Tuesday, December 31, 2019

கலாம் 2020 கனவு நனவாகுமா? கனவை நனவாக்க புத்தாண்டில் சபதமேற்போம்!

தமிழகத்தை சேர்ந்த, மறைந்த அணு விஞ்ஞானி அப்துல் கலாம், 2002 முதல், 2007 வரை, இந்திய ஜனாதிபதியாக இருந்தார். அவர் ஜனாதிபதியாகும் முன், 1998ல், 'விஷன் - 2020' என்ற, தொலைநோக்கு திட்டம் குறித்த புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தில், அனைத்து தரப்பு முன்னேற்றம், இந்தியாவின் வளர்ச்சிக்கான சவால்கள், அதை முறியடிக்கும் விதம் குறித்தும் கூறியிருந்தார்.

பின், அப்துல் கலாம் ஜனாதிபதியானதும், மத்திய திட்ட கமிஷன் மேற்கொண்ட திட்டங்களுக்கு, அவரது, விஷன் - 2020 என்ற தொலைநோக்கு திட்டம் பயன்படுத்தப்பட்டது. கலாமின் தொலைநோக்கு பார்வையை அடையும் ஆண்டான, 2020 பிறக்கும் நிலையில், கலாம் கண்ட கனவு என்ன; அவை நனவானதா என்பது இன்னும், கேள்வியாகவே தொக்கி நிற்கிறது.





அது என்ன, 'விஷன் 2020?'

* நாட்டில் உள்ள நகரங்களுக்கும், கிராமங்களுக்குமான இடைவெளி பெருமளவு குறைக்கப்பட வேண்டும்; நகரம், கிராமம் இரண்டிற்கும் பாகுபாடின்றி, அனைத்து வசதிகளும் கிடைக்க வேண்டும்.

* நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும், அனைத்து பகுதிகளுக்கும் போதிய மின் வசதியும், பாதுகாப்பான குடிநீரும் கிடைக்கச் செய்ய வேண்டும்.

* வேளாண்மை, தொழிற்துறை மற்றும் சேவை துறைகள் இணைந்து செயல்படும் நிலை வர வேண்டும்.

* நல் ஒழுக்கத்துடன் நிறைந்த கல்வி, அனைத்து வகை இளம் தலைமுறைக்கும் கிடைக்க வேண்டும்; பொருளாதார மற்றும் சமூக வேறுபாடுகளால், கல்வி மறுக்கப்படும் நிலை கூடாது.

* சர்வதேச அளவில் திறமையான கல்வியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு, இந்தியா சிறந்த இடமாக மாற வேண்டும்.

* அனைத்து தரப்பினருக்கும், மிகச்சிறந்த மருத்துவ சேவை கிடைக்க வேண்டும்.

பெருமையான தலைமை:

* நாட்டின் அரசு நிர்வாகம், சமூக பொறுப்புகள் நிறைந்த, வெளிப்படையான மற்றும் ஊழல் அறவே அற்றதாக மாற வேண்டும்.

* இந்த நாட்டில், அனைத்து தரப்பு மக்களின் ஏழ்மை நிலை அகற்றப்பட வேண்டும்.

* படிப்பறிவு இல்லாத நிலை ஒழிய வேண்டும்.

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அறவே இருக்க கூடாது. இந்த சமூகம் தன்னை கைவிட்டு விட்டது என்ற நிலை யாருக்கும் வரக்கூடாது.

* வளமும், பாதுகாப்பும், ஆரோக்கியமும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும்.

* பயங்கரவாதம் இல்லாத நிலை வேண்டும்.

* நிலையான வளர்ச்சி பாதையில் நாடு செல்ல வேண்டும்.

* நாட்டின் தலைமைத்துவத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்க வேண்டும்; அந்த செயல்பாடுகளை பெருமையாக கருதி, ஒவ்வொரு நாட்டு மக்களும், 'வாழ்வதற்கு இந்தியாவே சிறந்தது' என்ற நிலை ஏற்பட வேண்டும்.





வளர்ந்த நாடாக...

* இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

* ஐந்து முக்கிய துறைகளை ஒருங்கிணைத்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மை, உணவு பதப்படுத்துதல், கல்வி, சுகாதாரம், தகவல் தொழில்நுட்ப துறை ஆகியவற்றில், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* முக்கியமான தொழில்நுட்ப துறையில் தன்னிறைவு பெற்ற நிலை ஏற்பட வேண்டும்.

* நகரங்கள் மற்றும் கிராமங்கள் என, நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், நம்பத்தகுந்த மற்றும் தரமான மின்சார வசதி, பல்வகை போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு, அப்துல் கலாம் கூறியிருந்தார்.

இந்த இலக்கை எட்டுவது குறித்து, அவர் கூறியிருந்ததாவது: தேசிய தொலைநோக்கு பார்வையை எட்ட, குறைந்தபட்சம், 15 ஆண்டுகள் தேவை. இவை அரசியல் கட்சிகளின் கொள்கையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், தேர்தல் அறிக்கையில் அவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த, விஷன் - 2020 என்பது ஒரு கட்சி, அரசு மற்றும் தனி நபருக்கானது மட்டும் சொந்தமானதல்ல. நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான தொலைநோக்கு பார்வை. இதை பார்லிமென்டில் மக்களின் பிரதிநிதிகள் கூடி விவாதித்து, அனைத்து தரப்பின் ஒப்புதலை பெற்று, நடவடிக்கை மேற்கொள்ளலாம். இவ்வாறு, அப்துல் கலாம் தெரிவித்திருந்தார்.

2020ல் வல்லரசாகும்?

கடந்த, 2007ல் அப்துல் கலாமின் ஜனாதிபதிக்கான பதவிக்காலம் முடிந்தபோது, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, 2020ல் இந்தியா வல்லராசாகும் என, சூளுரைத்தார்.

