Tuesday, February 26, 2019

அருமையான ஆனந்தமான அனுபவம்.

மருத்துவமனையில் படுத்தால் நன்றாகத் ஓய்வெடுக்க லாம் என்பது பொதுவான கருத்து.ஆனால் உண்மையில் நடப்பதென்ன?.
காலையில் அறையை பெருக்க ஒருவர் ,துடைக்க ஒருவர்,பாத்ரூம் க்ளீன் செய்ய ஒருவர் ,படுக்கையை மாற்ற ஒருவர் -இது க்ளீனிங் டிபார்ட்மென்ட்.
அடுத்து டெம்பரேச்சர் பார்க்க ஒருவர்,B.P பார்க்க ஒருவர் சுகர் டெஸ்ட் எடுக்க ஒருவர்,ட்ரிப் போட ஒருவர்‌.ஒருவரே இவைகளையெல்லாம் எடுக்க பலமுறை வருவார் -இது நர்சிங் டிபார்ட்மெண்ட்.
டூட்டி டாக்டர் ஒருமுறை,பின் அந்த நோயாளியின் நோய்க்கான ஸ்பெசலிஸ்ட், டாக்டர்கள் நர்சுகள் புடைசூழ வருவார்.
அதன்பின்னே டயட்டீசன், நர்சிங் சூப்பிரடென்ட்,ஹாஸ்பிடல் மெயின்டனென்ஸ் மேனேஜர்...
மெடிசின் கொடுக்கவும் ,ட்ரிப் தீர்ந்துவிட்டதா எனப்பார்க்கவும் ,வேறுபாட்டில் மாற்றவும் நர்சுகள் வந்துகொண்டே இருப்பார்கள்.
மதியம் இதே கதை தொடரும்.
பின்பு விசிட்டர்ஸ் டைம்.ஒவ்வொருவருக்கும் நோயின் தன்மையை விளக்கவேண்டும்.அவரவர் இஷ்டத்திற்கு அபிப்பிராயங்களை தாராளமாக அள்ளித் தெளித்து விட்டுப் போவார்கள்.
மாலையில் மறுபடியும் க்ளீனிங் டிபார்ட்மெண்டில் இருந்து தொடங்கும்..
அப்பா சாமி...இதில் ஓய்வாவது ஒன்றாவது...
#பேசண்டின் அட்டெண்டர் ஒருவரின் பரிதாபமான புலம்பல்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...