Tuesday, December 24, 2019

நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் -

எப்பொழுதுமே இந்தக் கம்யூனிஸ்ட்டுகளும், திராவிடப் பேச்சாளர்களும் மேடைகளில் மிகப் பெரிய புள்ளிவிபரப் புலிகள் போல பொய்களை அவிழ்த்து விடுவார்கள் -
இவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கும் பாமரக் கூட்டமும் அப்படியே நம்பி விடும் -
பிறகு பொய்களை நம்ப வைத்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திராவிட அரசுகள் கடந்த 50 ஆண்டுகளாகக் கடைபிடித்து வரும் ஒரே கொள்கை இலவசம்-
பசியால் வாடுபவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதை விட மீன்பிடிக்கக் கற்றுக் கொடு என்ற சீன பழமொழிக்கேற்ப -
ஆட்சி செய்து வருபவர் எங்கள் மோடி என்று நான் பெருமையாகச் சொல்வேன் -
நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள் -
நான் கொடுக்கும் புள்ளி விபரங்களை நீங்கள் கூகுள் செய்து சரிபார்த்துக் கொள்ளலாம் -
பெட்ரோலுக்கு வரியைக் குறை, வருமான வரி கட்ட மாட்டோம், GST போடாதே என்று கூக்குரலிடும் பொருளாதார மேதை மயில்சாமியின் வாரிசுகளுக்காக இந்தப் பதிவு -
நான் பல மலைக்கிராமங்களில் சுற்றியிருக்கிறேன் -
ஒரு இருபது வீடுகள் தான் இருக்கும் அது ஒரு கிராமம் -
இது போன்ற ஆயிரக்கணக்கான கிராமங்கள் இந்தியாவில் இருக்கின்றன -
காந்தி கூறியபடி இந்தியாவின் இதயங்களான இந்தக் கிராமங்களுக்கு சாலைகள் அமைக்க வேண்டும் என்று திட்டம் கொண்டு வந்தவர் யார் தெரியுமா? -
நாற்கரச் சாலை நாயகன் அடல் பிகாரி வாஜ்பேயி -
2000 மாவது ஆண்டில்-
பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் (PMGSY)_
அதற்கு முன்பெல்லாம் குதிரைகள் கழுதைகள் மூலம் விவசாயிகள் தங்கள் பொருட்களை சந்தைகளுக்குக் கொண்டு செல்வார்கள் -
உண்மையில் ஒரு ஐநூறு பேர்களுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்து சாலைகள் போட வேண்டுமா அந்தப் பணத்தை அவர்களுக்கு கையில் கொடுத்து விட்டால் ஓட்டுப் போடுவார்களே என்று கருணா போன்ற ஆட்கள் சிந்திப்பார்கள் -
ஆனால், ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலை வசதி, மின் வசதி, ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பிட வசதி என்பதே நமது பாரதப் பிரதமரின் இலக்கு-
இந்தக் கிராமப்புறச் சாலைத் திட்டங்களுக்கு மட்டும் 2017-18 - ஆம் நிதி ஆண்டில் 1,09,042.45 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது -
இது 2013-14-ம் நிதி ஆண்டை விட மும்மடங்கு அதிகம் -
விவசாய சந்தைகளுக்கு சாலைகள் எவ்வளவு அவசியம் என்று ஒரு விவசாயிக்குத் தான் தெரியும் -
அது மட்டுமல்ல மின்சாரத்தையே கண்களில் பார்க்காத 19,000 கிராமங்களுக்கு மின்சாரம் கொடுத்து ஒளி பரவச் செய்துள்ளார் மோடி -
மேலும், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்ட 12,000 வழங்கப்படுகிறது -
ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்ட 2,30,000 வழங்கப்படுகிறது -
ஆனால், நமது பொருளாதார மேதைகள் பெட்ரோல் வரி 11 லட்சம் கோடி வசூல் ஆகியிருக்கிறதே அது எங்கே என்று கேள்வி கேட்கிறான்கள் -
என்னவோ இந்தத் திராவிடத் திருடன்களைப் போல அவர் தனது சொந்த அக்கவுண்டில் போட்டுக் கொண்டதைப் போல -
இந்தியா முழுவதும் வரிகட்டுவோரே வெறும் 3 கோடி பேர்தான் -
அதிலும் மோடியின் நடவடிக்களால் புதிதாக இணைந்த ஒன்றரைக் கோடி பேரைச் சேர்த்து -
இவன்கள் கேள்வி கேட்கிறான்கள் -
இதில் அந்த மனிதர் தமிழக நெடுஞ்சாலைகளுக்கு மட்டும் 75,000 கோடிகள் ஒதுக்கியுள்ளார் -
அங்கும் வந்து சாலை போடவிடாமல் கொடிப் பிடிக்கிறான்கள் -
தயவு செய்து இதைப் படிக்கும் என் பாரத தேச மக்களே -
பிரதமரைப் புரிந்து கொள்ளுங்கள் -
மோடியைப் பற்றிக் கொள்ளுங்கள் -
அவர் நமக்காக மட்டுமே உழைக்கிறார் -

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...