நீதிபதி குமாரசாமி அமர்வு ஜெயலலிதாவை விடுதலை செய்தது. இந்த வழக்கில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதம்தான் மிக முக்கியமான திருப்பு முனையாக பார்க்கப்பட்டது. வழக்கின் போக்கையே ராம் ஜெத்மலானி மாற்றினார். அவரின் வாதம் அன்று பலருக்கும் பாடமாக இருந்தது என்று பல இளம் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் வாதம் செய்வதற்காக லண்டனில் இருந்து ராம் ஜெத்மலானி அழைத்து வரப்பட்டார். ராம் ஜெத்மலானி முதலில் செய்த வாதமே பலருக்கும் அதிர்ச்சி அளித்தது என்றுதான் சொல்ல வேண்டும். கர்நாடக ஹைகோர்ட்டில் எழுந்த நின்ற அவர், ''நீதிபதி குன்ஹா எங்கே? அவரையும் நீதிமன்ற கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும், அவர் நீதிபதி போல செயல்படவில்லை. அரசு தரப்பு வழக்கறிஞர் போல செயல்பட்டுள்ளார்'' என்று குறிப்பிட்டார்.
ஜெயலலிதாவிற்காக நீதிபதியையே கூண்டில் ஏற்ற வேண்டும் என்று அவர் கூறியது பெரிய வைரலானது. அதன்பின் ஜெயலலிதா மரணத்தின் போது ராம் ஜெத்மலானி மிகவும் வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment