Sunday, September 22, 2019

அது தான் உண்மை..

நூறு சதவிகித பிராமணர்கள் அப்துல் கலாமை
தங்கள் குருநாதர்க்கும் இணையாக மனதால் ஏற்றுக்கொள்கிறார்கள்.
அவர் பிராமணரா?
தொன்னூற்றி ஐந்து விழுக்காடு பிராமணர்களுக்கு இசை என்றால் இளையராஜா தான், கவிஞர் என்றால் கண்ணதாசன் தான்.
அதற்காக மற்றவர்களை குறைத்து சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்.
யேசுதாஸ், எம் எஸ் சுப்புலட்சுமி இல்லாத பிராமண வீடுகளே இல்லை எனலாம்.
இவர்கள் எல்லாம் அவர்களின் குடும்பத்தின் அங்கமாகவே பார்ப்பார்கள்.
கர்நாடக சங்கீத உலகம் பொதுவாகவே பிராமணர்களை அதிகமாக கொண்டது.
மதுரை சோமு என்றொரு இசை மேதை.
அவர் கச்சேரியில் தொண்ணூறு விழுக்காட்டிற்கும் மேல் ரசித்ததோடு மட்டுமல்லாமல் அவரை கொண்டாடியவர்கள் பிராமணர்கள் தான்.
கமல் பிறப்பால் பிராமணர் தான், அவருக்கு ஐந்து சதவிகிதம் பிராமணர்கள் கூட ஆதரவு தெரிவிக்க மாட்டார்கள்.
ரஜினி பிராமணர் அல்ல, 95 சதவிகித பிராமணர்கள் இவரை ஆதரிப்பார்கள்.
மோடி பிற்படுத்த வகுப்பை சேர்ந்தவர். பிராமணர்களிடையே கணிசமானோர் அவரைத்தான் ஆதரிப்பார்கள்.
அறுபதுகளிலும் கூட காமராஜருக்கு பிராமணர்களிடையே இருந்த ஆதரவு ராஜாஜிக்கு இருந்ததில்லை.
இளையராஜா என்றொரு இசைஞானி சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே டி வி கோபாலகிருஷ்ணன் என்கின்ற இசை ஜாம்பவானிடம் சென்று கர்நாடக இசை கற்றுக்கொள்கிறார்.
பிதாமகர் என்றழைக்கப்படும் செம்மங்குடி ஸ்ரீநிவாச அய்யரிடமும், லால்குடி ஜெயராமன் போன்ற மேதைகளிடமும் இசை நுட்பங்களை அறிந்து கொள்கிறார்.
யேசுதாஸ் எனும் கிறித்தவர் ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்பே செம்பை வைத்தியநாத பாகவதரிடம் மாணாக்கராக இசை பயில்கிறார்.
சிரத்தையும் முயற்சியும் இருந்த எவர்க்கும் எதுவுமே தடைகளாய் இருந்ததில்லை.
இத்தனை இட ஒதுக்கீடுகளை தாண்டி பிராமணர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று சொன்னால் அந்த பார்வையில் நேர்மை இல்லை என்று தான் சொல்லமுடியும் அல்லது மற்றவர்களிடையே ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மையும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்!!
இன்றும் பல பிராமணர்கள் தங்கள் வீட்டில் வேலை செய்பவர்களை படிக்க வைப்பதாகட்டும், உழைப்பை கொடுத்து அவர்களை முன்னேறச்செய்வதிலாகட்டும் விளம்பரமின்றி செய்து
கொண்டுதானிருக்கிறார்கள்.
மதுரை வைத்தியநாதய்யர் என்றொருவர் இல்லையென்றால் இன்று தாழ்த்தப்பட்ட மக்கள்
மீனாட்சி அம்மன் ஆலயப்பிரவேசம் என்பது நடந்திருக்கவே நடந்திருக்காது.
அம்பேத்காரை படிக்க வைத்ததே
ஒரு பார்ப்பனர் மேலும் பரோடா மன்னரிடம்
சொல்லி மேல்படிப்புக்கு உதவியது
பார்ப்பானரே
ஆண்டாண்டு காலமாக பிராமணர்கள்
மனு சாஸ்திரம் அது இது என்று சொல்லி இப்படி பிரித்து விட்டார்கள் என்று திராவிட கட்சியினரும் ஈவேரா போன்றவர்களும் பொய்யை சொல்லி சொல்லி விஷத்தை விதைத்து பிழைப்பு நடத்தி விட்டார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...