்கள் - கார்த்தி, சரவணன், பொன்வண்ணன்
இயக்குனர் - சுரேஷ் கிருஷ்ணா
பாடகி - மாலதி
நடன இயக்குனர் - என்.ஏ.தாரா

2015
நடிகர் - பிரபுதேவா
இயக்குனர் - ஏ.என்.பவித்ரன்
இசையமைப்பாளர் - விஜய் ஆண்டனி
பாடலாசிரியர் - யுகபாரதி
ஒளிப்பதிவாளர் - ஆர்.ரத்தினவேலு
பாடகர் - கானா பாலா

2016
நடிகர்கள் - சசிகுமார், எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா, சூரி

2017
நடிகர்கள் - விஜய் சேதுபதி, சிங்கமுத்து,
நடிகை - பிரியா மணி
இயக்குனர் - ஹரி
இசையமைப்பாளர் - யுவன் சங்கர் ராஜா


2018
நடிகர்கள் - ஸ்ரீகாந்த், சந்தானம்
தயாரிப்பாளர் - ஏ.எம்.ரத்தினம்
ஒளிப்பதிவாளர் - ரவிவர்மன்
பாடகர் - உன்னி மேனன்

வருமான வரி உபரி தொகை திரும்ப பெற புது நிபந்தனை.

'வருமான வரி பிடித்தம் போக, மீதமுள்ள தொகையை திரும்ப பெறுவதற்கு, வங்கி கணக்குடன், 'பான்' எண் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது.
 வருமான வரி, உபரி தொகை, திரும்ப பெற, புது, நிபந்தனை
வருமான வரி செலுத்துவோரிடமிருந்து, சில நேரங்களில், அவர்களுக்கான வரித் தொகையை விட, கூடுதலான தொகை, முன் கூட்டியே பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை, வாடிக்யைாளர் அளித்த வங்கி கணக்கு விபரங்கள் அடிப்படையில், வங்கி யில் நேரடியாக செலுத்தப்பட்டும், காசோலை யாகவும் இதுவரை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பு:இன்று முதல், வருமான வரி பிடித்தம் போக, மீதமுள்ள தொகை, 'இ - சேவை' முறையில், நேரடியாக, சம்பந்தப் பட்டோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.எனவே, வருமான வரி செலுத்து வோர், தங்கள் வங்கிகணக்குடன், 'பான்' எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்; இல்லையெனில், பிடித்தம் போக, மீதமுள்ள தொகை திரும்ப செலுத்தப்படாது.

வரி செலுத்துபவர், தங்கள் கணக்கு உள்ள வங்கி  கிளைக்கு சென்று, வங்கி கணக்குடன், 'பான்' எண் இணைக்கப்பட்டுஉள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டது.வருமான வரி கணக்கு தாக்கல் செய்வ தற்கு, 'பான்' எண்ணுடன், ஆதார் எண்ணை, இம் மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என, வருமானவரி துறை சமீபத்தில் அறிவித்திருந்தது.

" சனிக்கிழமை "

ஏன் சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது? சனிக்கிழமைக்கும் பெருமாளுக்கும் என்ன தொடர்பு? இதற்கான விடை பிரம்ம வைவர்த்த புராணத்தில் உள்ளது.
சூரியனுக்கு சஞ்ஜனா, சாயா என இரண்டு மனைவிகள். சூரியனுக்கும் சஞ்ஜனாவுக்கும் பிறந்தவர்கள் யமதர்ம ராஜாவும், யமுனா நதியும். சாயாவுக்குப் பிறந்தவர் சனீஸ்வரன்.கண்ணபிரான் யமுனையில் உள்ள காளியனை அடக்கி யமுனா நதியைத் தூய்மையாக்கிய பின் அனைத்துத் தேவர்களும் யமுனையைப் போற்றத் தொடங்கினார்கள்.
கங்கையை விடப் புனிதமான நதியென அதைக் கொண்டாடினார்கள். அதைக் கண்ட சனீஸ்வரன் யமுனையிடம் வந்து, “சகோதரியே! உன்னை மங்களமானவள் என எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆனால் என்னை முடவன் என்றும் அமங்களமானவன் என்றும் கூறுகிறார்களே. உன்னைப் போல நானும் மங்களகரமானவனாக ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.அங்கே வந்த நாரதர், “சனீஸ்வரா! யமுனை கண்ணனின் திருவுள்ளத்தை மகிழ்வித்தாள். அதனால் மங்களகரமானவளாக இருக்கிறாள். நீயும் கண்ணனின் திருவுள்ளத்தை உகப்பித்தால் மங்களமாகி விடுவாய்!” என்று கூறினார்.
“அவனை உகப்பிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சனீஸ்வரன் கேட்டார்.அதற்கு நாரதர், “ஹோலிகா என்று இரணியனுக்கொரு சகோதரி இருந்தாள். அவளுக்குத் தீயால் சுடப்படாமல் இருக்கும் விசேஷத் தன்மை உண்டு. பிரகலாதனைப் பல விதமான தண்டனைகளுக்கு உள்ளாக்கியும் அவன் அவற்றால் பாதிக்கப்படாமல் இருப்பதைக் கண்ட இரணியன், ஹோலிகாவிடம் பிரகலாதனை ஒப்படைத்தான். பிரகலாதனைத் தீயில் தள்ளிய ஹோலிகா, தானும் தீக்குள் இறங்கி அவனை வெளிவரமுடியாதபடி அழுத்தினாள். அப்போது நரசிம்மப் பெருமாள் ஹோலிகாவின் பிடியிலிருந்து பிரகலாதனைக் காத்து வெளியே அழைத்து வந்தார்.
ஹோலிகாவிடமிருந்து நரசிம்மர் பிரகலாதனைக் காத்த நாளைத்தான் ஹோலிப் பண்டிகையாக மக்கள் கொண்டாடுகின்றார்கள். அந்த ஹோலிகா பெண் என்பதால் நரசிம்மர் அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டார். இப்போது அவள் தன் சகோதரனான இரணியனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கிறாள். திருமால் கண்ணனாக அவதாரம் செய்ததை அறிந்து கோகுலத்துக்கு அவள் வந்துவிட்டாள். நாளை இங்கே ஹோலிப் பண்டிகை. தன்னிடம் இருந்து பிரகலாதனை அவன் காத்த நாளான ஹோலிப் பண்டிகையன்று கண்ணனையும் அவன் தோழர்களையும் தீக்கு இரையாக்கிப் பழிதீர்க்கத் திட்டம் தீட்டியிருக்கிறாள். சனீஸ்வரா! நீ அந்த ஹோலிகாவைக் கண்டறிந்து அவளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டால், கண்ணனை மகிழ்விக்கலாம். அவன் அருளைப் பெறலாம். நீயும் மங்களகரமாக ஆகலாம்!” என்றார்.
அடுத்தநாள் ஹோலிப் பண்டிகை. கண்ணனும் அவன் தோழர்களும் பெரிய பெரிய கொள்ளிக் கட்டைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, நரசிம்மர் மற்றும் பிரகலாதனின் திருநாமங்களைப் பாடி, ஹோலிகாவின் கொடும்பாவியை எரித்து ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கொள்ளிக்கட்டைகளுக்குள் ஹோலிகா ஒளிந்திருந்தாள். தீ மூட்டப்பட்டவுடன் கண்ணனையும் அவன் தோழர்களையும் உள்ளே இழுத்துவிட வேண்டும் என்று எண்ணிய அவள் மேல் சனீஸ்வரன் தன் பார்வையைச் செலுத்தினான். சனிபார்வை பட்டவுடனேயே ஹோலிகா தன் சக்திகள் அனைத்தையும் இழந்து விட்டாள்.
கண்ணன் தீ மூட்டினான். அத்தீயில் ஹோலிகா எரிந்து சாம்பலானாள்.நாரதர் சனீச்வரனைக் கண்ணனிடம் அழைத்துச்சென்று நடந்தவற்றை விவரித்தார். அப்போது சனீஸ்வரனது தொண்டுக்கு மனமுகந்த கண்ணன், “சனீஸ்வரா! நீ இனிமேல் மங்களமானவனாகத் திகழ்வாய். உன் கிழமையான சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மிகவும் மங்களமானதாகக் கருதப்படும். அந்நாளின் திதியோ, நட்சத்திரமோ எதுவாக இருந்தாலும், சனிக்கிழமையின் விடியற்காலைப் பொழுது மங்களமானதாகவே கருதப்படும். 28-வது கலியுகத்தில் நான் திருமலையில் மலையப்பனாக வந்து தோன்றுவேன். சனிக்கிழமைகளில் என்னை வந்து தரிசிக்கும் அடியார்கள் வேண்டும் வரங்கள் அனைத்தையும் அருளுவேன்!” என்று வரமளித்தான்.
அதனால்தான் ‘சனி உஷஸ்’ எனப்படும் சனிக்கிழமையின் விடியற்காலை வேளை மங்களமானதாகவும், அனைத்து சனிக்கிழமைகளும் பெருமாளுக்கு
உகந்த_நாட்களாகவும் விளங்குகின்றன.
*நாராயண 🙏🌷💐🌸ஸர்வம் க்ருஷ்ணார்ப்பனம்*🌷💐🌸

காலையில் எழுந்தவுடன்...

