Wednesday, February 27, 2019

பாமகவில் ரஞ்சித் சேர்ந்து இன்னும் ஒரு தேர்தலைகூட சந்திக்கவில்லை.

ஜெயலலிதா ஆட்சியில் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டு கொள்ளையடித்த நபர் மற்றும் கட்சியுடன் ரஞ்சித் இணைந்திருப்பது பெருத்த ஆச்சரியத்தை தந்துள்ளது. இதுக்கு எதுக்கு பர்னிச்சரை உடைத்துக் கொண்டு.. பேசாமல் அதிமுகவில் போய் சேர்ந்திருக்கலாமே ரஞ்சித்!
நேத்து ரஞ்சித் அளித்த பேட்டி உண்மையிலேயே காரசாரமாக இருந்தது. அமைச்சர்கள் மீது ஊழல் புகாரை கூறிவிட்டு அவர்களுடனே கூட்டணி வைத்திருக்கும் பாமக மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியால் கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று காரணம் சொன்னார்.
ஆனால் கூட்டணி முடிவான நாள் அன்றே கட்சியிலிருந்து விலகாமல் இப்போது ஒருவாரம் கழித்து ஏன் இந்த முடிவை எடுக்க வேண்டும். டிடிவி தினகரனுடனான பேச்சுவார்த்தையில் இவ்வளவு நாள் ஈடுபட்டிருந்தாரா? என தெரியவில்லை.
"உள்ளாட்சித் தேர்தல் வரை அதிமுகவுடன் பாமக இணைந்திருக்கும்.. பின்னர் விலகிவிடுவர்.. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் மக்களை பாமக ஏமாற்றும்" என்று நேற்று ரஞ்சித் காரணம் சொல்லி இருந்தார். பாமகவில் ரஞ்சித் சேர்ந்து இன்னும் ஒரு தேர்தலைகூட சந்திக்கவில்லை.
அப்படி இருக்கும்போது, அதற்குள் எப்படி பாமக விரைவில் விலகிவிடும் என்று சொல்கிறார்? தேர்தல் வந்தால் பாமக இப்படித்தான் இருக்கும் என்று தமிழக மக்களுக்கே தெரிந்திருக்கும்போது, ரஞ்சித்துக்கு தெரியாதா என்ன? தெரிந்திருந்தும் ஏன் பாமகவில் அன்று சேர வேண்டும் என்பதும் தெரியவில்லை.
அதேபோல, "அதிமுக அமைச்சர்களை ஊழல்வாதிகள் என்று விமர்சித்து விட்டு பாமக கூட்டணி வைத்தது ஏன்?" என்று ரஞ்சித் நேற்று கேட்ட கேள்வியையே நமக்கு திரும்ப கேட்க தோன்றுகிறது. இதே ஊழல் குற்றச்சாட்டுகள்தானே தினகரன் மீதும் உள்ளது. அவர் மீது ஊழல் கறை இல்லை என்று ரஞ்சித்தால் உறுதியாக சொல்ல முடியுமா?
மேலும் அதிமுகவில் தனது சின்னாத்தா முதல்வராக முடியவில்லை... தன்னையாவது முதல்வர் ஆக்க வேண்டும் என்று முண்டி முண்டி பார்த்து முடியாமல் போனதால் அதிமுக கட்சியிலிருந்து குடும்பத்தோடு அடித்து விரட்டப்பட்ட தால்தானே..
தானே வேறுவழியின்றி
ஆமமூக்கா என்று கட்சி தொடங்கியவர்தானே தினகரன்? ஒருவேளை கருத்து வேறுபாடு இல்லையென்றால் அதே அதிமுகவில்தானே தினகரனும் இந்நேரம் இருந்திருப்பார்? ஊழல் கட்சியிலிருந்து பிரிந்து வந்த தினகரனுடன் ரஞ்சித் இப்போது இணைந்திருப்பது நியாயமா என்று தெரியவில்லை.
கடைசியாக ஒன்றே ஒன்று! இன்றைய தினம் அவர் சேர்ந்துள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் இந்நேரம் எங்கே, ஏன், எதற்காக, எப்படி, எந்த நிலைமையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார்...???
இந்த 420.. அட்டைக்கத்தி தினகரன் எதற்காக திகார் சிறைக்கு அனுப்பப்பட்டார்...???
ஜெயலலிதா அம்மையாரை சிறைக்கு போக வைத்ததும்... மண்ணுக்குள் புதைக்க வைத்ததும் எந்த குடும்ப கொலைகாரர்கள்...
கொள்ளைக்காரர்கள்...
என்ற கேள்விகளுக்கு மட்டும் ரஞ்சித் பதில் சொல்லட்டும்.. பார்க்கலாம்!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...