Monday, November 16, 2020

மூக்குத்தி_அம்மன்_சொல்லும்_பாடம்"

 இந்துக்களுக்கு எதிரி தனியாக இல்லை, அவர்களது அறியாமையும் பக்குவமின்மையும்தான் அவர்களுக்கு எதிரி,

அந்த அறியாமையை பயன்படுத்தி, இந்துக்களின் பாதுகாவலர்கள் போல நடிக்கும் அரசியல் வாதிகளுக்கும் கார்பரேட் ஆசிரம வாசிகளுக்கும் எதிராக சூலத்தை ஏந்துகிறாள் இந்த மூக்குத்தி அம்மன்
*"சாமி படங்களில் கஷ்டபடும் நாயகன்/ நாயகியருக்கு கடவுளர்கள் உதவ வருவது போல இருக்கும், ஆனால் இந்த படத்தில் தனக்கான ஒரு தேவையை நிறைவேற்றி கொள்ள அம்மனே நேரில் வந்து பக்தனை தூண்டிவிட்டு செயல்பட வைத்து காரியத்தை செய்து முடிக்கிறாள்"*
*"நீங்க சாமிதானே!? உங்களால எதுவும் செய்ய முடியுமே!? ஏன் என்ன செய்ய சொல்றிங்க!?"* என்று நாயகன் கேட்குமிடத்தில்
*"மத்தவங்களுக்கு ஏதாவது கஷ்டம்னாதான் எங்க அருளை பயன்படுத்துவோம் எங்களுக்கு நாங்களே பயன் படுத்த மாட்டோம் அதுதான் எங்க பாலிசி"* என்று மூக்குத்தி அம்மன் பேசும் வசனம் போகிறபோக்கில் ஏதோ கிண்டல் போல தெரிந்தாலும்
கடவுள் தன்மையின் இலக்கணமே அதுதான் என்பதும் உண்மைதானே!?
அப்படி என்னதான் இந்த அம்மனுக்கு தேவை என்று கேட்டால் ஆச்சர்யமாகத்தான் உள்ளது, *"திருப்பதி திருமலை ஸ்ரீநிவாசர் கோயில் போல தனது கோயிலும் உலக பிரபலமாக வேண்டும், தினமும் 40லட்சம் பேர் தரிசனம் பன்ன வரனும்"* இத நீதான் செய்யனும் என்று உத்தரவு போடுகிறாள் அம்மன்!!
*"ஏன்டா!! உங்கம்மாவுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா, திருப்பதிக்கு போகனும்னு என்கிட்டயே வேண்டுவா!? அவர் கடவுள்னா அப்ப நா யாருடா!?"* என்று அம்மன் கொந்தளிக்கும் காட்சி நம்மை சுற்றியுள்ள இஷ்டதெய்வங்கள் மற்றும் குலதெய்வங்களின் மனக்குமுறல் என்றே சொல்லலாம், தெய்வங்களின் குமுறல்களையும் வெளிப்படுத்த ஒரு மூக்குத்தி அம்மன் வேண்டியிருக்கிறது போலும்
நாயகன் மனக்குழப்பத்தில் இருக்கும் பொழுது எல்லாம் ஆங்காங்கே *"மூக்குத்தி அம்மன் துணை"* என்று எழுதப்பட்டுள்ளதை கண்டு மூக்குத்தி அம்மன் மீதான ஒரு இனம்புரியாத ஈர்ப்பில் இருக்கிறான், எதிர்பாராத ஒரு தினத்தில் தங்கள் குலதெய்வமே மூக்குத்தி அம்மன்தான், அவளை சென்று ஒருமுறை தரிசித்தால் தங்கள் நடுத்தர வர்க்க குடும்ப கோளாறுகள் மாறும் என்று ஒரு சொந்தக்கார தாய்கிழவி சொல்லகேட்டு ஆலயத்திற்கு செல்லும் காட்சி அட்டகாசம்!!அட்டகாசம்!!
இந்த நவீன யுகத்திலும், *"சாமி படம் எடுத்து அதன் மூலம் நெஞ்சத்தை நெகிழ வைக்க முடியும் என்பதற்கு அந்த ஒரு காட்சி போதும்!!"*, ஆலயத்திற்குள் நுழைந்த உடனேயே *"பார்த்தேனே உனை நான்!!"* என்ற பாடலுடன் அம்மனுக்கும் நாயகனுக்கும் உள்ள வினைபந்தத்தை உணர வைக்கின்றனர்
சும்மா சொல்ல கூடாது, அம்மனை முதன்முறையாக தரிசிக்கும் பொழுது ஆர்ஜேபாலாஜி சும்மா பின்னி எடுத்திருக்கிறார், ஒரே ஷாட்டில் அவர் தேவியிடம் தனது குடும்பத்தின் தேவைகளை கூறி முறையிடும் பொழுது கண் கலங்குகிறது!!
*"குலதெய்வத்துக்கு கோவம் வந்தா குடும்பம் தாங்காதுனு சொல்றாங்க, உனக்கு கோவம் வர அளவுக்கு நாங்க என்ன பன்னோம்னு தெரியல!!"* என்று வசனங்கள் தரம் தரம்!!
