மக்கள் வரிப்பணம் இப்பதான் ஞாபகம் வருதா ப்ரதர்?
போன தேர்தல் வரைக்கும் ஓட்டை மொபெட்ல போய்க்கிட்டு இருந்தவன் ஒரு எலெக்சன்ல ஜெயிச்சதும் 'இன்னோ'வால போறானே அப்ப உனக்கு 'மக்கள் வரிப்பணம்' ஞாபகம் வரலையா ப்ரதர்?
தேர்தல் நேரத்தில் 'எலெக்சன் கமிசன்' பிடிச்சுதுன்னா கட்டுக்கட்டா கோணிப்பை நிறைய 2000/ ரூவா கட்டா கோடிக்கணக்குல பிடிபடுதே அப்ப 'மக்கள் வரிப்பணம்' ஞாபகம் வரலையா ப்ரதர்?
இன்கம்டாக்ஸ் ரெய்டு, ED ரெய்டு எல்லாம் முடிஞ்சதும் பிடிபடும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள்...
மலேசியால ரப்பர் எஸ்டேட், லண்டன்ல பங்களா, அமெரிக்கால டென்னிஸ் கோர்ட், அபார்ட் மென்டுகளா முக்கியமான சிட்டியில 50 / 60, இது போக தங்கக் கட்டிகள், கணக்கில் வராத ரொக்கமாக கரன்சிகள் கோடிக் கணக்கில்...
பேப்பர்ல டிவியில அப்பப்ப படத்தோட செய்தி வருதே அப்பல்லாம் 'மக்கள் வரிப்பணம்' ஞாபகம் வரலையா பிரதர்?
துண்டு பீடி சைஸ்ல ஒரு கட்சி, அதில் அவிஞ்சு போன பீடி நெருப்பு மாதிரி 'ஆட்சி மன்றக் குழு'- 'ஆலோசனைக் குழு'... அது இதுன்னு பந்தா! தனியா நின்னு ஒரு தேர்தலிலும் டெபாசிட் கூட வாங்காத 'லெட்டர் பேடு' கட்சி...
அதன் தலைவன் புதுசா 'இன்னோவா'- 'ஸ்கார்பியோ' ஏன் சில நேரத்துல 'ஹம்மர்' னு சொகுசு கார்ல எப்படிப் போறான்? தங்கறது முழுக்க ஆடம்பர ஹோட்டல், அவனும் அவன் கூட சுத்தற அல்லக்கை எல்லாம் பொழுதன்னிக்கும் தின்னுவது பிசா, பர்கர், சிக்கன்...
அப்பல்லாம் உனக்கு 'மக்கள் வரிப்பணம்' நினைவு வரலையா ப்ரதர்?
கூத்தாடி நடிகன்... நாலே படம் நடிச்சு அதுல ரெண்டு ஊத்திகிட்டா கூட ஊட்டில எஸ்டேட்டு, ஆடம்பர கார், சொகுசு பங்களானு செட்டில் ஆகிடறானே அப்ப உனக்கு 'மக்கள் வரிப்பணம்' நினைவு வரலையா போராலீ ப்ரதர்?
எந்த நிலையான உத்யோகமோ, வருமானம் தரக் கூடிய வியாபாரமோ, அதிகாரப் பதவியோ எதுவும் கிடையாது...
ஊருக்கு பத்து பேரை சேர்த்து ஏதோ ஒரு 'போராட்டக் குழு'- 'மனித உரிமை மீட்பு'- 'குடியுரிமைப் பாதுகாப்பு'...அது மாதிரி ஏதோ பெயரில் ஒன்றை உருவாக்கறது...
கொஞ்ச நாள் கழித்து 'சமூக ஆர்வலர்' னு விசிட்டிங் கார்ட் அச்சடிக்க வேண்டியது... -
'சமூக செயற்பாட்டாளர்'- 'மனித உரிமை ஆர்வலர்' அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டியது...
உண்மையிலேயே மனித உரிமைக்காகப் போராடற ஒரு சில நல்லவங்க பேரைக் கெடுக்க வேண்டியது...
அரசு வங்கிகள், அரசு அலுவலகங்கள்னு போய் அதிகாரிகளை மடக்கி மிரட்ட வேண்டியது...
இப்படியே 2 / 3 வருசம் ஆன உடனே அந்த 'சமூக செயற்பாட்டாளர்' பங்களா, கார், பையனுக்கு CBSE பள்ளிக்கூடத்துல படிப்பு...
அப்படி ஒரு அந்தஸ்தோட செட்டில் ஆகிடுவார்! அப்போ எல்லாம் 'மக்கள் வரிப்பணம்' நினைப்பு வரலியா ப்ரதர்?
அதெல்லாம் போகட்டும்! 200 ரூவாவோ 300 ரூவாவோ 'செய்கூலி' வாங்கினு கூவுற உனக்கு வரி கட்டற அளவு வருமானம் ஏது பிரதர்?!
No comments:
Post a Comment