Wednesday, February 27, 2019

நம் எல்லோருக்கும் அவரவர் பிறந்த நட்சத்திரம் தெரியும்.

அந்த நட்சத்திரம் மாதம் ஒருமுறை வரும் வருடம்12முறை.
இந்த12நாட்கள் தான் வருடம்365நாட்களையும் அருமையாக தடை இல்லாமல் பிரச்சனை இல்லாமல் கிரக பாதிப்பு இல்லாமல் என்ன தசையோ புக்தியோ கோள்சாரத்தில் சனி குரு நன்மையோ தீமையோ எதுவாக இருப்பினும் பாதுகாப்பு கவசம் போல துணை இருப்பது நமது நட்சத்திரம் மட்டுமே.
நமது நட்சத்திரத்தின் அதிதேவதை யாரோ அவரை நினைத்து விரதம் இருப்பது மிகச்சிறப்பு.
அதிகமாக பேசாமல் அதிகமாக பயணம் செய்யாமல், பயணம் என்றால் சூரியனிடம் சற்று விலகி வெயிலில் அலையாமல் சாப்பிடாமல் இரவு நேரம் மட்டும் பழங்கள்,, காய்கள்,, சாப்பிட்டு இரவு சந்திர ஒளியில் நீண்ட மூச்சு காற்று இழுத்து விட்டு அதிதேவதை நினைத்து நீங்கள் மனதில் நினைத்த கஷ்டங்கள் குறைய வேண்டும் என்று வேண்டுங்கள்.
பலன் 100%இல்லை என்றாலும் 80%உறுதியாக சொல்லமுடியும்.
நட்சத்திரங்களையும் அதி தேவதைகளையும் காண்போம்.
• 1.அஸ்வினி - சரஸ்வதி
• 2.பரணி - துர்க்கை
• 3.கிருத்திகை - அக்னிபகவான்
• 4.ரோகிணி- பிரம்ம தேவர்
• 5.மிருகசீரிஷம்- சந்திரபகவான்
• 6.திருவாதிரை - சிவபெருமான்
• 7.புனர்பூசம் - அதிதி
• 8.பூசம்- பிரஹஸ்பதி (குருபகவான்)
• 9.ஆயில்யம்- ஆதிசேஷன்
• 10.மகம்- பித்ரு, சுக்கிர பகவான்
• 11.பூரம் - பார்வதி
• 12.உத்திரம் - சூரிய பகவான்
• 13.ஹஸ்தம் - சாஸ்தா
• 14.சித்திரை- விஷ்வகர்மா
• 15.சுவாதி- வாயு பகவான்
• 16.விசாகம் - முருகன்
• 17.அனுஷம்- லட்சுமி
• 18.கேட்டை- இந்திரன்
• 19.மூலம்- நிருருதி
• 20.பூராடம் - வருணன்
• 21.உத்திராடம் - கணபதி
• 22.திருவோணம்- விஷ்ணு
• 23.அவிட்டம் - வசுக்கள்
• 24.சதயம்- இயமன்
• 25.பூரட்டாதி - குபேரன்
• 26.உத்திரட்டாதி - காமதேனு
• 27.ரேவதி - சனி பகவான்.
மாதம் ஒரு நாள் கடைபிடித்து பாருங்கள், பலன் உண்டு.
🙏 சித்தம் சிவானந்தம்
🤘 ஓம் நமசிவாய🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...