Monday, November 30, 2020

பொருளாதாரம் என்பது என்ன பெரிய ராக்கெட் சைன்ஸா?

 இந்தியாவின் பொருளாதாரம் இன்று வீழ்கிறது, அது என்னவோ கத்திரிக்காய் வியாபரம் போல் தெருவில் போறவன், வர்றவன் எல்லாம் தன் பங்குக்கு கொஞ்சம் வீசி விட்டு செல்வதும், அதன் அடிப்படையே தெரியாமல் மீடியாக்களில் விவாதிப்பதும் கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. அதனால் அதன் அடிப்படையை நாம் புரிந்து கொண்டால் அடுத்து பேசும் அறைவேக்காடுகளை கேள்வி கேட்க, அல்லது குறைந்தபட்சம் அதை சீரியஸாக கேட்காமல் போக உதவும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். இதை எழுதும்போது முதல் முறையாக நான் படித்த Finance மூன்று காசுக்கு உதவியது.

ஏதொன்றையும் புரிந்துகொள்ள வேண்டுமெனில் அதை சிறிய அளவில், நமக்கு தெரிந்த வடிவில் ஒரு மினியேச்சர் போல பார்த்தால் எளிதில் புரியும். அதை நாம் செய்தால் எதுவும் ராக்கெட் சைன்ஸ் அல்ல..
சிறுக்கிணர் எனும் சிற்றூர், அங்கு 50 குடும்பங்களே வாழ்கின்றனர். அங்குள்ள பெரும்பான்மையான் நிழங்களை வைத்திருப்பவர் 5 பெரிய மிராசுதாரர்கள். அவர்கள் விவசாயம் செய்வதற்கு ஏற்ப விவசாய கூலி ஆட்கள் தேவை. மீதி 10 பேர் சிறு விவசாயிகள், அவர்கள் நிலத்தில் வேலை இருந்தால் செய்வார்கள், இல்லையெனில் அந்த 5 ல் ஒரு விவசாயியிடம் வேலை செய்வார்கள். அதைப்போல மேலும் 25 குடும்பங்கள் அந்த 5 மிராசுதாரர்களிடம் வேலை செய்வார்கள். மீதி 10 குடும்பம் சலவை, முடி திருத்தும், செருப்பு தைக்கும், வீடு கட்டும் தொழிலாளிகள்.
அந்த 5 மிராசுதாரர்கள் தங்களின் தோட்டத்தில் 10 ஏக்கர் வீதம் சோளம் பயிரிடுவார்கள். அது அந்த கிராமத்தின் முக்கிய உணவு தானியம். அதை எடுத்துவிட்டு புகையிலை பயிர் செய்வார்கள். கிராமத்திற்கு தேவையான சோளத்தை வைத்துக்கொண்டு மீதியை அருகில் உள்ள சந்தையில் விற்பார்கள். அதே சமயம் எல்லா புகையிலையும் வெளியே சென்று விற்று பணம் 💰 சம்பாதிப்பார்கள்.
அவர்கள் தோட்டத்தில் வேலை இருக்கும்போது அங்கு வேலை செய்து ஒரு பங்கு சோளம் உணவுக்காகவும், மறு பங்கு பணமாகவும் கூலியாக பெறுவர். அந்த பணத்தை கொண்டு சிறு விவசாயிகளிடம் இருந்து காய், கறி, கனிகள் வாங்கி உணவிற்காக பயன்படுத்துவார்கள்.
அதை தவிர மீதி இருக்கும் பணத்தை மற்ற தொழிலாளிகளுக்கு சலவை செய்வதற்கும், முடி வெட்ட, செருப்பு தைக்க கொடுப்பார்கள்.
அவர்கள் உணவு, காய்கறி வாங்க மிராசுகளிடமும், சிறு விவசாயிகளிடமும பணம் கொடுத்து வாங்குவர். இப்போதைக்கு ஒரு கிலோ சோளம் ₹10 என்றும் காய்கறிகள் கிலோ ₹15 என்றும், கனிகள் ₹20 என்றும் வைத்துக்கொள்வோம்.
இந்த வகையில் வெளியில் இருந்து புகையிலை விற்ற பணம் மிராசுகளிடம் மட்டும் இல்லாமல் எல்லோரிடமும் கைமாறுவதே பொருளாதாரம். அதை பிரித்து பொருள் + ஆதாரம் என்று சொல்லலாம். அதாவது பொருளை வாங்கு ஆதாரமான பணம் 💰 என்பதே அதன் அர்த்த்ம்.
