Monday, December 30, 2019

ஸ்வாமி நைவேத்யம் எதற்கு.

நைவேத்யம் என்பது
கடவுளிடம் அறிவிப்பது … காட்டுவது.
தேவதைகளுக்கு நம் போல் உண்ணத் தேவையில்லை.
பார்த்த மாத்திரத்திலேயே திருப்தி அடைகிறார்கள்.
மேலும் அந்த உணவில் இருக்கக்கூடிய தோஷங்களை அகற்றுகிறார்கள்.
இதற்காகவே ஸ்வாமிக்கு நைவேத்யம் செய்யப்படுகிறது.
தோஷங்கள் நீக்கப்பட்ட உணவே ஆரோக்யமான உணவு !!
குருகுல வாசத்தில் குருவிடம் ‘ நாம் நிவேதிக்கும் பதார்த்தங்கள் ….
பகவான் ஏற்றுக் கொள்கிறானா..?
ஏற்றுக் கொண்டிருந்தால் அளவு சிறிதும் குறையாது அப்படியே இருக்கிறதே.?
இது எப்படி என கேட்கிறான்..? சீடன்
குரு சிறிது புன்னகைத்து விட்டு மெளனமாகிறார்…
சீடனுக்கு குருவையே மடக்கி விட்டோமென சந்தோஷம்…..!
மாலை வகுப்பு தொடங்குகிறது.
எல்லோரும் சந்தையாய் ஒலிக்கிறார்கள்.
குரு சந்தேகம் கேட்ட சீடனை தனியே சொல்ல சொல்கிறார்.
அவனும் தெளிவாய் சொல்கிறான். மீண்டும், மீண்டும் அவனை சொல்ல சொல்ல அவனும் தவறின்றி தெளிவாய் கூறுகிறான்.
இது எதிலிருந்த பாடம் என்கிறார் குரு…
இந்த சுவடியிலிருந்து இந்த பாடம் என கூறுகிறான்…
நீ இத்தனை முறை தெளிவாய் இதிலிருந்ததை எடுத்து ஒப்பு வித்திருக்கிறாய் ஆனால் அதிலுள்ள எழுத்துக்கள் அப்படியே தானே இருக்கிறது என்றார்….
சீடன் வெட்கி தலை குனிந்து குருவின் பாதம் பணிகிறான்…
இதிலுள்ள எழுத்தின் ஸ்வரத்தை நாம் எடுத்து கொள்வதை போல்,பகவானுக்கு ஸமர்பிக்கும் பதார்தத்தில் ஆவியை அவன் புசித்து அமுதத்தை அப்படியே நமக்கு திருப்பி தருகிறார் என விளக்கினார் குரு….

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...