Monday, December 30, 2019

சிறையிலிருந்து எழுதிய கடிதத்தால் சசிகலாவின் மோசடி அம்பலம்.



பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி சொத்துக்களை வாங்கியது, சிறையில் இருந்து சசிகலா தன் கைப்பட எழுதிய கடிதத்தால் அம்பலமாகி உள்ளது.
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, அவருடன் தொடர்புடைய, 187 இடங்களில், 2017 நவம்பரில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் வீட்டில், ஒரு கடிதத்தை வருமான வரி அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.
அந்தக் கடிதம், பெங்களூரு சிறையில் இருந்து, 2017 செம்படம்பரில், சசிகலா தன் கைப்பட எழுதியது. இதுகுறித்து, விவேக்கிடம், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர்.
sasikala, letter, fraud, சிறை, கடிதம்,சசிகலா, மோசடி, அம்பலம்

'இரண்டு மாதத்திற்கு முன், என் வீட்டு காவலாளியிடம், யாரோ கொடுத்துள்ளனர். அந்த காவலாளி, அதை என்னிடம் கொடுத்தார். அதை நான் வீட்டில் வைத்திருந்தேன். எந்த காவலாளி கொடுத்தார், எப்போது கொடுத்தார் என்ற, நினைவு இல்லை.
'கடிதம் தொடர்பாக, சசிகலாவிடம் ஆலோசனை செய்வதற்காக வைத்திருந்தேன். ஆனால், பல்வேறு பிரச்னைகள் காரணமாக, அவரிடம் பேசவில்லை' என, வருமான வரித்துறை அதிகாரிகளிடம், விவேக் கூறியுள்ளார்.
அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து, சசிகலாவினுடையது தான் என்பதை, அவரின் சட்ட ஆலோசகர் செந்தில் உறுதி செய்துள்ளார்.

'ஜெ., இறப்புக்கு முன், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி, சொத்துக்கள் வாங்குவது தொடர்பாக, என்னிடம் சில தகவல்களை கூறினார். அதில் உள்ள விபரங்கள் தான், கடிதத்தில் உள்ளன' என, வருமான வரித்துறை அதிகாரிகளிடம், செந்தில் தெரிவித்துள்ளார்.
கடிதத்தில், சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளால், இந்த கடிதத்தை முக்கிய ஆதாரமாக வைத்து, விளக்கம் அளிக்கும்படி, சசிகலாவுக்கு, வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...