இப்போது வெளியில் புகையிலைக்கு டிமாண்ட் கூடுகிறது. அப்படியெனில் மிராசுகள் வழக்கத்திற்கு அதிகமான நிலத்தில் புகையிலை பயிர் செய்வார்கள் எனில், அவர்களுக்கு கூடுதல் விவசாய கூலி ஆட்கள் தேவை அல்லது அவர்கள் அதிக நேரம் உழைக்க வேண்டும். எனவே அவர்களுக்கு அதிக கூலி கிடைக்கும். அதையும் மீறி தேவைப்படும்போது கூலி தொழிலாளி தன் ஒரு நாள் கூலியை ₹100 இருந்து ₹125 உயர்த்துவான்.
இப்போது அவர்கள் கையில் அதிக பணம் இருக்கும். எல்லோரும் அதிக சோளம், காய்கறி வாங்குவர். ஆனால் காய்கறி உற்பத்தி அதே அளவில் தான் இருக்கும். இப்போது தேவை அதிகரிப்பதால்
ஒரு கிலோ சோளம் ₹15 என்றும் காய்கறிகள் கிலோ ₹20 என்றும், கனிகள் ₹25 என்று உயறும். அதே நபர்கள், அதே காய்கறி ஆனால் வெளியில் இருந்து பணம் அதிகம் வந்ததால் உயர்ந்து விட்டது. அதைத்தான் பண வீக்கம் (inflation) என்று பொருளாதாரத்தில் சொல்வார்கள்.
சரி ஆட்சி மாறுகிறது, காட்சியும் மாறுகிறது. புதிதாக வந்த அரசு புகையிலை பயன்படுத்துவதை தடை செய்கிறது. எனவே விவசாயிகள் புகையிலை பயிர் செய்வதை நிறுத்துகிறார்கள். அதனால் இப்போது அந்த மிராசு மூலம் வெளியில் இருந்து பணம் வருவது குறைகிறது. எனில் விவசாயம் செய்யும் நில அளவை குறைக்கிறார்கள். இப்போது நிறைய பேர் வேலை செய்ய இருந்தாலும், வேலை இல்லாததால் ₹125 கூலியை ₹80 தான் கொடுப்பேன் என்று சொன்னாலும் அதற்கும் ஆட்கள் வருகிறார்கள். இப்போது பண புழக்கம் தொழிலாளிகளிசம் குறைவதால் காய்கறி வாங்க ஆள் இல்லை, அதன் விலையும் குறைகிறது. சலவை செய்வது, முடி திருத்துவது, செருப்பு தைப்பது எல்லாம் குறைய இப்போது தேவை குறைவதால்
ஒரு கிலோ சோளம் ₹8 என்றும் காய்கறிகள் கிலோ ₹10 என்றும், கனிகள் ₹15 என்று குறையும். அதே நபர்கள், அதே காய்கறி ஆனால் வெளியில் இருந்து பணம் குறைவாக வந்ததால் தாழ்ந்துவிட்டது. அதைத்தான் பண இறக்கம் (-ve inflation) என்று பொருளாதாரத்தில் சொல்வார்கள்.
இப்படி பணம் 💰 கைமாறுவதும், அதன் அளவுகளுக்கு ஏற்ப அதன் விலை ஏறுவதோ அல்லது குறைவதோ நடக்கும். விலை ஏறும்போது அதிக பண பரிமாற்றம் நடக்கும். அப்போது பொருளாதாரம் வளர்கிற்து என்றும், பரிமாற்றம் குறையும்போது பொருளாதாரம் வீழ்கிறது என்று சொல்வார்கள்.
இப்போது இந்திய நாட்டின் பொருளாதாரத்தையும், அதை பற்றி வாய் கிழிய பேசுபவர்களிடமும் இதைப்பற்றி கேட்டுப்பாருங்கள், அவர்கள் உங்களிடம் பேசுவதை குறைத்துக் கொள்வார்கள்..
இது உங்களுக்கு எளிதாக புரிந்து பயனுள்ளதாக இருந்தால் கமெண்ட் செய்யுங்கள். அதற்கேற்ப அரசாங்கம் என்பது இங்கே எப்படி வருகிறது என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.
ஆதாரத்துடன் பொருளாதாரம்.
எப்படி படித்த முட்டாள்களால் பொருளாதாரம் பாழ்படுகிறது என்று தெரிந்துகொள்ள

உங்கள் WiFi திருடப்படுகிறதா?