படுக்கையில் இருந்து எழும் பொழுது (ஆண்கள் )வலது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
பெண்கள் இடது கால் பெருவிரலை பூமியில் அழுத்தி எழ வேண்டும்
விருப்பம் இருந்தால் பூமா தேவியை வணங்கலாம்
காலையில் எழுந்தவுடன் நம்முடைய இரு கைகளையும் உரசி கண்களில்
ஒற்றி கொள்ளவேண்டும் .
கண்களை பற்றி நீங்கள் அறிய படவேண்டிய ரகசியம் .
கண்கள் மனதின் வாசல் ,நம்முடைய எண்ணம் கண்கள் வழியாக வெளிப்படும் ,கண்கள் நெருப்பை தரும் சக்தியுடையவை
இதை தான் எரிச்சல் என்பார்கள் .
கண் திருஷ்டி என்பதும் இதுவே ,திருஷ்டி என்றால் தமிழில் பார்வை என்று பொருள் .
நாம் உறங்கும் பொழுது மனம் ,எண்ணம் அமைதியடையும் இது தான் இயற்கை அப்படி இருக்கும் பொழுது நம்முடைய நெருப்பு சக்தி கண்கள் வழியாக வெளிய செல்லாது .
உறங்கி எழுந்தவுடன் கைகளை உரசும் பொழுது சுடு உண்டாகி கண்களை தொடும்பொழுது அவை கண்களின் நெருப்பை கிரகித்து நமக்குளே வைக்கும்
இந்த கண் நெருப்பு நமக்கு மிகவும் முக்கியம் .
இந்த நெருப்பு செரிமான சக்தியை நமக்கு தரும் .
உணவுகளை பார்த்து கொண்டே சாப்பிடும் பொழுது கண்கள் செரிமானத்தை ஏற்பாடு செய்யும்
அதனால் புத்தகம் படித்து கொண்டு ,மற்ற காட்சிகள் பார்த்து கொண்டு உண்பதால் முறையான செரிமானம் வயிற்றில் நடக்காது .
மேலும் கண் நெருப்பை பற்றி மகாபாரத்தில் ஒரு நிகழ்ச்சி ..
துரியோதனன் போருக்கு போகும் முன் தன் தாய் காந்தாரியிடம் ஆசி பெற செல்கிறான்.
எப்பொழுதும் கண்களை கட்டி இருக்கும் அவள் துரியோதனிடம் ,நீ காலையில் குளித்தவுடன் ஆடையின்றி என்னை பார்க்க வா என்று சொல்கிறாள் .
அதன் படி அவன் வந்தவுடன் தாய் தன் கண் கட்டுகளை களைந்து அவனை பார்க்கிறாள் .
பிறகு போருக்கு செல்கிறான் துரியோதனன் ,பீமனிடம் சண்டை செய்யும் பொழுது பீமன் அடி துரியோதனின் மேல் விழும் பொழுது (டங்) ஒரு
பித்தளை குடத்தை அடித்தது போல் ஒரு சத்தம் வருகிறது .
குழப்பம் அடைந்த பீமன் கிருஷ்ணரிடம் எப்படி இவன் உடம்பில் இருந்து
இப்படி சத்தம் வருகிறது என்று கேள்வி கேட்கிறான் .
கிருஷ்ணர் சொல்கிறார் பல வருடம் கண்களை கட்டிஇருந்த அவனுடைய தாய் காந்தாரி கண்களை களைந்து அவனை பார்த்தது இருக்கிறாள் .
அவளுடைய கண்களில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு கவசமாக அவனை காவல் காக்கிறது என்றார் .
இதை சித்தர்கள் மாற்றாக நமக்கு சொல்லியது
உணவை உண்ணும் முன் கண்களில் ஒற்றி உண்ணவேண்டும் அல்லது
பார்த்து உண்ணவேண்டும் .
கோவில்களில் தரப்படும் பிரசாதம் நாம் கண்களில் ஒற்றிக்கொள்ள சொல்லபட்டது இதற்க்கு தான் .
வீட்டில் சாதத்தை பார்த்து சாப்பிடவேண்டும் என்பதும்
இதற்கு தான் .
அடுத்து
மல ஜலம் கழித்து முடித்தவுடன் உடனே குளித்து விடவேண்டும் .
காலை எழுந்தவுடன் குளிப்பதினால் உடலில் உள்ள சூடு சமப்படுகிறது .வயிற்றில் உள்ள வெப்பம் செரிமானத்தை தயார் செய்து விடுகிறது பசி எடுக்க வைக்கிறது .
பசிக்காமல் உண்பது ,நேரம் தவறி உண்பது ,அடிக்கடி இறைச்சி உணவு உண்பது ,துரித உணவுகளை உண்பது இவைகள் நமக்கு நோய்களை உண்டாகிறது
சித்தர்கள் சொல்வது எழுந்தவுடன் கடமைகளை செய்தவுடன் குளியல் .
குளிக்கும் பொழுது நாமங்கள் சொல்லுங்கள் பலிக்கும் .
ஆற்றில் நின்று மந்திரம் சொல்லும்பொழுது (தொப்புள் கொடி முழ்கும் படி நின்று ) பலிதம் ஆகும் என்று ரிஷிகளும் ,சித்தர்களும் சொல்லுவார்கள் ,
இன்று ஆறுகளை தேடி நாம் செல்ல நேரம் இல்லை .
சித்தர்கள் எழுதிய வைத்திய நூல்களில் உணவு முறைகளையும்
