Thursday, September 5, 2019

தெரிந்துதான் பேசினீர்களா மிஸ்டர் ராதாகிருஷ்ணன்...!

தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடியை ‘களவானி’ என சொன்னவர் ஸ்டாலின். இந்த நிலையில், ஸ்டாலினிடம் அரசியல் பாடம் படிக்க வேண்டும் என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் திருமன நிகழ்ச்சியில் ஸ்டாலின் இருக்கும் மேடையில் இன்று பேசியிருக்கிறார். அப்படி என்றால் பிரதமரை ஸ்டாலின் விமர்சித்ததை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள் அப்படித்தானே மிஸ்டர் சி.பி.ஆர்.
தலைவர் என்பவர் தொண்டர்களுக்கு ஓரு ஆலோசகராக, எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். திமுகவினர் பிரதமரை மிகக் கடுமையான வார்த்தைகளால் தினம் தினம்பேசி வரும் நிலையில், ஸ்டாலினைப் பற்றி நீங்கள் ஏன் புகழ்ந்து பேசினீர்கள், என்ன நிர்பந்தம் என தெரியவில்லை. ஒருவேளை நீங்கள் திமுகவுக்கு செல்லலாம் என நினைத்திருக்கலாம். அல்லது அரசியல் நாகரீகம் கருதி இப்படி பேசினேன் என சொல்லலாம். திமுகவில் சேரும் எண்ணம் இருந்தால் பா.ஜ.,வில் இருந்து விலகி பின்னர் ஸ்டாலினை புகழ்ந்திருக்கலாம். அப்படி நடந்திருந்தால் உங்களை யாருமே கேள்வி கேட்க முடியாது.
மாறாக, பாஜ.,வில் இருந்து கொண்டு பிரதமர் மோடியை ‘களவானி, மோடி ஒரு கேடி என சொன்ன ஸ்டாலினிடம் அரசியல் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என நீங்கள் சொல்வது ‘மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சில் துப்புவதைப்’ போன்ற செயலாகும். அடுத்து கருணாநிதியைப் போல் பா.ஜ.,வினர் உழைக்க வேண்டும் என சொல்லியிருப்பதுதான் மிகக் கொடுமையானது. கள்ள ஓட்டு, குவாட்டர், ரூ. 500, பொய்யான அறிக்கைகள், மதரீதியாக ஓட்டு கேட்பது, இந்துக்களைகடுமையாக விமர்சிப்பது போன்றவற்றைதான் தேர்தல் நேரத்தில் திமுக (கருணாநிதி) செய்யும். அதைத்தான் தமிழக பா.ஜ., செய்ய வேண்டும் என மறைமுகமாக எங்களுக்கு சொல்கிறீர்களா.
உங்களது இந்த பேச்சிற்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்க மாட்டீர்கள். உங்களை யாரும் அப்படி சொல்லவும் முடியாது. காரணம் நீங்கள் கட்சியின் மூத்த தலைவர். ஆனால், குறைந்தபட்சம் உங்கள் மனசாட்சியிடமாவது மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். திமுக நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்றதை யாரும் குறை சொல்ல முடியாது. அரசியல் நாகரீகம் கருதி மற்ற கட்சி நிகழ்ச்சியிலும் நீங்கள் கலந்து கொள்வது ஆரோக்கியமான செயல்தான்.
ஆனால், நீங்கள் எப்படி பேசியிருக்க வேண்டும் தெரியுமா. ஸ்டாலின் அவர்களே தேர்தல் நேரத்தில் நீங்கள் பிரதமர் மோடியை ‘களவானி’ என சொன்னீர்கள். நீங்கள் சொன்னது 100 சதவீதம் உண்மைதான். மோடி அவர்கள் மக்கள் மனதை வென்ற களவானி. அதனால்தான் பா.ஜ., தனித்து 300 இடங்களில் வெற்றி பெற்றது. அடுத்து நீங்கள் சொன்னது மோடி ஒரு கேடி. இதுவும் உண்மைதான். இந்திய நாட்டை கொள்ளையடித்தவர்களுக்கு மோடி ஒரு கேடியாகவே தெரிகிறார் என பேசியிருக்க வேண்டும். அவ்வாறு பேசியிருந்தால் ஸ்டாலினை சாரி கோணவாயனை கண்ணத்தில் இல்லை செருபப்பால் அடித்த மாதிரி இருந்திருக்கும். உங்களை நாங்கள் மனதார வாழ்த்தியிருப்போம்.
ஆனால், பிரதமரை ஸ்டாலின் திட்டியதை நீங்கள் ஏற்றுக் கொண்டது போல் பேசி விட்டீர்கள். இது பிரதமர் மோடிக்கு கேவலம் என நினைக்க வேண்டாம். தனது அரசியல வாழ்க்கையில் திமுகவைப் போன்ற பல கேவலமான கட்சிகளை மோடி எதிர்கொண்டுதான் சாதித்துள்ளார். நீங்கள் தலைகுணிய வைத்தது பா.ஜ., தொண்டர்கள் மற்றும் எங்களைப் போல் உள்ள விசுவாசிகளை. தமிழகத்தில் எங்களுக்கு இது பழக்கமாகி விட்டது. திமுகவை தலைவர்கள் பாராட்டுவதும் தொண்டர்கள் விமர்சிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
கடைசியாக... நீங்கள் பேசியதை திரும்பவும் நினைத்துப் பாருங்கள். உங்கள் மனசாட்சியே உங்களை வசைபாடும் மிஸ்டர் சி.பி.ஆர்.,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...