Tuesday, November 17, 2020

'துரைமுருகனை ராஜினாமா செய்ய சொல்வாரா ஸ்டாலின்?'

 ''தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகனின் மருமகள், இரு குவாரிகளை குத்தகைக்கு எடுத்துள்ளார். துரைமுருகனையும், பொன்முடியையும், ராஜினாமா செய்யும்படி கூற, ஸ்டாலினுக்கு தைரியம் உள்ளதா,'' என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார்.

DMK,MK Stalin, Durai Murugan, திமுக, ஸ்டாலின், துரை முருகன்


அவர் அளித்த பேட்டி: வானுார், அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., சக்ரபாணி மகன் பிரபுவுக்கு, விழுப்புரம் மாவட்டம், திருவக்கரையில், சட்ட விதிகளுக்கு புறம்பாக, கல் குவாரி உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். எம்.எல்.ஏ., மகன் முறையாக, அரசால் அறிவிக்கப்பட்ட, சட்டப்பூர்வமான பொது ஏலத்தில் பங்கேற்று, குவாரியை ஏலம் எடுத்தார். பொது ஊழியர் குடும்பத்தினர், உறவினர்கள், ஏலத்தில் பங்கு பெறக்கூடாது என, எந்த சட்டத்திலும் கூறப்படவில்லை.தினமும் அறிக்கை விடுகிறேன் என்ற பெயரில், 'காமெடி' செய்யக் கூடாது. அறிக்கை வெளியிடுவதற்கு முன், அதில் உள்ளது சரியா, தவறா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.


latest tamil news




நிறைய குழப்பம்:


தி.மு.க.,வில் இருப்பவர்கள் புத்தர், இயேசு, காந்தி அல்ல. அவர்கள் யாரும் தொழில் செய்யவில்லையா; முதலில், தன் முதுகில் உள்ள அழுக்கை பார்க்க வேண்டும். தி.மு.க.,விற்குள் நிறைய குழப்பம். தலைமையில் அதிகார போட்டி நடக்கிறது. அதை மறைக்க, நேரடியாக துரைமுருகன், பொன்முடியை, கட்சியை விட்டு விலகும்படி கூற தைரியமில்லை. நான் தவறு செய்திருந்தால், ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.

பொது ஊழியராக உள்ள, தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், பல்வேறு குத்தகை எடுத்து, தொழில் செய்கின்றனர்.அவர்களை ராஜினாமா செய்யும்படி சொல்ல, ஸ்டாலினுக்கு, தைரியம் இருக்கிறதா? தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அவரது மகன் எம்.பி.,யாக உள்ளார். அவரது மனைவி சங்கீதா பெயரில், காட்பாடி தொகுதி, அரும்பாக்கம் கிராமத்தில், இரண்டு கல் குவாரிகள், இரு மாதங்களுக்கு முன், ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.


நேரடியாக அனுமதி:


எனவே, துரைமுருகனை ராஜினாமா செய்ய சொல்வாரா ஸ்டாலின்? அதேபோல, ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டு, 100 சதவீதம் பொன்முடிக்கும் பொருந்தும். அவர் கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது, தற்போது எம்.பி.யாக உள்ள, அவரது மகன் கவுதம் சிகாமணி, செம்மண் எடுக்க அனுமதி கோரி, அரசிடம் விண்ணப்பம் கொடுத்தார்.துறை அமைச்சரான, அவரது தந்தை பொன்முடி, செம்மண் எடுத்து விற்க அனுமதி கொடுத்தார். பொது ஏலம் நடத்தாமல், நேரடியாக அனுமதி வழங்கப்பட்டது.

பொன்முடி தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார். இது தொடர்பாக, பொன்முடி மீது வழக்கு நடந்து வருகிறது. அனிதா ராதாகிருஷ்ணன், கே.என்.நேரு உட்பட பலரும், குவாரி நடத்துகின்றனர். சட்டப்படி குவாரி நடத்துவோரை, நான் குற்றம் கூறவில்லை. ஆனால், ஸ்டாலின் கூறிய கருத்தின்படி, அவர்களை ராஜினாமா செய்யும்படி சொல்லத் தயாரா?துரைமுருகன், பொன்முடி ஆகியோரை, ராஜினாமா செய்யும்படி, ஸ்டாலின் கூறினால், வீரன் என்று ஏற்றுக் கொள்கிறேன்.

பொது ஊழியர் யார், அவர்கள் என்ன செய்யலாம்; என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து பேச வேண்டும். எம்.எல்.ஏ.,வாக இருப்பவரும் பொது ஊழியர். அதில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பேதமில்லை. எந்த கொம்பனுக்கும், அ.தி.மு.க., பயப்படாது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...