Thursday, September 5, 2019

உடல் எடையை குறைக்க...

1.பப்பாளிக்காயை தினமும் சாப்பாட்டில் சேர்த்து உண்டு வந்தால் தடித்த உடல் மெலிந்து விடும்.
2. வெள்ளை பூண்டு 5 பற்களை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு/ முழுங்கி தண்ணீர் குடித்து வர, வெகு சீக்கிரத்தில் கெட்ட. கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.
3. கொள்ளு ரசம் வாரம் மும்முறை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
4. இரவு படுக்கும் முன்பு வெதுவெதுப்பான நீரில் நாட்டுத் தேனை கலந்து ஒரு 100மில்லி அளவு குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
5. 8 என்ற எண்ணின் வடிவத்தை , மொட்டை மாடியிலோ, வீட்டின் பெரிய ஹாலிலோ வரைந்து, அதன் வாக்கில் நாளொன்றுக்கு 25-50 முறை நடைபயிற்சி செய்ய, கொழுப்பு குறைவதுடன், அன்று முழுவதும் புத்துணர்ச்சியோடு உடல் செயல்படும்
6. மேலும் சில பரிந்துரைகள்:
1. தண்ணீர்:
தினமும் குறைந்தது 4-5 லிட்டர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, நச்சுக்கள் வெளியேறிவிடும். சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றியுள்ள தொப்பை குறைந்துவிடும்.
2. உப்பை:
அதிகப்படியான உப்பு சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், தங்கிவிடும்.அதிக எண்ணெய் பலகாரங்கள் வேண்டாம்.
3. தேன்:
வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.
4. இலவங்க பட்டை:
தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.
5. நட்ஸ்:
கொழுப்புள்ள உணவுப் பொருட்கள்அனைத்தையும் நிறுத்திவிடுதல் தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு வேண்டிய நல்ல கொழுப்பு நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.
6. சிட்ரஸ்:
பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.
7. தயிர்:
தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.
8. க்ரீன் டீ:
அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.
9.சால்மன் மீன்:
சால்மன் மீனில் ஒமேகா3 (faatty) ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலுக்கு நல்ல கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.
10. பெர்ரிப் பழங்கள்:
பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் சாப்பிடலாம்.
11. ப்ராக்கோலி:
(சூப்பர் மார்க்கெட் டில் கிடைக்கும்) ப்ராக்கோலியில், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் திறன் உள்ளதால், தொப்பை ப்ராக்கோலியை சாப்பிடுதல் நல்லது.
12. எலுமிச்சை சாறு:
வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.
13. இஞ்சி:
உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.
மேற்கூறிய அனைத்தும் கெட்ட கொழுப்பை கரைத்து நிச்சயம் தொப்பை மற்றும் உடல் எடையை விரைவில் குறைக்கும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...