மனிதன் உணவுகளை உண்ணும் முறைகளையும் வகுத்து பிரித்து அழகாக நெரிப்படுத்தி இதன் படி நோய்களை மற்றும் மனதின் என்ன அலைகளை சரி செய்ய முடியும் என்று ஆராய்ந்து நமக்கு தந்து உள்ளார்கள் .
அதன் படி உணவு முறைகளான இவைகள் ..
நக்கி சாப்பிடுவது ,
சப்பி சாப்பிடுவது
கடித்து சாப்பிடுவது
உறிந்து சாப்பிடுவது
என்று 4 வகையாக பிரிக்கலாம் .
எந்த உணவை எப்படி சாப்பிடலாம் என்று முறை இருக்கிறது .
சித்தர்கள் சொல்வது
உணவுகளை எடுத்து கொள்ளும் முன் கை கால்கள் குளிர்ந்த நீரில் கழுவி முகத்தில் நாமம் இட்டு பிறகு கால்களை மடக்கி தரையில்
அமர வேண்டும் .பிறகு வலது கையில் நீர் ஊற்றி உறிந்து குடிக்க வேண்டும் இதை 3 முறை செய்ய வேண்டும் இப்படி செய்யும் பொழுது உங்களுக்கு பிடித்த இறைவன் பெயர் சொல்லுங்கள் .
கால்களை மடக்கி அமர்ந்தால் கல்லீரல்,மற்றும் செரிமான சுரப்பிகள் வேலை செய்யும்
சக்கரை நோய் வராது,
உள்ளங்கையில் நீர் உற்றி உறிந்தால் பல அற்புதம்கள் நம் உடம்பின் உள்ளே நடப்பதை உணரமுடியும்.
கைகளை பற்றி சில விவரம்கள் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் .
தாயின் வயிற்றில் உள்ள சிசு பிறந்தவுடன் முதன் முதலாக சப்பிசாப்பிடும் பால் வயிற்றில் பட்டவுடன் வயிறு தன்னுடைய செயலை தொடங்கிறது என்பதனை நாம் அறிவோம் .
பிறந்த குழந்தை கைகளை மூடிய படி இருக்கும் .இப்படி கைகளை வைத்து இருக்கும் பொழுது தான் ரேகைகள் உண்டாகிறது என்று கைரேகை சாஸ்திரம் சொல்கிறது .மேலும் வயிற்றின் உள் அமைப்பு தான் உள்ளங்கை
என்று சொல்கிறது .
இதை அகஸ்தியர் நாடியில் உரைக்கும் பொழுது
எந்த மருந்து எடுத்தாலும் உள்ளங்கையில் நீர் உற்றி சிவ சிவ என்று சொல்லி குடித்து விட்டு கிழக்கு முகம் நின்று மருந்து சாப்பிடவும்
என்று சொல்கிறார் .
மேலும் வயிறு நோய்களை தீர்க்கும் போகர் ,கோரக்கர் உள்ளங்கைகளில்
தான் தேன் உற்றி அதில் மருந்துகளை குழைத்து உன்ன சொல்லி உள்ளார்கள்
நம்முடைய உள் வயிற்றின் அமைப்பு தான் உள்ளங்கைகள் .கைகளை வைத்து
நோய்களை அறியலாம் .
நகம் ,விரலில் உள்ள மச்சம் ,அதில் உள்ள இடைவெளி போன்ற அடையளாம்கள் வைத்து நோய்களை அறியலாம் ..
மேலும் நம் உடம்பில் உள்ள காந்த அலைகளை வைத்து கைகளின் மூலம்
அடுத்தவர் உடம்பில் உள்ள நோய்களை ,கர்ம வினைகளை அகற்றலாம் இதுவே தீக்ஷை ,
இதை மகான்கள் ,சித்தர்கள் ,தூதுவர்கள் செய்தார்கள் ....
கைகளில் நீர் உற்றி உறிஞ்சுவதால் ஏற்படும் பலன் ....
நம் உடலில் தொண்டை தான் சகல நோய்களின் தடுப்பு சுவர் என்று சொல்லலாம் .
இதை மீறி எந்த கிருமியும் செல்ல முடியாது .நம்முடைய
உடல் சூடுகளில் தொண்டையில் உள்ள சுடு மிக மிக முக்கியமானது என்று சித்த வைத்திய நூல் சொல்கிறது
இந்த சுடு( ஜடாரக்னி ) தான் நமக்கு சம விகிதமாக செயல்படும் .இதற்க்கு ஈரம் தேவை .
(குளிர்ச்சி தேவை )
இதை சித்தர்கள் தலை கீழாக தொங்கும் லிங்கம் உடைய இடம் என்று சொல்வார்கள்
ஆம் லிங்கம் தலைகீழாக இருக்கும் (உள்நாக்கு ) நீலகண்டன் என்பது இவைகளை குறிப்பது இது தான் செயல்களில் தவறினால் சுடு அதிகமாகும் (காய்ச்சல் ). நாம் உணவு உண்ணும் பொழுது இடை இடைய நீர் அருந்தகூடாது.
தாகத்தை ஏற்படுத்தும் லிங்கம் ஈரமாக வைக்க உள்ளங்கையில் நீர் வைத்து உறிந்து குடிக்கும் பொழுது தொண்டை நணையும் பிறகு உண்பதால் நீர் வறட்சி வராது.
சாப்பிட்டு முடியும் வரை தாகம் இருக்காது .
உணவு அருந்திய அரைமணி நேரம் பிறகு தான் நீர் அருந்த வேண்டும் அகவே கால்களை மடக்கி கைகளில் நீர் உற்றி எதாவுது இறைவன் நாமம்
சொல்லி உறிந்து குடித்து விட்டு உணவு சாப்பிட வேண்டும்.

