பிக்பாசில் என்னை கொடுமைப்படுத்தினார்கள்..! விஜய் டிவி மீது மதுமிதா போலீசில் புகார்...!!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் 50 நாட்களை கடந்து உள்ளே இருந்தவர் காமெடி நடிகை மதுமிதா. ஆரம்பத்திலேயே தமிழ் கலாச்சாரம் என இவர் சொன்னது பிரச்சனையானது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் விதிமீறல் என கூறி வெளியேற்றப்பட்டார்.
அவர் உள்ளே இருப்பவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு கையில் கத்தியை கொண்டு தற்கொலைக்கு முயன்றார் என கூறப்பட்டது.
அண்மையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்திய அவர் என்னால் சில விஷயங்களை பேசமுடியாது என கூறினார். அதே வேளையில் அவர் மீது விஜய் டிவி போலிஸ் புகார் அளித்ததாக கூறப்பட்டது.
ஆனால் அது வதந்தி என சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை எல்லோரும் கொடுமை படுத்தியதாகவும், இதை கமல் சாரும் கேட்கவில்லை என கூறி சென்னை நாசரேத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாராம்.

No comments:
Post a Comment