உங்கள் WiFi திருடப்படுகிறதா? என்று கேட்டால் பதில் சொல்வது கஷ்டம். ஆனால் வாய்ப்புகள் நிறையவே உண்டு!!!
நாம் பெரும்பாலும் WiFi Dongle அல்லது Broadband WiFi பயன்படுத்துவது உண்டு. அவற்றிற்கு சில வழிகளில் உங்கள் Password ஐ விபரம் தெரிந்த ஒருவரால் திருட முடியும்!
சமீபத்தில் எனது WiFi ஒன்றின் பயன்பாடு மிக அதிகமாக இருந்தது. அது ஆரம்பத்தில் கொஞ்சம் அதிகமாக, பின் படிப்படியாக அதன் பயன்பாடு மிக அதிகமாகி அதுனுடைய Daily Quota விரைவில் முடிவது கண்டு சந்தேகம் கொண்டேன். அதன் பின்
Monitor செய்தபோது அதிக எண்ணிக்கையில் Connection, WiFi Device உடன் தொடர்பில் உள்ளதை அறிந்து, உடனே Default ஆக வரும் Password களை மாற்றியபின் அது முற்றிலும் தடுக்கப்பட்டது.
அது எப்படி என்ற விளக்கத்தை பாதுகாப்பு கருதி இங்கு தவிர்க்கிறேன்.
முக்கியமாக ஒரு WiFi Device வாங்கினால் அதன் Default Password களை உடனே மாற்றவும். இதில் தவறானவர்கள், தவறான வழியில் ஏதேனும் நம் WiFi மூலம் செய்தால், நாமும் நம் அறியாமையால் அந்த குற்றத்திற்கு பொறுப்பாகிறோம் என்பதை ஞாபகத்தில் கொள்ளவும். வேண்டியவர்களுக்கு பகிரவும்.
அக்கறையுடன்.

இன்றும் முடிவு இல்லை என்று புலம்பல் அதிகமாக உள்ளது..

 அரசியல் என்பது உங்களுக்கு சாதாரணமாக இருக்கலாம்..

அவருக்கு தூய்மையாக இருக்க வேண்டும்..
ஒரு சாதாரண அரசியல் மாற்றத்தை விரும்பும் மக்களுக்கு அவரது நகர்வுகள் எரிச்சலை ஏற்படுத்தலாம்.. ஆனால் அவரது ரசிகர்களுக்கு அவரைப் பற்றி நன்கு தெரியும்..
அவருடைய நிலைப்பாடு பற்றி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என்று சொல்லி இருக்கிறார்..
முடிவு எடுக்கும் முழு உரிமையும் அவருக்கு மட்டுமே உள்ளது.. அதற்கு அவகாசம் கொடுப்பதால் ஒன்றும் குறைந்து விடப் போவதில்லை..
ஒரு நல்ல விஷயம் அவ்வளவு சீக்கிரம் நடந்து விடாது..
புலம்புபவர்கள் தொடர்ந்து புலம்புங்கள்..
அவரை விரும்புபவர்கள் அவரது முடிவை முழு மனதோடு ஏற்பார்கள்..
திராவிட சித்தாந்தவாதிகள்..
தொடர்ந்து அவரை நக்கல் செய்வார்கள்..
நையாண்டி பேசுவார்கள்..
அவர் வந்தால் நல்லது..
வராவிட்டால் அவரை எதிர்ப்பவர்களுக்கு நல்லது..
இங்கு எத்தனை பேர் இனி வந்தாலும்..
ஆன்மீக அரசியல் அவரால் மட்டுமே சாத்தியமாகும்..
Image may contain: 1 person, standing

*வறட்டி ஏன் சுவர்களில்???*

 *வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும்...?*

*திகைக்க வைக்கும் விஞ்ஞான உண்மை: அவர்களின் கால் தூசுக்கு ஈடாகுமா இன்றைய கண்டுபிடிப்பு...???*
💠 பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?
அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும்,
💠சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.
💠அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.
💠18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால்,
💠வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
💠அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும்.
💠ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.
💠மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது.
💠சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
💠மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.
💠வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர்.
💠ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம்...
அறிந்து கொண்டேன்.🙏

நீரிழிவு_நோய்’-#அன்றும்_இன்றும்.