Wednesday, February 27, 2019

எந்தெந்தத் தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு? - தி.மு.க எடுத்த சர்வே.

நாடாளுமன்றத் தேர்தல்குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் ஸ்டாலின். தி.மு.க. கூட்டணியில் போட்டியிட உள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகுறித்த பேச்சுக்களும் நடந்துவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், வேட்பாளர்கள் யார் யார் என்ற பட்டியலை ஜெயலலிதாவைப் போல முதலில் வெளியிடுவதற்கு முடிவு செய்திருக்கிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்.  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில், தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்குறித்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அதில், 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க போட்டியிட வேண்டும் என்பதில் ஸ்டாலின் உறுதியாகக் கூறியிருக்கிறார். கூடவே, எந்தெந்தத் தொகுதிகளில் யாரை நிறுத்த வேண்டும் என்பது குறித்தும் தீவிர ஆலோசனை நடந்துவருகிறது. 
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் இடம் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது. இடதுசாரிகள், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. தி.மு.க-வைப் பொறுத்தவரை மூத்த நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு வாய்ப்பு அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வேலூர் தொகுதியில் துரைமுருகனின் மகனை களமிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் கனிமொழி போட்டியிடுவதற்கான வாய்ப்புகளும் அதிகம். 
இரண்டு இடதுசாரிக் கட்சிகளுக்கும் தலா ஒரு சீட்டை வழங்கும் எண்ணத்தில் உள்ளது தி.மு.க தலைமை. இதில், கடந்த காலங்களைப் போல 2 தொகுதிகளையாவது கேட்டுப் பெறும் முடிவில் அவர்கள் இருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யம், தி.மு.க கூட்டணியில் இணைந்தால், காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஒரு தொகுதியை கமலுக்குக் கொடுக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது என்கிறார்கள். ம.தி.மு.க -வுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் எத்தனை இடங்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. 
 ஸ்டாலின்
தி.மு.க சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளவர்களிடம், முதற்கட்ட நேர்காணல் ரகசியமாக நடந்துள்ளது. போட்டியிட விரும்புவர்களுக்குத் தொகுதியில் உள்ள செல்வாக்கு குறித்து ரகசிய சர்வேயும் நடத்தப்பட்டுள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் முதல்முறையாக ஒரு பொதுத்தேர்தலை தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் சந்திக்க உள்ளது. இதனால் ஸ்டாலின் தனித்துவத்தை நிரூபிக்க வேண்டிய சூழல் உள்ளதால், 40-க்கு 40 என்ற வெற்றிக் கணக்கில் கூட்டணிக்கான கூட்டல் கழித்தல் கணக்கை போட்டுவருகிறார். டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ஆ. ராசா போன்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. முன்னாள் எம்.பி-க்களில் சிலருக்கு வாய்ப்பு அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. கொங்கு ஈஸ்வரனுக்கு பொள்ளாச்சியைக் கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். தி.மு.க கூட்டணியில் சரத்குமாரின் ச.ம.க-வும் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது. வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, தூத்துக்குடி உட்பட்ட சில தொகுதிகளில் தி.மு.க போட்டியிடுவது முடிவாகிவிட்டதாம். காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய தொகுதிகள் ம.தி.மு.க-வுக்கு ஒதுக்கப்பட உள்ளதாம். திருவள்ளூர், சிதம்பரம் ஆகிய தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.

`வாரிசுகளுக்கு சீட்; ஒருங்கிணைந்த அ.தி.மு.க; சசிகலா சந்திப்பு!' - திவாகரன் முயற்சிகளுக்குத் தடைபோடும் தினகரன்.

பிரிந்து கிடப்பவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்தால் மட்டுமே, முழுமையான அண்ணா தி.மு.க-வாக மாறும்; மக்கள் மத்தியிலும் நம்பிக்கையைப் பெற முடியும்' என்பதை பியூஷ் கோயலிடம் வலியுறுத்திக் கூறியிருக்கிறோம்.

