Sunday, December 22, 2019

ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் : காங்-32 ; பா.ஜ.,- 34 முன்னிலை (23/12/19 At 9.32AM).

ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு துவங்கி எண்ணப்படுகிறது. இதில் ஆளும் பா.ஜ., மற்றும் காங்., இடையே கடும் போராட்டம் நிலவி வருகிறது. துவக்கத்தில் காங்.,ம், பிறகு பா.ஜ.,வும் முன்னிலையில் இருந்து வந்தன.





81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபைக்கு நவ.,30 முதல் டிச.,20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பதிவான ஓட்டுக்கள் 24 மாவட்டங்களில் உள்ள தலைமையகங்களில் எண்ணப்படுகின்றன. 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கி, 9 மணி அளவில் முதல் சுற்று நிலவரம் வெளியிடப்படும். பிற்பகலுக்குள் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




முதல்வர் ரகுபர் தாஸ், ஹேமந்த் சோரன் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., மற்றும் எதிர்க்கட்சியான காங்-ஜார்கண்ட் முக்தி மோட்சா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் காங்., கூட்டணி அதிக இடங்களை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. ஆனால் கருத்துகணிப்பு முடிவுகளை பா.ஜ., ஏற்க மறுத்துள்ளதுடன், முழு பெரும்பான்மையுடன் தாங்கள் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளன.
9 மணி முன்னிலை நிலவரம் :

காங்., கூட்டணி - 32

பா.ஜ., - 34

ஜெ.வி.எம் - 03
ஏஜெஎஸ்யு - 07

மற்றவை - 03

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...