அவரது உரை வருமாறு: வரும், 2020ல் இந்தியா வளர்ந்த நாடாக, வல்லரசு நாடாக திகழும். நம்முடைய இளைஞர்கள் துணையுடன், திறமையான, வெளிப்படையான நிர்வாகமும், அப்பழுக்கற்ற, ஊழலற்ற ஆட்சியும் இருந்தால் நிச்சயம் நாம், 2020ல் வல்லரசு நாடாக மாறி விடுவோம். நாட்டில் உள்ள, 25 வயதுக்குட்பட்ட, 54 கோடி இளைஞர்களையும் ஊக்கப்படுத்தி, உத்வேகத்துடன், அவர்களை சரியான பாதையில் நடைபோட வைக்க வேண்டும். அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும். அவர்களுடைய ஆளுமைத் திறனை மேம்படுத்த வேண்டும்.





சூளுரை:

இளைஞர்கள் தான் இந்த உலகின் மாபெரும் சக்தியாவர். வளர்ந்த, வல்லரசு நாடாக இந்தியா நிச்சயம் மாறும். மிகச் சிறந்த திறமை வாய்ந்த அரசு நிர்வாகம் உள்ள நாடாக, அமைதியான நாடாக, அனைவரும் வசிக்க ஆசைப்படும் அழகிய நாடாக, நம் இந்தியா நிச்சயம் மாறும். நம் நாட்டில் இரண்டாவது பசுமைப் புரட்சி வர வேண்டும். தங்களது வளமான நிலங்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்கு முழு சுதந்திரமும், சக்தியும் கொடுக்க வேண்டும். விவசாய நிலங்கள் பாழ்பட்டுப் போக அனுமதிக்கக் கூடாது. விவசாயிகளும், வேளாண் விஞ்ஞானிகளும், தொழிற்துறையினரும் இணைந்து சீரிய முறையில் உழைத்தால், நம் விவசாய பொருளாதார வளர்ச்சியை, ஆண்டுக்கு, 4 சதவீதம் அதிகரிக்க முடியும். இவ்வாறு, கலாம் சூளுரைத்தார்.

இந்த சூளுரைகளை, இதுவரை நிறைவேற்ற முயற்சிக்காத, அரசியல் கட்சி தலைவர்கள், இளம் தலைமுறையினர், மாணவர்கள், வேளாண் துறையினர், கல்வியாளர்கள், ஊடகங்கள், நீதித்துறையினர் என, அனைவரும் இந்த ஆண்டின் இறுதிக்குள் வல்லரசு கனவை நனவாக்க உழைக்க வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் 💐Happy new year 💐

💓 *இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்களே* 💓
*Once again wish you* *happy new year friends*
*Best wishes to all my friends*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

Image may contain: text

Image may contain: text

Image may contain: text




Monday, December 30, 2019

வாடிகணயோ மெக்கா மதினா இருக்கற நாடுகளையோ செக்யூலரா இருக்க சொல்லுங்க பாக்கலாம்.

சும்மா தோணுச்சு! கிருத்துவனும் இஸ்லாமியனும் வயிறு ரொம்பியவர்கள்! சாப்பிட்டு முடிச்சதும் இருக்கற இருபது ரூபாய்க்கு பீடா வாங்கலாமான்னு யோசிக்கிறவங்க, ஹிந்துவுக்கு இந்தியா மட்டும் தான் பிரதானம், இருக்குற இருபது ரூபாய்ல நாலு இட்லி கிடைக்குமான்னு தேடுறவனை பார்த்து நீ ஏன் பீடா சாப்பிட மாட்டேங்குறங்கற மாதிரி இருக்கு, ((சில நாட்களுக்கு முன்பு இந்தியாவின் சட்டம் சுதந்திரம் அடைந்த பொழுது அமேரிக்கா மாதிரி நாம் வரணும்னு நெனச்சி செக்யூலர் சட்டங்கள் எழுதப்பட்டது என்று பொருள் படியும்படி a TRC member எழுதி இருந்தார்)) But the fact of the matter is இந்தியா ஹிந்து மத நாடு என்று அறிவிக்க வேண்டும் அதற்கான முதல் படி தான் தற்போதைய CAA பில் என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் ,அமெரிக்கா காரன் செக்யூலரா இருக்கானா இல்லியா என்று நாம் கவலை படத்தேவை இல்லை, அவனோட கிருத்துவ மதம் பல நாட்டிலே பரவி கெடக்கு, இஸ்லாம் மதம் பல நாட்டிலே இஸ்லாமிய நாடென்ரே அறியப்படுகிறது, ஹிந்து மதத்திற்கு வேறெந்த நாடும் இல்லை.. நான் சின்ன வயசிலே இருக்குறப்போ வீட்டு ஹால்ல வெளையாடுவோம், சின்ன ஹால் தான் இருந்தாலும் விளையாடுவோம், அங்கேயே சமையல் ரூம்ல இருந்து சாப்பாடு எடுத்திட்டு வந்து தட்டிலே சாப்பிடுவோம், அப்புறம் அந்த இடத்தை தொடச்சிட்டு மாலைல பாய விரிச்சி உக்காந்து படிப்போம், அதுக்கப்புறம் அந்த பாய் மேல தலைகாணி போர்வை எல்லாம் கொண்டு வந்து ராத்திரி தூங்குவோம், காலைலே எழுந்ததும் போர்வை பெட்ஷீட் தலைகாணி பாய் எல்லாம் ஒழுங்கா மடிச்சு அந்த அந்த இடத்திலே வைச்சிட்டு அந்த நாளை ஆரம்பிப்போம்.. இப்போ என் வீடு எப்படின்னா சாப்பாடுக்கு டைனிங் டேபிள், சாப்பிட்டதும் அப்டியே எந்திரிச்சி பைப்ல போயி கைகழுவலாம், ஈவினிங் கொஞ்ச நேரம் ஷோபா-ல உக்காந்து கொஞ்ச நேரம் டிவி பார்த்துகிட்டே படிக்கலாம், முகநூல் கமெண்ட் போடலாம், அப்படியே அங்கேயே எல்லாத்தையும் விட்டுட்டு பெட்ரூம் போனா எப்பவுமே விரிச்ச மாதிரியே இருக்குற பெட் மேல படுத்து தூங்கலாம், விடிஞ்சதும் அப்டியே எந்திரிச்சி வந்திடலாம், எதையும் எடுத்து வைக்க வேண்டாம், அது அதுக்கு தனி தனியா ரூம் இருக்கு.. ((மாடில இருக்குறவனை பார்த்து ஓட்டு வீட்டிலே இருக்கிறவன் படுக்கையை அப்படியே போட்டுட்டு எழுந்தான்னா மத்த வேலை பண்ண முடியாது அமெரிக்கால இருக்கிறவன் செக்யூலர் மாதிரி ஒரு தோற்றத்தை கொடுக்கறான்னா அதுக்காக இந்தியா அதே போல இருக்கணும்னு சொல்ல கூடாது இந்தியா ஹிந்து நாடு ஆனால் அமெரிக்கா போல ஒரு ப்ரோக்ரேஸ்ஸிவ் நாடு என்று எடுத்துக்கொள்ள வேண்டும் இங்கே இருக்குற எல்லா இஸ்லாமியனும் கிருத்துவனும் ஐநூறு வருசத்துக்கு முன்பு இஸ்லாமியனோ கிருத்துவனோ கெடயாது )) சரி இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா பல படிச்ச அறிவுஜீவிகளும் தற்போதைய CAA-விற்கு எதிராக கருத்துகள் சொல்றாங்க, என்னை பொறுத்த வரைக்கும் பாஜக இதில் நேர்மையாக தான் செயல் பட்டிருக்கு, in fact இன்னும் மேற்கொண்டு இதனை முறுக்க வேண்டி இருக்கு, அமெரிக்கால இருக்குறவனுக்கு பல சவ்கரியங்கள் இருக்கு வெகேஷன்ல வாடிகன் போவான் சம்பாரிக்க அமெரிக்கால இருப்பான் பல நாடுகளில் கிருத்துவம் பரவி கெடக்கு, இஸ்லாமியனுக்கு மெக்கா மதினா இருக்கு, ஹஜ் போவாங்க,.. வாடிகணயோ மெக்கா மதினா இருக்கற நாடுகளையோ செக்யூலரா இருக்க சொல்லுங்க பாக்கலாம், இது புரியாம சுந்தர் பிச்சைல இருந்து கருத்து சொல்றாங்க against CAA!!!

