Saturday, December 28, 2019

சாதாரண பெட்ரோலுக்கும் ஸ்பீட் பெட்ரோலுக்கும் என்ன வித்யாசம்? எதைப் பயன்படுத்தலாம்...???



இந்தியாவில் கிடைக்கும் சாதாரண பெட்ரோல் 91 என்ற ஆக்டேன் எண்ணைக் கொண்டது. ஒரு சில பிரீமியம் பெட்ரோல்கள் ஆக்டேன் எண்ணை அதிகரிக்காமலே சற்றே சிறந்த பண்புகளை உடையவை.
ஆனால் ஸ்பீட் 93, ஸ்பீட் 97 போன்ற பெட்ரோல்கள், 93 மற்றும் 97 ஆக்டேன் எண்களைக் கொண்டவை. (ஆக்டேன் எண் அதிகமானால் விலையும் அதிகம். பெட்ரோலின் குணமும் அதிகம்).
அது சரி! அது என்ன ஆக்டேன் எண்?
டீசல் எஞ்சின் அதிக அழுத்தத்தைக் கொண்டது. (சிலிண்டர் சுவர்களும் அதற்குத் தகுந்த அதிகப் பருமன் கொண்டவை). டீசல், ஸ்பார்க் பிளக் இல்லாமல் சிலிண்டருக்குள் தானே வெடித்து எரியும். பெட்ரோல் எஞ்சின் (சிலிண்டர்) கள் குறைந்த அழுத்தத்தில் இயங்குபவை. ஸ்பார்க் பிளக் இருந்தால்தான் பெட்ரோல் வெடிக்கும். 91 ஆக்டேன் பெட்ரோல் கொஞ்சம் அழுத்தம் அதிகமானால் ஸ்பார்க் பிளக் இல்லாமல் சற்று முன்பே வெடித்து விடும். இதனால் 'நாக்கிங்' ஏற்படும். பெட்ரோல் வீணாகும். எஞ்சின் மற்றும் இதர பாகங்களின் வாழ்நாள் குறையும்.
அதே 93, 97 ஆக்டேன் பெட்ரோல்களாக இருந்தால், அவை அதிக அழுத்தத்தைத் தாங்கும். ஸ்பார்க் பிளக்கின் நேரம் (அதாவது முழு கம்ப்ரெஷனின் முடிவு) வரும் வரை வெடிக்காமல் காத்திருக்கும். வெடிக்கும் போது வெடித்துச் சிதறாமல் மிகச் சீராக வெடிக்கும். 'நாக்கிங்' ஒரு போதும் இருக்காது.
ஸ்பீட் பெட்ரோலின் ஆக்டேன் எண் அதிகமாக இருப்பதால்,, சாதாரண பெட்ரோலைவிட ஸ்பீட் பெட்ரோல் அதிக power (உந்துசக்தி) கொடுக்கும்.
ஆக்டேன் எண் அதிகமாக இருப்பதால், பெட்ரோல் இன்ஜினுக்குள் முழுமையாக எறிந்துவிடும். எனவே இதில் வெளியேறும் மாசு, சாதாரண பெட்ரோலைவிட கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லலாம்.
ஸ்பீட் பெட்ரோலை யார் பயன்படுத்தலாம்?
உங்கள் வண்டி 200சிசிக்கும் அதிகம் என்றால், ஸ்பீட் பெட்ரோல் பயன்படுத்தலாம். குறைவான சிசி கொண்ட வண்டிகளில் ஸ்பீட் பெட்ரோல் பெரிய பலன் தராது. ஏனெனில் குறைவான சிசி கொண்ட வண்டிகள் குறைவான உந்துசக்தியோடு செல்லவே உருவாக்கப்பட்டுள்ளன. எனவே பெரிய வித்யாசமெதுவும் அதில் தெரியாது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...