Thursday, December 12, 2019

பழ கருப்பையா திமுகவில் இருந்து விலகல்! உள்மர்மம் என்ன?

தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான்
என்று நம்பிக்கையோடு இருக்கிறார் துர்கா அம்மையார்.
அப்படி 2021ல் ஸ்டாலின் முதல்வராகும்போது
தன் மகன் உதயநிதியை துணை முதல்வர்
ஆக்கிவிட வேண்டும் என்றும் உறுதி பூண்டுள்ளார்
துர்கா அம்மையார்.
உதயநிதி துணை முதல்வராக வாய்ப்பு உள்ளதா என்று
ஜோதிடர்களைக் கேட்டபோது, அவர்கள் அனைவரும்
நிச்சயம் வாய்ப்பு உள்ளது என்று அடித்துக் கூறி
உள்ளனர்.
துணை முதல்வராவதற்கு உதயநிதி ஒரு தொகுதியில்
நின்று எம் எல் ஏ ஆக வேண்டும். அதற்கான வாய்ப்புள்ள
தொகுதியை திமுக கிச்சன் கேபினெட் அலசி
ஆராய்ந்ததில், துறைமுகம் தொகுதியைத் தேர்ந்தெடுத்தது.
மிகவும் சிறிய தொகுதி என்பதாலும், சிறுபான்மை
சமூக ஆதரவு உறுதி என்பதாலும், கலைஞர் ஏற்கனவே
வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், துறைமுகம்
தொகுதியே உதயநிதிக்கு ஏற்றது என்று கிச்சன்
கேபினெட் முடிவு செய்துள்ளது. இது ஸ்டாலின்,
சபரீசனுக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்களும்
துறைமுகம் தொகுதியை டிக் செய்து விட்டனர்.
இது எதுவும் பழ கருப்பையாவுக்குத் தெரியாது.
அவர்தான் துறைமுகம் தொகுதியின் எம் எல் ஏவாக
இருந்தவர். 2021 தேர்தலில் இந்தத் தொகுதி தமக்கே
என்று நம்பி இருந்தவர்.
அண்மையில் சில முக்கியஸ்தர்களிடம் இருந்து
துறைமுகம் தொகுதியில் உதயநிதி நிற்பது
பற்றிய தகவலை பழ கருப்பையா அறிந்து கொண்டார்.
இத்தகவல் உண்மை என்பதையும் ஊர்ஜிதம் செய்து
கொண்டார். இது குறித்து ஸ்டாலினைச் சந்திக்க
அனுமதி கேட்டும் கிடைக்கவில்லை.
அடுத்த முயற்சியாக சபரீசனைச் சந்தித்தபோது,
அவர் துறைமுகம் தொகுதி கருப்பையாவுக்கு
இல்லை என்பதைத் தெளிவு படுத்தி விட்டார்.
இந்த முறை இளைஞர்களுக்கே அதிக வாய்ப்பு என்றும்
துறைமுகத்தில் இளைஞர் அணி போட்டியிடும் என்றும்
சபரீசன் உறுதி செய்து விட்டார்.
அப்புறம் என்ன? தொகுதி பறிபோன பிறகு
திமுகவில் ஒட்டிக் கொண்டிருக்க பழ கருப்பையாவுக்கு
பைத்தியமா என்ன? எனவேதான் விலகல்!
இனி திமுகவின் வாரிசு அரசியல், ஊழல் பற்றியெல்லாம்
பழ கருப்பையா ஆதாரத்தோடு பேசுவார்!
------------------------------------------------------------------

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...