மன்னர்தம் வரலாறறிவோம்.

கருணாநிதி இந்நாட்டிற்கு கிடைத்த ஒரு வரம்.
கருணாநிதியின் தொண்டினை எந்த காலத்திலும் யாராலும் மறக்க முடியாது.
அவரது குடும்பமே தேச பற்று மிக்க ஒரு குடும்பம்.
அவரது மூத்த மகன் மு.க. முத்து தமிழ் திரையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கினார்.
இவரது திரைப்படங்கள் ஒவ்வொன்றும் 200 நாட்கள் முன்னூறு நாட்கள் என்று ஓடி சாதனை படைத்த படங்கள்.
நம் நாட்டின் முன்னேற்றத்திற்க்காக உழைத்த கருணாநிதி அந்த பணியை செவ்வனே செய்ய தனக்கு ஒரு மனைவியையும் ஒரு துணைவியையும் வைத்துக் கொண்டார்.
ராசாத்தி அம்மாள் தனது கடின உழைப்பால் இந்நாட்டிற்கு கனிமொழி என்ற மங்காத செல்வத்தை வாரி வழங்கினார்.
கனிமொழியும் வளர்ந்து தனது தந்தையின் பெயரை நிலைநாட்டும் வண்ணம் நம் தேசத்திற்காக உழைத்தார்.
இவரது தேச பணியை பொறுத்துக்கொள்ள முடியாத அயல் நாட்டு நிறுவனங்கள் இவருக்கு அவப் பெயரை உண்டாக்க அவருக்கு தெரியாமலேயே அவரது ஊடகத்திற்கு கோடிக் கணக்கில் பணத்தை கடனாக கொடுத்து அவரை கடனாளி ஆக்கியது.
வாரி கொடுக்கும் கருணாநிதியின் வாரிசான கனிமொழி அந்த பணத்தை திருப்பிக் கொடுக்க நினைத்து அந்த நிறுவனங்களின் முகவரிகளை தேடி சென்று பார்க்கும் போது அங்கு அது போன்ற நிறுவனங்களே இல்லை என்பது தெரிய வந்தது.
இப்படி திட்டமிட்டு நடத்தப்பட்ட அந்நிய நாட்டு சதியால் கனிமொழி திகார் சிறையில் அடைக்கப்பட்டு சொல்லொன்னா துயரங்களை அனுபவித்தார்.
அதை தொடர்ந்து மத்திய அரசு வேண்டுமென்றே கருணாநிதியின் மனைவியிடம் விசாரணை நடத்தியது.
அந்த நேரத்தில் கூட தன் நாட்டு மக்கள் நன்றாக வாழ வேண்டும் என்ற சிந்தனையில் கருணாநிதி கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருந்தார்.
கருணாநிதியின் இன்னொரு மகனான அழகிரியோ வீரத்தின் விளை நிலம்.இவரது நெஞ்சு ஈரத்தின் இருப்பிடம்.
இவர் ஒரு நவீன ராபின் ஹுட் .
இவரது கட்சி ஏழைகள் பசியால் வாடி வதங்குவதை கண்ட இவர் பணமுதலைகளான ஹார்லிக்ஸ் கம்பெனி பணக்காரர்கள் மட்டுமே பருக வைத்திருந்த ஹார்லிக்ஸ் பாட்டில்களை எடுத்து ஏழை கட்சிக்காரர்களுக்கு கொடுத்தார்.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தை உடையவர்.
அதனால் யாராவது நடந்து சென்றாலே இவருக்கு பிடிக்காது ,அது சொந்த கட்சிக்காரராக இருந்தாலும் தண்டனை கொடுப்பார்.
அதனால் இவரது சாம்ராஜிய எல்லைக்குள் காலை எழுந்தவுடன் நடப்பதற்கே அனைவரும் அஞ்சினர்.
கருணாநிதியின் இன்னொரு தவப்புதல்வன் ஸ்டாலின்.
இவர் வசீகர தோற்றத்திற்கு சொந்தக்காரர்.
இவரது இளமை தோற்றத்தில் அனைவரும் மயங்கியதால் இவருக்கு 60 வயது ஆன பிறகும் இளைஞர் அணி தலைவராக நீடித்தார்.
கட்சிக்காரர்கள் அனைவரும் ஸ்டாலினுக்கு வயது 16 என்றே நினைத்தனர்.
நம் தேசத்தை முன்னேற்ற கருணாநிதிக்கு இவர் தோள் கொடுத்து அதனால் துணை முதல்வர் என்ற மிகப் பெரிய பொறுப்பை சுமக்க வேண்டிய கட்டாயம் இவருக்கு ஏற்பட்டதால் அடிக்கடி லண்டன் சென்றார்.
புலிக்கு பிறந்து பூனை ஆகுமா என்ற வாக்கிற்கேற்ப இவரது மகன் உதயநிதி தமிழ் திரையுலகில் தனது பண்பட்ட நடிப்பால் அனைவரது உள்ளங்களையும் கொள்ளை கொண்டார்.
இவரது ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தை ஐ.நா.சபையில் திரையிட்டார்கள்.
