Sunday, February 17, 2019

😒இறுதிப் பயணம்😒

என் இனிய இந்தியாவே 
சென்று வருகிறேன்
மீண்டும் திரும்ப முடியாத
இடத்திற்கு.
மரணத்தின் மீது பயம் இல்லை எனக்கு,
என் பயமோ உன் எதிர்காலம்
குறித்து!
காதலர்கள் களிப்புற்று
கனவு கண்டிருந்த நாளில்-நானோ
காவலுக்கு சென்றிருந்தேன்
சிவப்பு ரோஜா கேட்டாள் என்னவள்
வாங்கி வர நேரமில்லை-என்
சிந்திய குருதியின் வண்ணம்
கண்டு பாவம்
இனி சிலையாகி போவாள்.
என் மகன் இராணுவம் என்று
மார்தட்டிய தந்தை -அப்பா
நீங்கள் கட்டி அழ என்
உடல் கூட இங்கு மிச்சமில்லை.
அம்மா !

Image may contain: one or more people and food
வீட்டுப்பிள்ளையாய் நான் இறந்திருந்தால்
விதியே என்று நீ அழுதிடலாம்
நாட்டின் புதல்வனாய் மாண்டதற்கு நீ மகிழ்ச்சி
கொண்டழு!
"அப்பா "என்று அவன் அழுதால் சொல்லிவிடு
அவர் துப்பாக்கி ஏந்தி
தூரத்தில் பணிபுரிகிறார் என்று!
உடல்சிதறி நான் இறந்த பொழுது எனக்கு வலிக்கவில்லை
நாளை எல்லையில் 40 வீரர்கள் இல்லை என்பது
தான் வலிக்கிறது.
போகிறேன் நாளைய பாரதம்
உங்கள் கைகளில் என்றெண்ணி!!

மனதை உலுக்கும் சம்பவம் .. இறந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆறுதலைத் தவிர வேறு ஏதும் சொல்ல முடியாது.. இது மண்ணில் புதைக்கப்பட்ட வீரமல்ல , விதைக்கப்பட்ட ஒன்று ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...