Monday, September 9, 2019

இதுதான் எங்கள் இந்தியா..!!

"அவர் போய் SRM யில் அட்மிட் ஆயிட்டாராமே?"
"SRM என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த கல்வித்தந்தை கேஸ் என்ன ஆச்சு?"
"அவருக்கென்ன ராஜா போல இருக்கார்!""
ராஜா என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த 2G கேஸ் என்ன ஆச்சு?"
"கெணத்துல போட்ட கல்தான்.".
"கல் என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த granite கேஸ் என்ன ஆச்சு?"
"அங்கே இங்கே நகராம மலையா நிக்குது."
"மலையா என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த மல்லையா கேஸ் என்ன ஆச்சு?"
"அவரே மனசு மாறனும் இந்தியா திரும்பனும்..அப்பால த்தான் கேஸ் நடக்கும்.."
"மாறனும் என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த மாறன் (aircel) கேஸ் என்ன ஆச்சு?"
"அது சிதம்பர ரகசியம்பா!"
"சிதம்பரம் என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த சாரதா நிதி நிறுவன மோசடி கேஸ் என்ன ஆச்சு?"
"ஐயோ மேலே ஒன்னும் கேக்காதே குடிச்சா மாதிரி தலை சுத்துது."
"குடிச்சா மாதிரி.என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த மிதாஸ்மது தொழிற்சாலை ஊழல் கேஸ் என்ன ஆச்சு?"
"சங்கரா ,மகாதேவா நீதான் என்னை இவன்டேந்து காப்பத்தனும்!".
"சங்கரா.என்றவுடன் ஞாபகத்துக்கு வருது ..அந்த சங்கரராமன் கேஸ் ..ஆ ஐயோ அடிக்காதே இனிமே கேக்கலை!!"
(கேட்டவர் தலையில் கட்டையால் தாக்கப்பட்டு கீழே மயங்கி சாய்கிறார்).
கட்டை என்றதும் ஞாபகம் வந்துச்சு...அந்த செம்மரக்கட்டை கடத்தல் கேஸ் என்னாச்சு?
அதுல செத்தவங்களுக்கு பாலை ஊத்தியாச்சே!!
பால் என்றதும் ஞாபகம் வந்துச்சு?
அந்த ஆவின் பால் கலப்பட கேஸ் என்னாச்சு?
உஸ்ஸ்ஸ்ஸ்....
தாங்க முடியல சாமி😁😁😁
யாரோ எழதியது
ஆனால்
இது தான்
நிஜம
நான் தொடர்கிறேன்.
சாமினு சொன்ன உடனேதான் ஞாபகம் வருது. சாமி சிலை திருட்டு கேஸ் என்ன ஆச்சு?
ஐயையோ இவன ஏதாவது கண்டெய்னர் லாரியில ஏத்தி மொழி தெரியாத இடத்துல கொண்டு போய் விட்டிருங்கலே...
கண்டெய்னர் லாரி னு சொன்ன உடனே தான் தோணுது.570 கோடி மேட்டரு என்ன ஆச்சு?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...