கருணாநிதியின் கண்கள் கவி பாடும் கண்கள் அதே கண்ணமைப்புடன் மு.க.முத்து பிறந்தார்.
அதே போன்ற கண்ணமைப்புடன் பிறந்த அருள்நிதி என்ற மாபெரும் நடிகர் தனது நடிப்பாற்றலால் அன்றைய முன்னணி நடிகர்களை புறமுதுகிட்டு ஓட செய்தார்.
அழகிரியும் ஸ்டாலினும் ராமர் லக்ஷ்மணன் போன்றவர்கள்.
துணை முதல்வர் என்ற பாரத்தை தனது தம்பி சுமப்பதை காண சகிக்காத அழகிரி தானும் அதே பாரத்தை சுமப்பேன் என்று தந்தையிடம் அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
அது இளைஞர் ஏற்க வேண்டிய பொறுப்பு நீ உன் தம்பியை விட ஒரு வயது மூத்தவன் என்ற உண்மையை அழகிரிக்கு விளங்க வைத்த கருணாநிதி அழகிரியை மத்திய மந்திரி ஆக்கினார்.
தாய்மொழி பற்றுள்ள அழகிரியால் டெல்லியில் மக்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் டெல்லி செல்வதை தவிர்த்து தமிழனின் புகழ் பரப்ப ஆஸ்திரேலியா துபாய் அமெரிக்க என்று ஊர் ஊராக செல்ல ஆரம்பித்தார்.
கருணாநிதியின் ஆட்சியில் மக்கள் மிக மிக மகிழ்ச்சியாக இருந்தனர்.
கே.டி.வி.சூரியா டி.வி.ஆதித்தியா டி.வி.சண் டி.வி.முரசு டி.வி. உஷா டி.வி.உதயா டி.வி.என்று ஏகப்பட்ட டி.விகளில் பலபல நிகழ்ச்சிகளை பார்த்து நாட்டை பற்றி சிறிதும் கவலைப்படாமல் இருந்தனர்.
மண் பொன் பெண் என்று எந்த ஒரு விஷயமும் மக்களை பாதிக்க கூடாது என்ற உயர்ந்த சிந்தனையில் அந்த விஷயங்கள் அனைத்தையுமே கருணாநிதி குடும்பமே பார்த்துக் கொண்டது.
கருணாநிதியின் பெரும் முயற்சியால் இலங்கை யில் அதிக அளவில் இருந்த தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
வாழ்வாதாரங்கள் குறைந்து மக்கள் தொகை அதிகமாகும் போது அடிப்படை தேவைகளுக்கு மக்கள் கஷ்டப்படுவார்கள் என்பதை உணர்ந்த கருணாநிதி இலங்கையில் ராஜபக்ஷேவால் தமிழர்களின் வாழ்வாதாரங்கள் குறைந்த போது மத்திய அரசு துணையுடன் தமிழர்களின் மக்கள் தொகையை குறைத்தார்.
இலங்கையில் எஞ்சி இருந்த தமிழர்கள் தங்களது அடிப்படை தேவைகள் அதிகமாக கிடைக்க காரணமான கருணாநிதியை மனதார பாராட்டினார்கள்.
இப்படி கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் தமிழக மற்றும் இலங்கை தமிழர்களுக்காக அல்லும் பகலும் பாடுபட்டனர்.
இவரது ஆட்சியில் நடைப்பெற்ற செம்மொழி மாநாட்டில் உலகத்தில் பல பாகங்களிலிருந்தும் தமிழ் அறிஞர்கள் பலர் வந்திருந்தனர்.
அனைவருக்கும் தன்னுடன் இணைந்து தமிழக முன்னேற்றத்திற்காக பாடு படும் தன் குடும்பத்தினரை அறிமுக படுத்த வேண்டும் என்ற உயர்ந்த லட்சியத்தோடு தனது குடும்பத்தினரை மேடையில் அமர்த்தி.உலக தமிழ் அறிஞர்கள் அனைவரையும் கடைசி வரிசையில் அமர்த்தி தனது முழு குடும்பமும் அவர்களது பார்வைக்கு படும்படி தமிழ் அறிஞர்களை கடைசி வரிசையில் அமர்த்தி அழகு பார்த்தார் கருணாநிதி.
திரை நட்சத்திரம் குஷ்புவை தமிழக ஆளுனராக ஆக்கி தன் அருகிலேயே அமர்த்தி நல்லாட்சி தரவேண்டும் என்ற அவருடைய கனவு கடைசிவரை நிறைவேறாமல் தன் இள வயதிலேயே காலமானார் தமிழின தலைவர்
காலன் மிக கொடியவன்
தப்பி தவறி 2040 இல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அப்போது ஏழாம் வகுப்பு வரலாற்று பாடத்தில் தமிழுக்கு உழைத்த தமிழர்கள் என்ற தலைப்பில் இந்த பாடம் வரவில்லை என்றால் என்னை தூக்கில் போடுங்கள்...