`வாரிசுகளுக்கு சீட்; ஒருங்கிணைந்த அ.தி.மு.க; சசிகலா சந்திப்பு!' - திவாகரன் முயற்சிகளுக்குத் தடைபோடும் தினகரன்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்தி, அ.ம.மு.க-வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் திவாகரன். `இப்போதுள்ள அ.தி.மு.க-வை வைத்து தேர்தலில் வெற்றி பெற முடியாது. ஒருங்கிணைப்பு நடந்தால் வெற்றி பெறலாம்' என டெல்லி மேலிடத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் திவாகரன். 
நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க தலைமையிலான அணியில் பா.ம.க, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. `தே.மு.தி.க-வுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது' எனத் தெரிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `இந்தக் கூட்டணிக்குள் தி.மு.க-வில் உள்ள தோழமைக் கட்சிகளும் இணையலாம். அது யார் என்பது பரம ரகசியம்' எனப் பேசியிருக்கிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். மக்களவைத் தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிரான மெகா கூட்டணியாக அ.தி.மு.க அணியைக் காட்டும் முயற்சிகளில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். அதேநேரம், தினகரனோடு மோதிக்கொண்டிருக்கும் திவாகரனும் அ.தி.மு.க-வுடன் இணைவது தொடர்பாக டெல்லி வட்டாரத்தில் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார். கடந்த 25-ம் தேதி மன்னார்குடியில் ஜெயலலிதா பிறந்தநாள் பிரமாண்ட பொதுக் கூட்டத்தை நடத்தினார் திவாகரன்.
திவாகரன்
அந்த மேடையில் பேசியவர், `எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்குவதற்காகக் கூவத்தூரில் கஷ்டப்பட்டது எல்லாம் நம்முடைய மன்னார்குடி பிள்ளைகள்தான். என்னைச் சுற்றி சில நந்திகளும் இருந்தன. அதெல்லாம் இப்போது நகர்ந்துவிட்டன. எனக்கு ஒரு சகோதரி இருந்தார். அவர் தற்போது சிறையில் இருக்கிறார். அவர் சிலரை நம்பி கழுத்து அறுக்கப்பட்டிருக்கிறார். இதுவரை அரசியல் பின்னணியில் இருந்தேன். நான் ஃபீல்டுக்கு வராமல் இருந்தது என் தவறு. இப்போது லேட்டாக வந்து இருக்கிறேன். ஆனால், லேட்டஸ்டாக வந்திருக்கிறேன். இப்போது அரசியலில் ஜீரோவிலிருந்து தொடங்கினாலும் விரைவில் உயரத்தை எட்டிப் பிடிப்போம்' என நம்பிக்கையோடு பேசினார். 
ஜெய் ஆனந்த், பியூஷ் கோயல்
திவாகரனின் `திடீர்' உற்சாகம் குறித்து, அண்ணா திராவிடர் கழகத்தின் நிர்வாகிகளிடம் பேசினோம். ``மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான அணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். அதேநேரம், இந்தத் தேர்தலில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கொடுப்பதைவிட, அமைச்சர்களின் வாரிசுகளுக்கு சீட் கொடுக்கும் வேலைகள்தான் நடக்கப் போகிறது. தேர்தலில் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், தங்கமணியின் மகன், ஜக்கையனின் மகன் என வாரிசுகள்தான் கோலோச்சப் போகிறார்கள். இது தொண்டர்கள் மத்தியில் வெறுப்பைத்தான் விதைக்கும். ஜெயலலிதா இருந்தவரையில் அடிமட்டத் தொண்டர்களில் யார் எம்.பி ஆவார்கள், யார் எம்.எல்.ஏ ஆவார்கள் என யாராலும் கணிக்க முடியாது. இப்போதுள்ள அண்ணா தி.மு.கவை வைத்து தேர்தலில் முழுமையான வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி, டெல்லி பா.ஜ.க தலைவர்களிடமும் இருக்கிறது. `பிரிந்து கிடப்பவர்கள் எல்லாம் ஒருங்கிணைந்தால் மட்டுமே, முழுமையான அண்ணா தி.மு.க-வாக மாறும்; மக்கள் மத்தியிலும் நம்பிக்கையைப் பெற முடியும்' என்பதை பியூஷ் கோயலிடம் வலியுறுத்திக் கூறியிருக்கிறோம்" என்றவர்கள், 
திவாகரன், நடராசன்
``அ.தி.மு.கவுக்கு மாற்றாக தற்காலிக நிவாரணமாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் தினகரன். இதே அ.ம.மு.க-வில் தொடர்ந்து பயணிப்பது சசிகலாவின் நோக்கம் அல்ல. ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்குத் தினகரன் தடையாக இருக்கிறார். சசிகலாவும் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவும் அ.தி.மு.க-வில் தொடர்வதைத்தான் விரும்புகின்றனர். இத்தனை ஆண்டுக்காலம் உழைத்த கட்சியைவிட்டுவிட்டு, அ.ம.மு.க என்ற புதிய அமைப்பில் இணைந்து பயணம் செய்வதற்குத் தொண்டர்களும் விரும்பவில்லை.
இதுதொடர்பாக பா.ஜ.க தமிழகப் பொறுப்பாளர் பியூஷ் கோயலிடம் பேசியபோது, `தேர்தலில் இணைந்து பணிபுரிய நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்குத் தேவையானது எல்லாம், டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் திட்டங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதுதான். ஓ.என்.ஜி.சி-யின் திட்டங்கள் எல்லாம் காங்கிரஸ் அரசாங்கத்தால் கையொப்பமிடப்பட்டவை. அவற்றை நீங்கள் செயல்படுத்துவதால் மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இதைப் போக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை' எனத் தெரிவித்தோம். தொடர்ந்து பேசும்போது, `அ.தி.மு.க-வில் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் கட்டுக்கோப்போடு கழகத்தை வழிநடத்த முடியும். இந்த முயற்சிகளுக்கு திவாகரன் உறுதுணையாக இருப்பார்' எனக் கூறினோம். இந்தக் கருத்துகளை பியூஷ் கோயலும் உள்வாங்கிக் கொண்டார். மக்களவைத் தேர்தலில் சீட் வாங்குவது எங்கள் நோக்கம் அல்ல. ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வாகச் செயல்படவே விரும்புகிறோம்" என்கின்றனர் நிதானமாக. 
சசிகலா
``சசிகலாவுக்கும் திவாகரனுக்கும் இடையில் உரசல்கள் இருந்தாலும், சிறையில் சந்தித்துப் பேசி சமரச உடன்பாட்டுக்குக் கொண்டு வரவும் குடும்ப உறுப்பினர்கள் சிலர் முயற்சி மேற்கொண்டனர். இதற்காகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவைச் சந்திக்க மனு போட்டுள்ளனர். தொடர்ந்து 2 நாள்களாக 5 மணி நேரம் காத்திருந்தும் சசிகலாவைச் சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. `கையொப்பமிட்ட வழக்கறிஞர்கள் (Signed Advocates) மட்டுமே சசிகலாவைச் சந்திக்க முடியும்' எனக் கூறி, தினகரன் ஆதரவாளர்கள் தடை போட்டுவிட்டனர். `சசிகலாவை யார் சந்திக்க வேண்டும், என்ன பேச வேண்டும்?' என்பதைக் கூட தினகரன்தான் முடிவு செய்கிறார். சொல்லப் போனால், பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு இரும்புத் திரையைப் போட்டு வைத்திருக்கிறார் தினகரன். அவரைத் தாண்டி யாராலும் சசிகலாவைச் சந்திக்க முடியாது. அ.தி.மு.க-வோடு ஒருங்கிணைந்து செயல்படும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார் திவாகரன். தேர்தல் நெருக்கத்தில் இந்த முயற்சிகள் இறுதி வடிவத்தை எட்டும்" என நம்பிக்கையோடு பேசுகின்றனர் மன்னார்குடி குடும்ப உறவுகள்

நான் சற்றே வேறுபடுகிறேன்.

மூன்று கட்சிகள் இந்தத் தேர்தலில் முழுமையாக தோற்கடிக்கப்பட வேண்டும். அந்த கட்சியின் தலைவர்களுக்கு அரசியல் வாழ்வு அஸ்தமனமாக வேண்டும்
1. மதிமுக - எந்த கொள்கையுமின்றி, ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்களை முடக்கி மக்களது வாழ்வாதாரத்தை அழித்தது. இலங்கை தமிழர் என பேசி அவர்கள் கொத்துக்கொத்தாய் மடியும்போது வேடிக்கை பார்த்தது
2. தேமுதிக - தனது உயரத்தை உயராது, எந்தவொரு கொள்கையும் இல்லாத கட்சி 
3. அமமுக - தினகரன் நல்ல தலைவராகப் பரிணமிக்கும் திறமை இருந்தாலும், மக்களை ஏமாற்றியவரிடம் கட்சியும், ஆட்சியும் இருப்பது தீங்கானதே.

