Thursday, December 26, 2019

கிரகணம் என்பது என்ன என்கிற elementary school பாடம் இன்னும் கொஞ்சம் புரியாதவர்களுக்காக..

நாம் பாதையில் நண்பர் ஒருவரை பார்த்தவுடன் நின்று ஒருவர் முகம் ஒருவர் பார்த்துப் பேசுகிறோம்.
அவசரகதியில் இருவருமே அவரவர் சோலியை பார்த்துக் கொண்டு போனவர்கள்தாம்.
கொஞ்சம் crowd ஆன பாதைதான். அதே அவசர கதியில் போன இன்னொருவர் பாதை நெரிசலால் நம் இருவருக்கும் இடையே புகுந்து கடந்து அவரோட சோலிய பார்த்து கிட்டு போகிறார்.
அவர் அப்படி கடந்த நேரம் ஒரு வினாடி நம்மால் நம் நண்பரை பார்க்க முடியாமல் மறைக்கப் படுகிறார். அவர் கடந்த பிறகு மீண்டும் நண்பரை பார்க்க முடிகிறது.கிரகணம் என்பது இவ்வளவுதான்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே அமாவாசை சந்திரன் தனது இருண்ட பக்கத்தை நமக்குக் காட்டியபடி கடந்து செல்கிறது. அப்படிக் கடக்க சில நிமிடங்கள் ஆனது.
பூமியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அந்த சந்திரன் அமாவாசை சந்திரன்.
இதே, விசையத்தை சூரியனிலிருந்துபார்த்தால் அது பெளர்ணமி முழு சந்திரனாக இருக்கும்.
அப்படி பார்த்தால் அது பூமி கிரகணமாக காட்சி கொடுக்கும்.
எல்லாமே நாம் நம்முடைய தளத்தை மாற்றும் போது மாறி விடுகிறது.
ஆன்மிக முக்தியே இந்த நமது தள மாறுதலைத்தான் வலியுறுத்துகிறது.
நீங்கள்தான் மாறி அமைய வேண்டும்.அப்போதுதான் நிலையாமையில் ஒரு நிலைத்த தன்மை இருப்பதே புரிய வரும்.முக்தி என்பதே...!
நாமாக இஷ்டத்திற்கு அர்த்தப் படுத்திக் கொண்டிருக்கும் நடப்பியல்புகளை புரிந்து கொண்டு சரியான அர்த்தத்திற்கு வருவதுதான் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...