இந்த ஆண்டின் இறுதி நாள் இன்று…..

வாழ்நாளில் ஒரு வருடத்தை நழுவ விட்டுவிட்டோமா?
அல்லது பனிரெண்டு மாதங்களையும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டோமா?
என்று சிறிது நேரமாவது சிந்திக்க வேண்டிய நாள் இது.
“அப்பாடா, ஒரு வருடம் ஓடிவிட்டதே” என்று பெருமூச்சு விடுபவர்களுக்கும்,
“அநியாயமாக ஒரு வருடம் போய்விட்டதே” என்று வருத்தப்படுவர்களுக்கும்
மத்தியில்-“என்னைத் தினமும் கிழித்தாயே, நீ என்னைத்தைக் கிழித்தாய்?”
என்று காலண்டர் கேட்கும்படி ஒரு வருடம் ஓடியதா?
அல்லது-
“காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு பெருமைப்படும்படி காலண்டர் தீர்ந்ததா?”
என்கிற கேள்விக்கு விடை தேடும்போது……
சராசரி வாழ்க்கையைத்தான் நாம் சந்தித்திருக்கிறோம் என்பதை வலியுடன் உணரமுடிகிறது.
இழந்த நிமிடங்களும், மணித்துளிகளும் என்ன விலை கொடுத்தாலும் திரும்பப் பெறமுடியாதவை என்பதை உணரமறுக்கிறோம்.
வாழ்வின் கடைசிக் கட்டத்தில்தான் அதன் வலி தெரிகிறது.
வலி தெரிகிற போது வழி தெரிவதில்லை.
மண்ணோடு போராடித்தான் மரமாகிறது விதை என்பதை மனதில் வைப்போம்.
2020 – இனிய திருப்பமாக அமையட்டும்.
வாழ்த்துக்கள்!

நெல்லை கண்ணன் பேச்சுக்கு இஸ்லாமியர்கள் மகிழ்ந்து கைதட்டுவதை விட சற்று யோசிப்பது நல்லது.

கண்ணன் பேச்சின் பொருள் ' உங்களுக்கு யாரையாவது பிடிக்கலைன்னா குண்டு போட்டு கொன்னுடுவீங்களே, மோடி, அமீத் ஷாவைக் கொல்ல ஏன் இன்னும் தாமதம் ? சட்டுபுட்டுன்னு சோலிய முடிங்க.. என்பதுதான்.
இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் கொலைகாரர்கள் என்ற பிம்பத்தை கட்டமைப்பது யார் ?
இனி மோடி, ஷா உள்ளிட்டோர் மட்டுமல்ல, மாநில பாஜககாரர் யாராவது கூட்டத்தில் பேசும்போது அருகில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மரில் ஏதாவது கோளாறால் பொறி பறந்தாலோ மின்சாரம் துண்டிக்கப்பட்டாலோ உடனே சந்தேகம் உங்கள் மேல்தான் படியும். ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிட்டாலோ விசாரணை உங்கள் அன்றாட வாழ்க்கையை, நிம்மதியை, தொழிலை, படிப்பை பாதிக்கும்.
அன்றும் நெல்லை கண்ணன் போன்றவர்கள் " தீவிரவாதத்துக்கு மதம் கிடையாது. மின்சார வாரியத்தின் அலட்சியத்திற்கு , தமிழக அரசின் கையாலாகாத்தனத்துக்கு என் இஸ்லாமிய சகோதரனை துன்புறுத்துவதா, இவர்கள் பொங்கியெழுந்தால் என்ன ஆகும் தெரியுமா ? " என்று உசுப்பேற்றிவிட்டு, பேட்டா வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போய் நிம்மதியாய் உறங்குவார்கள். நீங்கள் போட்ட. பிரியாணி செரிக்கும்.
ஆனால் நீங்கள்தான் எந்த போலீஸ் வந்து யார் வீட்டுக் கதவை எப்போது தட்டுமோ, எவரைக் கைது செய்யுமோ என்று தூக்கம் கெட்டுத் தவிப்பீர்கள்.
உங்களை உசுப்பேற்றும் எவரும் உங்கள் வீட்டுத் திண்ணையில் காவலுக்கு படுக்க மாட்டார்கள்.
பெருமைக்கு எருமை மேச்சது போதும். யோசிங்க.

மார்கழி_மாதம்...

