Thursday, November 26, 2020

மாநில அரசு. நன்றாக. செயல்பட்டது. மத்தியயரசு இதுவறை. எந்த உதவியும். செய்யவில்லை.

 நிவார் புயலை வெற்றிகரமாகவே இந்த மாநில அரசு கையாண்டிருப்பதாக தெரிகிறது.

நான் இருக்கும் இடத்திலே மின்சாரம் தொடர்ந்து இருந்தது. ஒரு அரை மணி நேரம் நேற்று இல்லை. இன்று காற்று அதிவேகத்தோடு வீசிய போது ஒரு மணி நேரம் நிறுத்தினார்கள் அவ்வளவு தான்.
இணைய இணைப்பும் அலைபேசி இணைப்பும் தொடர்ந்து இருந்தது. பால், காய்கறி உட்பட எந்த அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு இல்லை.
கடலூர், பாண்டிச்சேரி பக்கம் நிலை எப்படி ஆனது என பார்க்கவேண்டும். அங்கே பாதிப்பு எப்படி?
கம்மினிஸ்ட் கம்மினிட்டிகளோ இலங்கையிலே நடந்ததை எடுத்துப்போட்டு பேர் வைக்கப்படாத மர்மநபர்களுக்காக வாங்கின காசுக்கு கூவிக்கொண்டிருக்கிறதுகள்.
மானங்கெட்ட ஊடகங்களோ பேர் வைக்கப்படாத மர்மநபர்களின் 2015 படத்தை எடுத்துப்போட்டு உருண்டுகொண்டிருக்கின்றன.
இந்த அரசு வர்தா புயலின் போது செயல்பட்டதை விட மிக நன்றாகவே செயல்பட்டிருக்கிறது. வர்தா புயலின் போது இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லை.
கோவிட் பிரச்சினையிலே வாங்கின ரிவிட் இந்த அரசு அதிகாரிகளுக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது போலும். அதனால் இந்த முறை உள்துறை அமைச்சகம் கூப்பிட்டு அனுப்பவேண்டிய அவசியமில்லாமல் பார்த்துக்கொண்டார்கள்.
இதே போல் இன்னும் ஆறு மாதம் மத்திய அரசின் பேச்சை கேட்டு செயல்பட்டால் டிமிக்கா எனும் திருட்டு கும்பலை தமிழகத்திலே இருந்து வேரோடு வேரடி மண்ணோடு ஒழித்துவிடலாம்.
குறிப்பு : அதென்னா கோவிட் பிரச்சினையிலே ரிவிட் என கேட்பவர்களுக்கு , கோவிட் லாக்டவுன் இருந்தபோது மத்திய அரசு ஈபாஸ் கூடாது என சொன்னபிறகும் இங்கே இருக்கும் என ஆடினார்களே ஞாபகம் இருக்கிறதா. அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஆணை அனுப்பி தமிழக தலைமை செயலாளர், முதன்மை செயலாளர், தமிழக உள்துறை செயலாளர், முதலமைச்சரின் செயலர் என எல்லோரையும் டெல்லிக்கு கூப்பிட்டு ரிவிட் யு நோ ரிவிட் அதை அடித்து அனுப்பியது. அப்புறம் தான் மத்திய உள்துறை அமைச்சு சொல்வது படி இங்கே செய்தார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...