நான் சற்றே வேறுபடுகிறேன். 

1. திமுக - ஹிந்துக்களை அனுதினமும் அவமானப்படுத்தி, ஹிந்துமதத்தை இழிவு செய்யும் கட்சி. ஆட்சியில் இல்லாதபோதே ஆடுபவர்கள், பதவியும் அதிகாரமும் வந்துவிட்டால் வெறியாட்டத்தை நடத்துவார்கள்.


2. காங்கிரஸ் - தேச துரோகிகளையும், இந்த தேசத்தை 65 ஆண்டுகளுக்கும் மேலாக பிச்சைக்கார தேசமாக்கி, நாசமாக்கி, பிரிவினைவாதிகளை ஊக்குவித்த, எதிரி நாடுகளிடம் மண்டியிட்ட கட்சி. 

மேற்கண்ட இரண்டுமே ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிய குடும்ப அரசியலை முன்வைத்த, குடும்ப உறுப்பினர்களை மட்டுமே கட்சித் தலைமை தாங்கச் செய்த கட்சிகள். 

3. தி.க. - இருப்பதிலேயே கடைந்தெடுத்த கழிசடைக் கட்சி என்றால் இதுதான். சாக்கடைப் பன்றிகள் நிரம்பியிருக்கும் கட்சி, அதனால்தான் பன்றிக்குப் பூணூல் போட மார்கழி நாய் போல் அலைகிறார்கள். ஹிந்துகளையும், ஹிந்து மதத்தையும் எந்த விதத்திலும் இழிவு செய்யவே பிறந்திருக்கும் கட்சி இது. 

4. நாய் டம்ளர், தெருமுருகன் காந்தி போன்ற இளைஞர்களை மூளைச் சலவை செய்து இருக்கும் கொஞ்ச நஞ்ச நேர்மை உணர்வையும், தேச பக்தியையும் காணாமல் போகச் செய்யும் கோடாலிக்காம்புகள் சார்ந்திருக்கும் எந்தக் கட்சியையும் புறக்கணிக்கவேண்டும். 

5. கம்யூனிஸ்ட் கபோதிகள். இவர்கள் சென்றவிடமெல்லாம் அழிவும் நாசமும்தான் மிச்சம். தப்பித் தவறிகூட இவர்களை நம்பிவிடக்கூடாது. சீறும் பாம்பையும், சிரிக்கும் பேயையும் நம்பலாம், இவர்களை நம்பவே கூடாது. 

மதிமுக போன்ற சூட்கேஸ் கட்சியினால் ஒரு சேதமும் கிடையாது. அதை எவனும் மதிப்பதே கிடையாது. தேமுதிக - விஜயகாந்தின் போதாத நேரம், உடல்நல பாதிப்பினால் செயல்படமுடியாமல் இருக்கிறார் - மற்றபடி அவர்களாலும் எந்த பாதிப்பும் கிடையாது. அமமுக பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. ஆக அதைச் சாய்ஸில் விடுகிறேன். 

சுருக்கமாகச் சொன்னால் ஹிந்து மதத்தையும் ஹிந்துக்களையும் நிந்திக்கும் எந்தக் கட்சியும் புறக்கணிக்கப்படவேண்டியதே!

தர்மம் நியாயம் இதெல்லாம் பாகிஸ்தான் காதில் விழாது...

உன் ஒருவனுக்காக உன் குடும்பம் மட்டுமல்ல இந்தியாவே கலங்குகிறது , நீ நலமாக மீண்டுவர எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கிறாேம்..........
தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களே இங்குள்ள சில தேசவிரோதிகளுக்கு ஒரு முடிவு கட்டுங்கள். உங்களுக்கு புண்யமாய் இருக்கும்.
அபிநந்தன் உயிருக்கு எந்த ஆபத்தும் வராது.
காரணம் நாங்க இந்திய நாட்டு இராணுவ வீரன பிடிச்சிருக்கோம்னு பாகிஸ்தான் வெளியே சொன்னதுதான். 


ஜெனீவா ஒப்பந்த படி அவனுக அபிநந்தன உயிரோட ஒப்படைக்கனும்.
இன்னும் ஒரு சில நாட்களில் அபினந்தன் நலமுடன் வீடு திரும்புவார்.

