Thursday, December 12, 2019

விபத்து நடந்தால் வாகனம் பறிமுதல்.

'விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு மூன்றாம் நபர் காப்பீடு ஆவணம் இல்லையென்றால் வாகனத்தை விடுவிக்கக் கூடாது; தேவைப்பட்டால் வாகனத்தை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் தொகையை இழப்பீடாக வழங்கலாம்' என அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய விதிமுறைகளில் தமிழக அரசு மாற்றம் செய்துள்ளது. அதன் விபரம்: விபத்தில் இறப்பு, காயம், பொருள் சேதம் ஏற்படுத்திய வாகனத்திற்கு மூன்றாம் நபர் காப்பீடு தொகை செலுத்தப்படாமல் இருந்தால் அந்த வாகனத்தை நீதிமன்றம் விடுவிக்கக் கூடாது. அந்த வாகனத்தின் உரிமையாளர் காப்பீடு செலுத்தியதற்கான ஆவணத்தை விசாரணை அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க தேவையான பிணையத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இதை வாகன உரிமையாளர் மூன்று மாதத்திற்குள் செய்யத் தவறினால் அந்த வாகனத்தை நீதிபதி அனுமதியோடு பொது ஏலம் விட வேண்டும். அதில் கிடைக்கும் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

accident,insurance,விபத்து

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...