புழக்கத்தில் இருக்கும் அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும். இதனை வாங்க மறுப்பது குற்ற நடவடிக்கை உட்பட்டதாகும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது சமீபகாலமாக பல ஊர்களில் 10 ரூபாய் நாணயங்களை சிலர் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கண்டிக்கத்தக்கது
ரிசர்வ் வங்கி அறிவிப்பின்றி ஒரு நாணயத்தை செல்லாததாகவோ, வாங்க மறுப்பதோ குற்றமாகும். 1906ம் வருடத்திய நாணயச் சட்டத்தின்படி இந்த 10 ரூபாய் நாணயம் செல்லத்தக்கது என்றும்,இந்த நாணயத்தை முடக்குவது கண்டிக்கத்தக்கது என்றும் கூறப்பட்டுள்ளது.
10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 124ஏ-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment