Monday, February 18, 2019

முந்திரிப்பழம் :


கேசரி, பாயாசம், பொங்கல் இவற்றில் எல்லாம் நாம் தேடி தேடி முந்திரி பருப்பை சாப்பிடுவோம். அவற்றின் பழத்தைப் பற்றி கேள்விபட்டிருக்கக் கூட மாட்டோம். முந்திரிப் பருப்பு என்னவோ நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று தான். ஆனால், அதன் பழத்தை நம்மால் அந்த அளவுக்கு விரும்பி சாப்பிட முடியாது. ஏனெனில், அதை சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு தன்மையை ஏற்படும். ஆனாலும் அதை சாப்பிட சில வழிகள் உள்ளன. மேலும் அதில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. வாருங்கள் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்…
* ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அதை விட 5 மடங்கு அதிகமாக வைட்டமின் சி ஒரு பழத்தில் உள்ளது என்பதை கேள்விபட்டிருக்கிறீர்களா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள் அதுதான் முந்திரிப் பழம். என்னங்க இனி 5 ஆரஞ்சு பழத்துக்கு பதில் ஒரு முந்திரிப் பழத்தை சாப்பிடலாமே.
* முந்திரிப் பழத்துக்கு நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தத்தைச் சரி செய்யும் தன்மையும் உள்ளது. இவை நகங்கள், பற்களை உறுதிப்படுத்துகின்றன. மேலும், ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாட்டை குணப்படுத்துகிறது.
* முந்திரிப் பழத்தில் புரதம், பீட்டா கரோட்டீன், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. டானின் எனும் வேதிப்பொருள் உள்ளதால் ஆன்டி-ஆக்ஸிடன்ட் ஆகவும் செயல்படுகிறது.
* முந்திரிப் பழத்தை மரத்தில் இருந்து பறித்த 24 மணிநேரத்திற்குள் பயன்படுத்திவிட வேண்டும். இல்லையென்றால் அழுகிவிடும்.
இதன் காரணமாகவே இந்தியாவில் சாப்பிடுவதற்காக அதிகம் விற்பனையாவதில்லை. நசுங்கிய அல்லது அழுகிய பழங்கள் விலங்குகளுக்கு உணவுக்காக வழங்கப்படுகின்றன. ஆனால், பிரேசிலில் முந்திரிப் பழ ஜுஸ் மிக பிரபலமானது.
* முந்திரிப் பழம் சாப்பிடும் போது கரகரப்பு தன்மையை ஏற்படுத்தாமலிருக்க அதனை நீராவியில் சற்று வேக வைத்தோ அல்லது உப்பு நீரில் ஊறவைத்தோ சாப்பிடலாம். இத்தனை குணங்களை கொண்ட முந்திரிப் பழம், இதயத்தை தலைகீழாகப் பார்த்தால் எப்படி இருக்கும், அந்த வடிவில் இருக்கும். இனிமேல் முந்திரிப் பருப்பை மட்டும் இல்லை முந்திரிப் பழத்தையும் ருசித்து சாப்பிடலாம்...!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...