ராணுவ வீரர் அபிநந்தனை மீட்பதற்கான ஒரு கதவு திறந்திருக்கிறது

ஜெனீவா ஒப்பந்தப்படி. அவினந்தனை இன்னும் 7 நாட்களுக்குள் இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்.இல்லையென்றால் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க இந்தியாவிற்கு உரிமை உள்ளது.நமது வீரரை அடித்து ஏற்கனவே ஜெனீவா போர் ஒப்பந்தத்தை மீறி விட்டனர் பாகிஸ்தான் பன்னிகள்.கார்கில் போரின் போதும் லெப்டினெண்ட் கம்பம்பட்டி நச்சிக்கேட்டா என்ற நமது வீரரை 8 நாள் கழித்து விடுவித்தது பாகிஸ்தான்...தற்போதும் நமக்காக நாடு கடந்து எதிரியின் எல்லையில் தேசப்பணியை செய்யும் நம் வீரருக்கு.நன்றி கூறுவோம்..💪🇮🇳🙏😔😥
பிநந்தன் எந்த சேதாரமும் இல்லாமல் பத்திரமாய் வந்து சேர வேண்டும்.
🙏🙏
கூட்டு பிராத்தினை செய்வோம்.
😢😢
இந்தியாவை ஆதரித்து ஒரு பாகிஸ்தானியும் இல்லை ஆனால் 
பாகிஸ்தானை ஆதரித்து எத்தனை தேசத்துரோகிகள் இந்தியாவில்.
உன்னுயை உயிரில் தான் பாகிஸ்தானின் தலைஎழுத்து இருக்கிறது...
உன் உயிருக்கு விலை அதிகம் என்று அந்த கோழைகளுக்கு தெரியும்....💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

அத்திப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்:-

அத்திப் பழத்தைத் சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. 2 அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.
அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம். தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்தி பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது.
மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள. சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.

பாமகவில் ரஞ்சித் சேர்ந்து இன்னும் ஒரு தேர்தலைகூட சந்திக்கவில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டு கொள்ளையடித்த நபர் மற்றும் கட்சியுடன் ரஞ்சித் இணைந்திருப்பது பெருத்த ஆச்சரியத்தை தந்துள்ளது. இதுக்கு எதுக்கு பர்னிச்சரை உடைத்துக் கொண்டு.. பேசாமல் அதிமுகவில் போய் சேர்ந்திருக்கலாமே ரஞ்சித்!
நேத்து ரஞ்சித் அளித்த பேட்டி உண்மையிலேயே காரசாரமாக இருந்தது. அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை கூறிவிட்டு அவர்களுடனே கூட்டணி வைத்திருக்கும் பாமக மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று காரணம் சொன்னார்.
ஆனால் கூட்டணி முடிவான நாள் அன்றே கட்சியிலிருந்து விலகாமல் இப்போது ஒருவாரம் கழித்து ஏன் இந்த முடிவை எடுக்க வேண்டும். டிடிவி தினகரனுடனான பேச்சுவார்த்தையில் இவ்வளவு நாள் ஈடுபட்டிருந்தாரா? என தெரியவில்லை.
"உள்ளாட்சித் தேர்தல் வரை அதிமுகவுடன் பாமக இணைந்திருக்கும்.. பின்னர் விலகிவிடுவர்.. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் மக்களை பாமக ஏமாற்றும்" என்று நேற்று ரஞ்சித் காரணம் சொல்லி இருந்தார். பாமகவில் ரஞ்சித் சேர்ந்து இன்னும் ஒரு தேர்தலைகூட சந்திக்கவில்லை.
அப்படி இருக்கும்போது, அதற்குள் எப்படி பாமக விரைவில் விலகிவிடும் என்று சொல்கிறார்? தேர்தல் வந்தால் பாமக இப்படித்தான் இருக்கும் என்று தமிழக மக்களுக்கே தெரிந்திருக்கும்போது, ரஞ்சித்துக்கு தெரியாதா என்ன? தெரிந்திருந்தும் ஏன் பாமகவில் அன்று சேர வேண்டும் என்பதும் தெரியவில்லை.
அதேபோல, "அதிமுக அமைச்சர்களை ஊழல்வாதிகள் என்று விமர்சித்து விட்டு பாமக கூட்டணி வைத்தது ஏன்?" என்று ரஞ்சித் நேற்று கேட்ட கேள்வியையே நமக்கு திரும்ப கேட்க தோன்றுகிறது. இதே ஊழல் குற்றச்சாட்டுகள்தானே தினகரன் மீதும் உள்ளது. அவர் மீது ஊழல் கறை இல்லை என்று ரஞ்சித்தால் உறுதியாக சொல்ல முடியுமா?
மேலும் அதிமுகவில் தனது சின்னாத்தா முதல்வராக முடியவில்லை... தன்னையாவது முதல்வர் ஆக்க வேண்டும் என்று முண்டி முண்டி பார்த்து முடியாமல் போனதால் அதிமுக கட்சியிலிருந்து குடும்பத்தோடு அடித்து விரட்டப்பட்ட தால்தானே..
தானே வேறுவழியின்றி
ஆமமூக்கா என்று கட்சி தொடங்கியவர்தானே தினகரன்? ஒருவேளை கருத்து வேறுபாடு இல்லையென்றால் அதே அதிமுகவில்தானே தினகரனும் இந்நேரம் இருந்திருப்பார்? ஊழல் கட்சியிலிருந்து பிரிந்து வந்த தினகரனுடன் ரஞ்சித் இப்போது இணைந்திருப்பது நியாயமா என்று தெரியவில்லை.
கடைசியாக ஒன்றே ஒன்று! இன்றைய தினம் அவர் சேர்ந்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் இந்நேரம் எங்கே, ஏன், எதற்காக, எப்படி, எந்த நிலைமையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார்...???
இந்த 420.. அட்டைக்கத்தி தினகரன் எதற்காக திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்...???
ஜெயலலிதா அம்மையாரை சிறைக்கு போக வைத்ததும்... மண்ணுக்குள் புதைக்க வைத்ததும் எந்த குடும்ப கொலைகாரர்கள்...
கொள்ளைக்காரர்கள்...
என்ற கேள்விகளுக்கு மட்டும் ரஞ்சித் பதில் சொல்லட்டும்.. பார்க்கலாம்!!

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...