*அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோவில் !!*
🌀 தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு அருகே உள்ள அய்யாவாடியில் பிரத்யங்கிராதேவிக்கு தனிக்கோவில் உள்ளது. *பிரத்யங்கிராதேவி சக்தியின் வடிவமாகக் கருதப்படும் இந்து சமயப் பெண் தெய்வம் ஆவார். பிரத்யங்கிராதேவி சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும்.*
*தல வரலாறு 
🌀 மகாவிஷ்ணு இராமாவதாரம் எடுத்து பூமிக்கு வந்த போது, சீதையை இராவணன் கடத்திச் சென்று விட்டான். இராமன் அவனுடன் போரிட இலங்கை சென்றார். தன் சகோதரர்களையும், மகன்களையும் வரிசையாக இராமனுடன் போரிட அனுப்பிய இராவணன், எல்லாரையும் இழந்தான்.

*🌀 மிகுந்த பலசாலியான இந்திரஜித் ஒருவன் மட்டும் எஞ்சியிருந்தான். காளி பக்தனான இந்திரஜித், இராமனை போரில் தோற்கடிப்பதற்காக அவளை வேண்டினான். மன்னர்கள் அக்காலத்தில் போரில் வெற்றி பெறுவதற்காக, எட்டுத்திசைகளில் மயான பூமியை தோற்றுவித்து அதர்வணகாளியான பிரத்யங்கிராதேவிக்கு நிகும்பலா யாகம் நடத்துவார்கள்.*
🌀 அந்த யாகத்தை இந்திரஜித்தும் பிரம்மாண்டமாக நடத்தினான். நிகும்பலா யாகம் மட்டும் முடிந்துவிட்டால் இந்திரஜித் மாபெரும் சக்தியை அடைந்து விடுவான். அதன்பின் அவனை போரில் வெல்ல யாராலும் முடியாது. இந்த விஷயம் இராமனுக்கு தெரிந்துவிட்டது. இராமபிரானும் பிரத்யங்கிராதேவிக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
*🌀 இந்திரஜித் அநியாய வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்துவதையும், பரமாத்மாவான இராமன் நியாயத்திற்காக யாகம் நடத்துவதையும் அறிந்து கொண்டாள் பிரத்யங்கிரா. இராமரின் யாகத்திற்கும், அவரது நியாயமான கோரிக்கைக்கும் செவி சாய்த்த தேவி அவருக்கு அனுக்கிரஹம் புரிந்தாள்.*
🌀 தன் நீண்ட நாள் பக்தனாயினும், அநியாயத்துக்கு துணைபோன இந்திரஜித்தின் பூஜையை ஏற்க மறுத்துவிட்டாள். எனவே இந்திரஜித் போரில் தோற்றான். இருந்தாலும், தன் பக்தன் என்ற முறையில், அவனது வீரம் இராமாயணத்தில் புகழப்படும் வகையில் ஆசி தந்தாள்.
*தல பெருமை 
🌀 தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தர் இத்தல சிவனை குறித்து பாடியுள்ளார்.

🌀 தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலங்களில் இதுவும் ஒன்று. சம்பந்தர் இத்தல சிவனை குறித்து பாடியுள்ளார்.
*🌀 பிரத்யங்கிராதேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றியவள். சிம்ம முகம், 18 கரம், சிரித்த முகத்துடன் அருள்பாலிக்கிறாள். கரிய நிறத்துடன் தலையில் சந்திரகலை அணிந்து சூலம், பாசம், டமருகத்துடன் இருபுறமும் லட்சுமி, சரஸ்வதி தேவியுடன் அட்டகாசமாக வீற்றிருக்கிறாள்.*
*பிரார்த்தனை 
🌀 மந்திர, தந்திரங்கள் என கூறிக்கொண்டு பிரத்யங்கிராதேவியை முதன்மைப்படுத்தி நாச காரியங்களில் ஈடுபடுகிறவர்களை பிரத்யங்கிராதேவி நிச்சயமாக அழித்துவிடுவாள்.

🌀 மந்திர, தந்திரங்கள் என கூறிக்கொண்டு பிரத்யங்கிராதேவியை முதன்மைப்படுத்தி நாச காரியங்களில் ஈடுபடுகிறவர்களை பிரத்யங்கிராதேவி நிச்சயமாக அழித்துவிடுவாள்.
*🌀 இவளை நம்பி வணங்கும் பக்தர்களை எல்லாவிதமான நவக்கிரக தோஷங்களிலிருந்தும் காப்பாற்றி எல்லா ஐஸ்வர்யங்களையும் கொடுக்கிறாள்.*
*போக்குவரத்து 
🚗 தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம், உப்பிலியப்பன் கோயில் வழியாக இத்தலத்தை அடையலாம். உப்பிலியப்பன் கோயிலிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் அய்யாவாடி உள்ளது.

🚗 தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம், உப்பிலியப்பன் கோயில் வழியாக இத்தலத்தை அடையலாம். உப்பிலியப்பன் கோயிலிலிருந்து 3 கி.மீ. தூரத்தில் அய்யாவாடி உள்ளது.
No comments:
Post a Comment