 உலக மக்கள் தொகையில் சுமார் 100-க்கு 20 பேருக்கு சர்க்கரை வியாதி எனப்படும் நீரிழிவு நோய் இன்னும் பத்து ஆண்டுகளில் இருக்கும் என ஆய்வுகள் தெரிவித்திருக்கிறது.

சர்க்கரை நோயை சமாளிப்பதும் சாத்தியமே! விரைவில் நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றவர்களைப்போல சாதாரண வாழ்வுக்கு மாறும் காலம் வந்து விட்டது!
அன்று ரத்தத்தில் சர்க்கரை அளவு 140 மி.கி. அளவுக்கு மேல் இருந்தால் நீரிழிவு நோய் என்று சொன்னார்கள். இன்று 140 மி.கி. அளவை தாண்டினாலே உங்களுக்கு பாதிப்பு அதிகம் என்று சொல்லப்படுகிறது.
IFG என்பது Impaired Fasting Gulucose காலையில் வெறும் வயிற்றில் 110 மி.கி. அளவுக்கு மேல் போனால் IGT என்பது Impaired Gulucose Toterance உணவு உட்கொண்டு இரண்டு மணி நேரம் கழித்து 140 மி.கி. அளவை தாண்டிவிட்டது. அப்படிப்பார்த்தால் இன்றைய நிலையில் 20 விழுக்காடு இதில் ஏதாவது ஒருவகையில் சேருவார்கள். நீங்களும் உடனடியாக பரிசோதித்து பாருங்கள். அப்படியிருந்தால் உடனடியாக சிகிச்சை முறையை மேற்கொள்ள வேண்டும்.
உடல் உழைப்புடன் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். சோம்பேறித்தனத்திற்கு விடை கொடுங்கள். அன்று சிறுநீரில் சர்க்கரை அளவைப் பார்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று சிறுநீரில் அளவு காலாவதியாகி விட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு மட்டுமல்ல, கொழுப்பான அளவும், ரத்தக்கொதிப்பு எனும் Hypertension. உடல் எடை, வாழ்க்கை முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கொழுப்புச் சத்து பற்றி அன்றைய சிகிச்சை முறையில் கணக்கிடப்படவில்லை இன்று இதுவும் முக்கியம் என்றாகி விட்டது. அன்று வேளைக்கு அல்லது நாளுக்கு ஒரு மாத்திரை என சொல்லப்பட்டது. இன்று சர்க்கரை வியாதி வந்து விட்டால் சர்க்கரையை கட்டுப்படுத்த மட்டுமல்ல, கொழுப்புச்சத்தை கட்டுப்படுத்த, சிறுநீர் பாதிப்பை தடுக்க, ரத்தக்குழாய்களில் அடைப்பதை தடுக்க என சிகிச்சை அவசியமாகிவிட்டது.
அன்று இன்சுலின் ஊசி கடைசி ஆயுதமாக சிகிச்சை முறையில் இருந்தது. இன்று தேவைக்கு ஏற்ப இன்சுலின் சிகிச்சை உண்டு. பாதிப்புகளைத் தடுக்க மாத்திரையில் இருந்து இன்சுலினுக்கு மாறலாம். சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தபின் இன்சுலினிலிருந்து மாத்திரைக்கு மாறலாம்.
முன்பு 3 மாத கட்டுப்பாட்டை அறிய வழி இல்லை இன்று HbAIC என்னும் பரிசோதனையைச் செய்தால் உங்கள் கட்டுப்பாட்டின் நிலைமை புரிந்து விடும். அன்று இன்சுலின் ஊசியை கண்டாலே பயம். இன்று வலி இல்லாத பேனா வகை இன்சுலின் சிகிச்சை கிடைக்கிறது. இன்று இதனால் ஏற்படும் சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு, ரத்தக்குழாய்களின் அடைப்பு என பாதிப்புகளைத் தடுக்கும் முறை அவசியமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
முன்பு நீரிழிவாய் கண்களில் ஏற்படும் பாதிப்புகளை களைய சிகிச்சை முறை குறைவு. இன்றைய லேசர் முறை சிகிச்சைகள் அபரிமிதமான வளர்ச்சியில் சிகிச்சையில் பல்வேறு பரிணாமங்களைத் தொட்டு வருகிறது. நீரிழிவு நோய் & Life Style disease: வாழ்நாள் முழுவதும் சிகிச்சை முறை அவசியம் என இன்று வற்புறுத்தப்படுகிறது. இந்நோய் தடுப்பு முறைகள் தற்போது திருமணத்திற்கு முன்பாக, குழந்தைப் பேறுக்கும் முன்பாக, முடியாவிட்டால் குழந்தைப் பருவத்திலிருந்தே மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்தக்கேள்வி இந்நோய் தடுப்பதில் அனைவரும் பங்கேற்க வேண்டும். பலகரங்கள் இணைந்தால் மட்டுமே இது சாத்தியம். இப்படி அனைவரின் ஒத்துழைப்பு இன்று அவசியமாகி விட்டது. விழிப்புணர்வு மட்டுமே இந்நோயை தடுக்கும் தாரக மந்திரம்!

காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவருக்கு அபராதம் விதிப்பு- நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு.

 குமரி மாவட்ட போலீசார் நடவடிக்கையால் காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதுதொடர்பாக நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றவருக்கு அபராதம் விதிப்பு- நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு
கார் பயணம்


















சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க மோட்டார் சைக்கிளில் செல்கிறவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். கார்களில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டது. இதை மீறி செயல்படுகிறவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார், பல்வேறு அமைப்புகள் சார்பில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதையும் மீறி சிலர் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள். அவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். அவ்வாறு அபராதம் விதிக்கும்போது, சில குளறுபடிகள் நடக்கின்றன. அதாவது காரில் பயணிப்பவர்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி அவர்களுக்கு அபராதம் விதித்து போலீசார் தரப்பில் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. அதுபோல் தான் தற்போது காரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை அருகே உள்ள தாழையூத்து சங்கர்நகரை சேர்ந்தவர் ஆபிரகாம் டேவிட். இவர் சொந்தமாக கார் வைத்துள்ளார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த 7-9-2020 அன்று குமரி மாவட்ட போலீசார் ஒரு குறுந்தகவல் அனுப்பினர்.

அதில், நீங்கள் காரில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் சென்று உள்ளீர்கள். அதனால் உங்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது என்றும், அந்த தொகையை ஆன்லைனில் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆபிரகாம் டேவிட் உடனடியாக அபராத தொகையை ஆன்லைனில் செலுத்தினார்.

மேலும், இது தொடர்பாக நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல் பிரம்மா மூலம் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, அபராதம் விதித்த சப்-இன்ஸ்பெக்டர், வட்டார போக்குவரத்து அதிகாரி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 29-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

84 வயது பொன்முத்துராமலிங்கத்துக்கு வழங்கப்பட்ட பதவியால் தகிக்கும் மதுரை திமுக!



திமுக தலைவர் கருணாநிதிக்கு வயதாக வயதாக திமுகவுக்கும் வயதாகிக்கொண்டே வந்தது. திமுக நிர்வாகிகள் பலரும் 20, 30 ஆண்டுகளாக பதவிகளை விட்டுக்கொடுக்காமல் வைத்திருந்ததால், திமுக என்றாலே 70+ வயதானவர்களின், முதியவர்களின் கட்சி என்றானது.

ஆனால் அதிமுகவிலோ அடிக்கடி நிர்வாகிகளை ஜெயலலிதா மாற்றிக்கொண்டே இருப்பார். தேர்தல்களிலும் புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார். எளிய தொண்டர்கூட பெரிய பதவிகளுக்கு வர முடிந்தது. அதற்கு எடுத்துக்காட்டு தான் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

திமுகவுக்கு ஐடியாமணியாக ஐபேக் நிறுவனம் வந்தபின்னும்கூட திமுக நிர்வாகத்தில் வேறெந்த மாற்றமும் வரவில்லை. கட்சியில் இளைஞர்கள் என்ற பெயரில், பொன்முடி, துரைமுருகன் போன்ற சீனியர்களின் வாரிசுகள் மட்டுமே மீண்டும் பதவிக்கு வருகிறார்கள். இந்நிலையில் மதுரை திமுக மிகப்பெரிய தள்ளாட்டத்தில் இருக்கிறது.

