Sunday, December 22, 2019

*"குருநிவாஸ்*

நாமக்கல் மாவட்டம் குருசாமி பாளையத்தில்
*திரு.வெங்கட்ராமன்* என்ற தமிழாசிரியர் அங்குள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஏறத்தாழ 34 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி விட்டு1984ல் ஓய்வு பெற்றார். வந்த சுமாரான வருமானத்தின் சேமிப்புடன் கடன் வாங்கி இரு பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்தார்.வயது 83 ஆண்டுகளைத் தாண்டிவிட்டது.வறுமை வாட்டியது.மழைக்கு ஒழுகும் பழைய வீட்டில் வயதான மனைவி விதவையான ஒரு மகள் ஆகியோருடன் சொற்ப ஊதியப் பணத்தில் வாழ்ந்து வந்தார்.
அவரிடம் படித்த பழைய மாணவர்கள் இதைக் கேள்விப்பட்டு நாடெங்கும் பரவியுள்ள அவரின் மற்ற பழைய மாணவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவிக்கிறார்கள்.பல்வேறு இடங்களில்.. மாநிலங்களிலிருக்கும் பழைய மாணவர்கள் மனமுவந்து தங்கள் பணத்தைத் தருகிறார்கள்.
கோவையில் தொழில் செய்யும் பழைய மாணவர் மட்டுமே ஒருலட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபாய் தருகிறார்.
1200 சதுரடியில் ஆசிரியர் பெயரில் நிலம் வாங்கி அதில் சிறந்த ‌முறையில்ற வீடுகட்டி *"குருநிவாஸ்* என்று
பெயரிடுகிறார்கள்.
ஆசிரியர் தினத்தை ஒட்டி செப்டம்பர் முதல் வாரத்தில் பள்ளியில் தங்களுக்குத் தாய்மொழி சொல்லித்
தந்த வயதான அந்த தமிழாசிரியருக்கு புதுவீட்டைப் பரிசாகத்தந்துமகிழ்கிறார்கள்.
ஆசிரியரின்கண்களில் ஆனந்தமுடன் கூடிய
நெகிழ்ச்சிக்கண்ணீர்!
அவரிடம் படித்துத்தேறி
அலுவலில் சேர்ந்த பலர்
இன்று ஓய்வு பெற்று விட்டார்கள்.இத்தனை ஆண்டுகள் ஆகியும்
இப்படியொரு செயலைச் செய்ய அவர்களைத் தூண்டியது எது?
ஆண்டுகள் பல ஆனாலும் அவர் எங்களுக்கு அன்பாகவும் உருக்கமாகவும் அழகியதமிழில் பாடம் சொல்லிக் கொடுத்ததை மறக்கவே முடியாது. மேலும் மாணவர்கள் மத்தியில் அக்காலத்தில் அவருக்கு அப்படியொரு பெருமதிப்பு என்றனர் பழைய மாணவர்கள்!
மாணவர்களை உண்மையாக நேசித்து
கருணையுடன் பழகி
எளிமையாகப் பாடம் நடத்தி அவர்கள் மனதில் நிலையான இடம் பிடித்த அந்த ஆசிரியர் நமது அனைவரின் வணக்கத்துக்கு உரியவர் இத்தனை
ஆண்டுகள் உருண்டோடியபிறகும்
தங்களது ஆசிரியரை மறவாமல் அவருக்கு நேர்த்திக்கடன் செலுத்திய அம்மாணவர்கள்நமதுபாராட்டுக்குரியவர்கள்.
நிற்க அதற்குத்தக' எனும் சொற்களின்இலக்கணமாகஆசிரியரும் ஆசிரியராகஇருந்திருக்கிறார்.மாணவர்களும் மாணவர்களாகவே இருந்திருக்கிறார்கள்!
இன்று நாட்டில் பொதுவாக நிகழும சூழல்களிலிருந்து
மாறுபட்டு மேற்கூறிய நிகழ்ச்சி சற்றே ஆறுதலாக இருக்கிறது.
மனப்பாடம் செய்யச்சொல்லித்
தருபவர்களாக இல்லாமல் வாழ்வியல்நெறிகளையும் சேர்த்துச் சொல்லித் தருகிற ஆசிரியர்களால்தான் அடுத்த தலைமுறைநன்குஉருவாகிறது
ஆசிரியர்கள் சொல்லித் தருவதால்மாணவர்கள்
கற்றுக் கொள்வதில்லை.
ஆசிரியர்களைப் பார்த்து அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். என்றார் டாக்டர்இராதாகிருஷ்ணன்
கல்வி என்பது வெறும்பட்டம் பெறுவதும் அதைக் காட்டிப் பணம் சேர்ப்பதும் அல்ல.ஞானத்தைப் பெற்று அடுத்த
தலைமுறைக்கு அதனை விட்டுச் செல்வதாகும்.
எப்படி வாழ வேண்டும் என்று பிரசங்கம் செய்பவன் பேச்சாளி.
எப்படி வாழ வேண்டுமென்று
வாழ்ந்துகாட்டுபவர்
ஞானி பேச்சாளர் பேசுவான். அவனே அதைப் பின்பற்றவே மாட்டான்.ஆனால்.....
ஞானி யொருவர் வாழ்க்கையே செய்தியாகிறது. கல்வி ஞானத்தைத் தர வேண்டும்.
அறியாமை இருளகற்றும்
அறிவொளியாகியஆசிரியர்களுக்கு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...