குளிருக்கு பயந்து இரவில் கோலம் போடுவது சரியா?... தவறா?...
🔯 மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்று கூறுவார்கள். இந்த மாதத்தில் சூரியன் குருவின் வீட்டில் (தனுசு) இருப்பார். இதன் காரணமாக சூரியக் கதிர்கள் பரவுவதற்கு முன் ஒரு தனி சக்தி உண்டாகும்.
🔯 இதன் காரணமாகவே அதிகாலையில் எழுந்து கோலமிட வேண்டும். அப்போது பெய்யும் பனிப்பொழிவானது நள்ளிரவில் பெய்யும் பனியைவிட மென்மையானதாக, தாக்கம் குறைந்ததாக, விஷத்தன்மையற்றதாக இருக்கும்.
🔯 எனவே, சூரியக்கதிர் பரவுவதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடும்போது மார்கழி மாத தட்பவெப்பநிலைக்கு உடல் ஒத்துப்போகும். பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். மாறாக பனிப்பொழிவுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் உடல்நலம் மேம்படாது.
🔯 சீதோஷண நிலையை, வாழும் சூழலுக்கு தகுந்தாற்போல் அமைத்துக் கொள்ளவே, வாசலில் கோலமிட்ட பின்னர் விளக்கு வைத்து வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விளக்கு வைப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் வீட்டை கதகதப்பாக வைக்க உதவும். சீதோஷண நிலையும் சமனடையும்.
🔯 மார்கழிப் பனியில் மண்ணும் குளிரும், தை பனியில் தரையும் குளிரும் என முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, வாசலில் கோலமிட்டு சாணத்தில் பூசணிப்பூவை வைப்பதன் மூலம் பனியால் ஏற்படும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
🔯 நமது வழிபாடுகள் அனைத்துமே இயற்கையுடன் ஒத்துப்போகும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, மார்கழி, தை மாதங்களில் வீட்டிற்கு அருகிலேயே பூசணிப்பூ, செம்பருத்தி உள்ளிட்ட பூ வகைகள் கிடைக்கும். அவற்றை சாணத்தின் மீது வைத்தால் நீண்ட நேரம் வாடாமல் இருக்கும்.
🔯 சாணத்தின் மீது வைக்கப்படும் பூசணிப்பூ வெளியேற்றும் வாசனை பனிக்காற்றில் கலந்து சிறந்த கிருமி நாசினியாகத் திகழும் என்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
🔯 எனவே, இரவில் கோலமிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாலையில் ஓசோன் வாயுக்கள் அதிகம் வெளியேறும். அந்த நேரத்தில் கோலமிடுவதால், சுவாசப் பிரச்சனைகள் தீரும். புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

வீட்டில் செல்வம் தழைக்க செய்ய வேண்டியவை !

இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலித்தால், அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.
 வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாட்சம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால், நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.
 சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.
 காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்.
 வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும்.
 எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக்கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
 அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக்கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.
 அமாவாசையன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக்கூடாது.
 பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
 செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது. அப்படி வீசினால், பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.
 செல்வச் செழிப்போடு வாழ, நமது வீட்டில் நமது ஆடைகள், துணிகள் சிதறிக் கிடக்கக்கூடாது. நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும், புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.

ஸ்வாமி நைவேத்யம் எதற்கு.

நைவேத்யம் என்பது
கடவுளிடம் அறிவிப்பது … காட்டுவது.
தேவதைகளுக்கு நம் போல் உண்ணத் தேவையில்லை.
பார்த்த மாத்திரத்திலேயே திருப்தி அடைகிறார்கள்.
மேலும் அந்த உணவில் இருக்கக்கூடிய தோஷங்களை அகற்றுகிறார்கள்.
இதற்காகவே ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது.
தோஷங்கள் நீக்கப்பட்ட உணவே ஆரோக்யமான உணவு !!
குருகுல வாசத்தில் குருவிடம் ‘ நாம் நிவேதிக்கும் பதார்த்தங்கள் ….
பகவான் ஏற்றுக் கொள்கிறானா..?
ஏற்றுக் கொண்டிருந்தால் அளவு சிறிதும் குறையாது அப்படியே இருக்கிறதே.?
இது எப்படி என கேட்கிறான்..? சீடன்
குரு சிறிது புன்னகைத்து விட்டு மெளனமாகிறார்…
சீடனுக்கு குருவையே மடக்கி விட்டோமென சந்தோஷம்…..!
மாலை வகுப்பு தொடங்குகிறது.
எல்லோரும் சந்தையாய் ஒலிக்கிறார்கள்.
குரு சந்தேகம் கேட்ட சீடனை தனியே சொல்ல சொல்கிறார்.
அவனும் தெளிவாய் சொல்கிறான். மீண்டும், மீண்டும் அவனை சொல்ல சொல்ல அவனும் தவறின்றி தெளிவாய் கூறுகிறான்.
இது எதிலிருந்த பாடம் என்கிறார் குரு…
இந்த சுவடியிலிருந்து இந்த பாடம் என கூறுகிறான்…
நீ இத்தனை முறை தெளிவாய் இதிலிருந்ததை எடுத்து ஒப்பு வித்திருக்கிறாய் ஆனால் அதிலுள்ள எழுத்துக்கள் அப்படியே தானே இருக்கிறது என்றார்….
சீடன் வெட்கி தலை குனிந்து குருவின் பாதம் பணிகிறான்…
இதிலுள்ள எழுத்தின் ஸ்வரத்தை நாம் எடுத்து கொள்வதை போல்,பகவானுக்கு ஸமர்பிக்கும் பதார்தத்தில் ஆவியை அவன் புசித்து அமுதத்தை அப்படியே நமக்கு திருப்பி தருகிறார் என விளக்கினார் குரு….

“வாழை இலையின் நடுவில ஒரு கோடு போட்டு ரெண்டா பிரிச்சு வச்சிருக்கே ... அந்தக் கோட்டைப் போட்டது யார்..?”

