Tuesday, February 19, 2019

அ.தி.மு.க., அழைப்புக்கு காத்திருக்கும் த.மா.கா.,

அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா.,வுக்கு, ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.தி.மு.க., கூட்டணியில் சேர, த.மா.கா., தலைவர், வாசன் முயற்சி மேற்கொண்டார். ஆனால், காங்கிரஸ் தலைவர், ராகுல், அதை விரும்பவில்லை என, கூறப்படுகிறது.தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் சேரும் முடிவுக்கு, வாசன் வந்துள்ளார். கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர்களிடம், த.மா.கா., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. இரு லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா, எம்.பி., பதவியும் கேட்கப்பட்டு உள்ளது. ஆனால், மயிலாடுதுறை தொகுதியை மட்டும் ஒதுக்குவதாக, அ.தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது.அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., கூட்டணி உறுதியானதால், த.மா.கா.,வுக்கு அழைப்பு வரும் என, நேற்று வாசன் காத்திருந்தார். சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள, த.மா.கா., தலைமை அலுவலகத்தில், ஞானதேசிகன், தங்கம், விடியல் சேகர், முனவர் பாட்ஷா உள்ளிட்டோருடன், வாசன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, அ.தி.மு.க.,வில் ஒதுக்கக்கூடிய, ஒரு தொகுதியை பெற்று, கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என, வாசனிடம், அவர்கள் வலியுறுத்தினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...