
பெருமாள் கோவிலில் மட்டும் தீப ஆராதனையை பெருமாளுக்கு காட்டியவுடன், ஆர்த்தியை, கர்ப்பக் கிரகத்திலேயே அர்ச்சகர் வைத்து விட்டு வெளியே வரும்போது பக்தர்களுக்கு குங்குமமும் மஞ்சளும் கொடுப்பார்கள். ஆனால் தற்போது மாறி வரும் நாகரீக சூழ்நிலையாலும், பக்தர்களின் திருப்திக்காகவும், அர்ச்சகர் தீப ஆராதனையை வெளியில் எடுத்து வருகிறார்கள். கோயிலை பொருத்தவரையி்ல், பெருமாளை நேரடியாக கண் குளிர, தரிசிப்பது மட்டுமே பிரதானம். பெருமாள் கோயிலில் மட்டும் ஜோதிக்கு முக்கியத்துவம் இல்லை. பொதுவாக அர்ச்சகரின் தட்டு, தீபம், எதையும் பக்தர்கள் தொடக் கூடாது. சிவன் ஜோதி ரூபம் என்பதால், சிவன் கோவில்களில் ஜோதிக்கு முக்கியத்துவம் அதிகம், ஆகவே அங்கு தீப ஆராதனையை பக்தர்கள் தொட்டு வணங்கலாம் என்கிறார்கள் ஆன்மீகவாதிகள்.
No comments:
Post a Comment