புராண காலங்களில் வாழை இலையின் நடுவில் கோடு கிடையாதாம்..
இராமாயண காலத்தில் .... ஒரு முறை ராமன் சாப்பிடும்போது , அனுமனையும் தன்னுடன் ஒரே இலையில் சாப்பிடச் சொன்னாராம் . இருவரும் எதிர் எதிராக அமர்ந்திருந்தார்களாம் .
அப்போதுதான் அணில் முதுகில் கோடு போட்ட மாதிரி ,வாழை இலையின் நடுவிலும் தனது கையால் ஒரு கோட்டைக் கிழித்தாராம் ராமன்.
ராமர் இருந்த பக்கத்தில் மனிதர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளும் , அனுமன் இருந்த எதிர் பகுதியில் குரங்குகள் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளும் பரிமாறப்பட்டதாம் .
அப்படி பரிமாறிய அந்தப் பழக்கம்தான் , இன்னும் நம்மிடையே தொன்று தொட்டு தொடர்ந்து வருகிறதாம் .
வாழை இலையில் சாப்பிடும் எல்லோருக்கும் ,
சாப்பிடும் முன் ...
ஒரு நொடிக் குழப்பம் ஒன்று வந்தே தீரும்.
“ பரிமாறும்போது இலையை எப்படிப் போடுவது..? இலையின் நுனி இடது பக்கமாக வர வேண்டுமா..? வலது பக்கமா..?”
சிம்பிள் ...
இலையின் நுனி , சாப்பிட அமர்ந்திருப்பவருக்கு இடது கை பக்கமாக வருகிற மாதிரி போட வேண்டும்.
ஏன்..?
நாம் சாப்பிடும்போது , வலது கையால் பிசைந்து சாப்பிடுவதால் , இலையின் வலது பக்கம் அதிக இடம் தேவை..!
சரி ...உப்பு, ஊறுகாய், இனிப்பு இவற்றையெல்லாம் இலையின் குறுகலான இடது பக்கத்தில் வைக்கிறோமே .. அது ஏன்..?
உப்பு, ஊறுகாய், இனிப்பு .. இதையெல்லாம் ஓவராக சாப்பிட்டால் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது . கொஞ்சமாகத்தான் சாப்பிட வேண்டும். அதனால்தான் இலையின் குறுகலான பாகத்தில் இட ஒதுக்கீடு !
சாதம் , காய் கறிகள் ... இவற்றையெல்லாம் நிறைய சாப்பிடலாம் . அதனால் அவற்றை இலையின் அகலமான வலது பக்கத்தில் பரிமாற வேண்டும்.
சரி .. இலையில் முதலில் வைக்கப்படும் இனிப்பை , பலர் கடைசியாக சாப்பிடுகிறார்களே ..இது சரிதானா ..?
இல்லை..!
இலையில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது .
நாம் இனிப்பை எடுத்து வாயில் வைத்த அடுத்த நொடியில்... அந்த இனிப்பு , உடனடியாக உமிழ் நீருடன் கரைந்து , ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று , வயிற்றில் ஜீரண சக்திக்கு தேவையான அமிலங்களை சுரக்க செய்ய உத்தரவிடுகிறது . அதனால்தான் ஜீரணம் எளிதாக நடை பெறுகிறது.
# அப்பப்பா ! இலையைப் போடுவதிலிருந்து , எப்படி பரிமாறுவது , எதை முதலில் சாப்பிடுவது ...
எல்லாவற்றையும் முறையாக வகுத்துத் தந்திருக்கும் நம் முன்னோரை எப்படிப் பாராட்டுவது..?

நிம்மதியான தூக்கம் கிடைக்க இந்த மூச்சு பயிற்சி செய்து பாருங்கள்...

உடல் ஆரோக்கியமாக இருக்க நிம்மதியான உறக்கம் மிகவும் அவசியமாகும். எனவே இரவில் நிம்மதியான தூக்கத்தை பெற ஒரு இயற்கை வழி ஒன்று உள்ளது.
அதுதான் மூச்சுப் பயிற்சி....
மூச்சுப் பயிற்சி எப்படி செய்ய வேண்டும்?
** முதலில் கண்களை மூடிக் கொண்டு, நாக்கை வாயின் மேல் கூரையில் மேல்வாய் பற்களின் பின் புறத்தை நாக்கால் தொட வேண்டும்.
** நாக்கை சரியான நிலையில் தொட்ட பின், மூச்சை வாயின் வாயின் வழியாக வெளியேற்ற வேண்டும்.
** பின் வாயை மூடிக் கொண்டு, மூக்கின் வழியாக 4 வரை எண்ணிக் கொண்டே மூச்சை உள்ளிழுத்து, 7 வரை எண்ணிக் கொண்டு மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
** அதன் பின் மூச்சை மெதுவாக வெளிவிட வேண்டும். இதேபோல் இரவில் தூங்கும் முன் தொடர்ந்து 4 முறைகள் செய்து வந்தால், இரவில் நல்ல தூக்கம் ஏற்படும்.
** இந்த மூச்சு பயிற்சியின் போது, முக்கியமாக மூச்சை இழுத்து வாயின் வழியாக வெளியிட வேண்டும். இதனால் மன அழுத்தம் குறையும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.

கேன்சர் போன்ற பெரிய தீர்க்க முடியாத நோய்கள் வரக் காரணம் என்ன…?



பிறர் வேதனைப்படுகின்றார்கள் துன்பப்படுகிறார்கள் என்பதை ரசித்தாலோ அல்லது நாம் வேண்டும் என்றே மற்றவரைக் கடுமையாக வேதனைப்படுத்தி அதைக் கண்டு சந்தோஷப்பட்டிருந்தாலோ கண்டிப்பாக கேன்சர் போன்ற பெரும் வியாதிகள் வரும்...
வேதனை என்பதே கடும் விஷம்.
ஒவ்வொரு அணு இயங்கவும், செயல் இழந்து போகவும் அந்த விஷம் தான் காரணம்.
ஆக அடுத்தவர் வேதனைப்படுவதைப் பார்த்து அதை நுகரும் பொழுது அவர்கள் வெளிப்படுத்தும் வேதனையான (விஷமான) உணர்வுகள் நம் உடலுக்குள் வந்து மற்ற நல்ல அணுக்கள் இயங்கக் காரணமான விஷத்தை இது உணவாக எடுத்துப் புற்று போன்று உடலிலே வளரத் தொடங்கும்.
எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்கள் துன்பங்களையோ வேதனைகளையோ கண்டு நாம் மகிழ்ச்சி பெறக் கூடாது...

நல்ல குணமுள்ள கணவர் கிடைக்க இந்த விரதத்தை கடைபிடிங்க.

நல்ல குணமுள்ள கணவர் கிடைக்க இந்த விரதத்தை கடைபிடிங்க
கிருஷ்ணன்


















பிறந்த வீட்டில் எப்படி சந்தோசமாக வாழ்கிறார்களோ அதே சந்தோசத்தை தருகிற அளவுக்கு புகுந்த வீடும், கணவரும் அமைய வேண்டும் என்பது இன்றைய காலப் பெண்களின் பெருங்கனவாக இருக்கிறது. நல்ல குணமுள்ள கணவர்கள் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என நினைப்பவர்கள் மார்கழி மாதம் விரமிருந்து கண்ணனை மனமுருகி வேண்டினால் அது நிச்சயம் நடைபெறும் என்பது தெய்வீக நம்பிக்கை.