மதுரை மாநகர் திமுகவை இரண்டாகப் பிரித்து இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாக இருந்தது. அதில் மதுரை தெற்கின் பொறுப்பாளராக தளபதி என்பவரையும், மதுரை வடக்கின் பொறுப்பாளராக 84 வயது பொன்முத்துராமலிங்கத்தையும் நியமித்துள்ளனர். இந்த பொன்முத்துராமலிங்கத்தின் நியமனம் தான் மதுரை மாநகர் திமுகவினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொன்முத்துராமலிங்கம் ஏற்கனவே 30 ஆண்டுகாலமாக மாவட்ட நிர்வாகியாக இருந்தவர். தற்போது வயது மூப்பின் காரணமாக ஒதுங்கியிருந்தார். இந்நிலையில் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துவந்து பொறுப்பாளர் பதவி தரப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு ஏற்கனவே முன்னாள் எம்.எல்.ஏ வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலி, திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணன், பொன்முத்துவின் மகன் பொன்.சேது ஆகியோர் போட்டியில் இருந்த நிலையில், வயதானவருக்கு இந்த பதவி கிடைத்திருப்பதால் அவரால் இன்றைய காலத்து அரசியல்வாதிகளுடன் ஆக்டிவாகச் செயல்பட முடியாதே என்று கேள்வி எழுந்துள்ளது. துடிப்பான பலரும் பதவிக்காகக் காத்திருக்கும்போது ஒரு முதியவருக்கு பதவியைக் கொடுத்திருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் இப்போதே மதுரை திமுகவில் கலாட்டா தொடங்கிவிட்டது!

வெறும் வயிற்றில் வெள்ளைப் பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்!

 வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.
பயன்கள்:
ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.
அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.
தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வெள்ளை பூசணி சாறை தினமும் காலையில் குடித்து வாருங்கள். இதில் கலோரிகள் மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றிவிடும்.
உடல் சூட்டினால் கஷ்டப்படுபவர்கள், வெள்ளைப் பூசணி சாறை குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சியுடன் இருக்கும்.
வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும். உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.
சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் இரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்றவற்றினால் ஏற்படும் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.
Image may contain: food

இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை, டிசிஎஸ் நிறுவனர் எஃப்சி கோலி காலமானார்.

 

😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
இந்திய கம்ப்யூட்டர் இண்டஸ்ட்ரியின் தந்தையான, டிசிஎஸ் நிறுவனத்தின் நிறுவனர் எஃப்சி கோலி காலமானார். அவருக்கு வயது 96.
டாடா குழுமத்தின் மென்பொருள் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ்(டிசிஎஸ்)ஐ நிறுவியவர் எஃப்சி கோலி. டிசிஎஸ் நிறுவனத்தை உலகளவில் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக உயர்த்தியவர்.
டாடா சன்ஸ் லிமிடெட் நிறுவன போர்டு இயக்குநராக இருந்த கோலி, டாடா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டாடா யுனிசெஸ் லிமிடெட், டாடா எலெக்ட்ரிக் கம்பெனி, டாடா ஹனிவெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் போர்டு இயக்குநராகவும் இருந்தவர். டாடா குழுமத்தின் பிரபலமான முகமாக இருந்தவர் எஃப்சி கோலி.
1924ம் ஆண்டு பிறந்து, ஐடி துறையில் சாதித்த எஃப்சி கோலி, இந்திய ஐடி இண்டஸ்ட்ரியின் தந்தை என்கிற அளவிற்கு திறமையாலும் உழைப்பாலும் உயர்ந்தவர். வயது முதிர்வால் இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 96.
Image may contain: one or more people and closeup, text that says 'BREAKING: மிக முக்கிய பிரபலம் மரணம்... இந்தியர்கள் சோகம்!'

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...