எல்லா செல்வங்களும் நிறைந்து நாடும் நாட்டு மக்களும் தன்னிறைவோடு இருக்க மார்கழி மாத விரதம் கடைபிடிக்கப்பட்டாலும் ஆயர் குலப் பெண்கள் தங்களுக்கு வரும் வாழ்க்கைத் துணை சிறப்பானதாக அமைய கண்ணனின் துதி பாடி நோன்பு இருந்தனர். மார்கழி மாதத்தில் இந்த விரதத்தை ஆயர்குலப் பெண்கள் மேற்கொண்டதால் மார்கழி விரதம் என்ற பெயர் இதற்கு வந்து விட்டது.

எம்பெருமான் கண்ணனை நினைத்து ஆண்டாள் பாடிய திருப்பாவை, சிவனை நினைத்து மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவை, இதோடு திருப்பள்ளியெழுச்சி உள்ளடக்கிய பாடல்களை மார்கழி மாதத்தில் பெண்கள் மனமுருகிப் பாடி இறைவனைத் துதிக்கிறார்கள். திருப்பாவையில் 30 பாடல்களும், திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி இரண்டும் சேர்த்து 30 பாடல்களும் இருக்கின்றன. மார்கழி மாதத்தில் விரதமிருக்கும் போது செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விசயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

பூஜையறையில் ஆண்டாள், பெருமாள் படங்களை வைத்து காலையும் மாலையும் மலர்தூவி வழிபாடு செய்ய வேண்டும். மார்கழி முதல் நாளில் மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளே என்ற பாடலோடு தொடங்குவது சிறப்பான பலன்களைத் தரும். ஒவ்வொரு துதிப் பாடல்களையும் மூன்று முறை பாடப்படவேண்டும். 

படிக்கத் தகுந்தது...

நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன்.
அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.
அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.
நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.
சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.
சில நிமிடங்களுக்கு பிறகு ,
எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.
எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன்.
இறுதியாக, சாதித்து விட்டேன்!
அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.
எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன்.
ஆனால் அந்த நபருக்கு ,
நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை.
அவரைக் கடந்த பிறகு,
நான் அவரைக் கடப்பதிலே என்னுடைய கவனம் சென்றதால் உணர்ந்து கொண்டவை.....
1. என்னுடைய இல்லத்திற்கான வளைவில் நான் திரும்பவில்லை.
2.என்னுடைய உள் அமைதிக்கான கவனத்தை நான் இழந்து விட்டேன்.
3.என்னைச் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசிக்க மறந்துவிட்டேன்.
4.தியானத்தை தேடிக் கொண்டிருந்த என் ஆன்மாவை இழந்து விட்டேன்.
5.தேவையற்ற அவசரத்தில், பக்க வாட்டில் இருந்த நடைப் பாதையில் 2,3 முறை கால் இடற நேர்ந்தது. ஏன் கால்கள் கூட உடைந்திருக்கும்.
அப்பொழுது தான் எனக்கு ஞானோதயம் வந்தது.
நம் வாழ்க்கையிலும் இதே போலத் தானே?
நம் உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என பேசி நம்முடைய ஆனந்தத்தை நம்மாலேயே இழந்து கொண்டிருக்கிறோம் என்று.
நம்முடைய நேரத்தையும், ஆற்றலையும் இவ்வாறு ஓடுவதிலேயே தொலைத்து நாம் சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது ,
ஒரு முடிவில்லாமல் சுழலும் சக்கரம் போல தொடர்ந்து தொல்லை தரும்.
எப்பொழுதும் உங்களுக்கு முன்னால் ஏதோ ஒரு வகையில் யாராவது ஒருவர் முன்னுக்கு சென்று கொண்டிருப்பார்கள்.
உங்களை விட நல்ல வேலை.
நல்ல கார்.
வங்கியில் நிறைய பணம்.
நல்ல படிப்பு.
அழகிய மனைவி.
அழகான கணவன்.
நல்ல குழந்தைகள்.
நல்ல சுற்றுப்புற சூழ்நிலை.
நல்ல நிலை..........
ஆனால் நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால்,
நீங்கள் யாருடனும் போட்டி போடாத பொழுது, நீங்கள் நீங்களாகவே இருக்கும் பொழுது தான் நீங்கள் மிகச் சிறந்தவர் ஆகின்றீர்கள்.
சிலர் தங்கள் கவனத்தை,
அடுத்தவர்கள் எப்படி இருக்கின்றார்கள்,? எங்கே செல்கின்றார்கள்,? என்ன அணிகிறார்கள்,? என்ன வாகனம் ஓட்டுகிறார்கள்,? என்ன பேசுகிறார்கள் என்பதிலேயே செலுத்துவதால் பாதுகாப்பின்மை உணருகின்றார்கள்.
உங்களுடைய உயரம், எடை, தோற்றத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் அதை உள்ளது உள்ள படியே ஏற்று நீங்கள் ஆசிர்வாதம் பெற்றவர் என்பதை உணருங்கள்.
கவனத்துடனும், விழிப்புணர்வுடன் ஆரோக்கியமான ஒரு வாழ்வை வாழுங்கள்.
நாம் யாருடனும் போட்டி அல்ல. அவரவர் வாழ்க்கை அவரவர்க்கு.
*ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மை யும் நம் மன மகிழ்ச்சியை திருடுபவை. அவை உங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியைக் கொல்ல கூடியது.*
உங்களுடனே நீங்கள் போட்டியிட்டு அமைதியாக, ஆனந்தமாக, ஸ்திரமாக வாழுங்கள்.
🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...