அன்று இரவு ஆலயத்திலேயே உறங்கும் பொழுது *"அண்ட பகிரண்டத்தையும் ஆட்டி படைக்கும் பதியின் ஒரு கூறாக தேவி, மூக்குத்தி அம்மன் ஆலயத்தில் தோன்றி நாயகனுக்கு காட்சி தந்து, தன் ஆலயத்தை பிரபலப் படுத்த வேண்டும் என்று கூறுகிறாள்"*
தேவிக்கு ஏன் இந்த வேலை!? என்று கேட்கும் பொழுதே ஆரம்பத்தில் இருந்தே நாயகன் *"நாகர்கோயில் வெள்ளிமலை பகுதியில் 11ஏக்கர் நிலத்தை கார்பரேட் சுவாமியார் ஒருவர் ஸ்வாகா விட இருப்பதை தடுக்க நினைப்பதும், அந்த பகுதியில்தான் இந்த மூக்குத்தி அம்மன் ஆலயம் இருப்பதும் தன் ஆலயத்தை பிரபலப் படுத்துவது போல வந்து நாயகனின் ஊர் பொது நலனுக்கான முன்னெடுப்புகளில் கூடவே இருந்து அருள்பாலிப்பதுமாக முக்குத்தி அம்மன் உதவுகிறார்"*
ஒரு காட்சியில் திருப்பதி ஸ்ரீநிவாசரின் படத்தை பார்த்து நாயகனின் தாய், *"சொல்றதுலாம் காதுல விழுதா இல்லையா!? காதுல ரெண்டு தோடு பெருசா போட்டு அடச்சிருக்கியே எப்டி விழும், ஒழுங்கா கருணை பன்னு இல்லனா இருக்கவே இருக்கார் "சாய்பாபா" அந்த படத்த தூக்கி மாட்டிருவேன்!!"* என்று கூறுவது இன்றைய 99% இந்துக்களின் அப்பட்டமான மனநிலை
"பேய் இருக்குன்னு சொன்னாலும் நம்புவானுங்க சாமி வந்து நிக்கிதுனு சொன்னா நம்ப மாட்டானுங்க, நீ ஏதாவது ட்ரிக் பன்னி நம்ம கோயில பிரபலப் படுத்து!!" என்று யதார்த்தத்தை கூறும் அம்மன்,
"முதல்ல கடவுள நம்புங்கப்பா, கடவுள் எல்லாருக்கும் உதவ தயாரா இருக்கார் நம்பிக்கைதான் முக்கியம் என்று சொல்கிறார்"
அம்மனே நேரில் வந்தாலும் மனிதனுக்கு அருளாற்றலால் எல்லாவற்றயும் கொடுக்காமல் அவரவர் வினைப்படி வாழ்க்கை அமையும் என்று இந்த படத்தில் காட்டியிருப்பது ரொம்ப அருமை
நாயகனின் மூன்றாம் தங்கை, படிக்கும் பள்ளியால் சிறிது சிறிதாக கிறித்தவ சமயம் சாருவதும் அதனை இந்துவாகிய நாயகன் கன்னியாஸ்திரியிடமே நேரடியாக கேட்டு கண்டிப்பதும் இன்றைக்கு பல பெற்றோர்கள் கற்று கொள்ளவேண்டிய பாடம்
கடவுள் எங்க இருந்தாலும் அருள்பன்னுவார் அதற்கு திருப்பதிதான் போகனும்னு இல்லை நம்ம பக்கத்துல இருக்குற சாமிய குலதெய்வத்தை நம்பிக்கையோட கும்பிட்டா போதும் என்று கூறும் இந்த திரைப்படம்
"இந்துக்களாகிய நாம் கார்பரேட் சாமியார்களிடமும், இந்து மதத்தை முன்னெடுத்து சுயநல அரசியல் செய்பவர்களிடமும், நவீன மூட நம்பிக்கைகளிலும் இருந்து எப்படி தற்காத்து கொள்ள வேண்டும்" என்று தயக்கமின்றி கூறுகிறது
தன்னை ஒரு முற்போக்கு வாதியாகவே காட்டி கொளளும் ஆர்ஜேபாலாஜி, இநத படத்தில் "முற்போக்கு என்பதற்கு புது இலக்கணமே காட்டியிருக்கிறார்"
முற்போக்குவாதி என்றால் இந்து மதத்தை மட்டும் எதிர்க்கனும், நம்முடைய நம்பிக்கைகளை மறுக்கனும், குடும்ப கட்டமைப்பை எதிர்க்கனும், கிறித்தவ மதத்தை உயர்த்தி பேசனும், கடவுள் மறுப்பாளராக இருக்கனும் என்ற பிம்பங்களை உடைத்து *"உண்மையான முற்போக்கு இதுதான் என்று காட்டுகிறார்"*
படத்தின் முதல் காட்சியிலேயே "தொட்டது தொலங்கனும் வெச்சது வௌங்கனும் நல்லதே நடக்கனும் கடவுளே!! என்று நெற்றில் திருநீறு பூசும் ஆர்ஜேபாலாஜியின் அசாத்திய திறமை இன்றைய திரையுலகத்தில் புகுந்துள்ள முற்(பிற்)போக்கு தனத்து போரளிகளுக்கு எல்லாம் சவுக்கடி"
பாராட்டி பேச இந்த படத்தில் ஏராளமான விசயங்கள் உண்டு எல்லாவற்றயும் விரித்து பேசினால் நல்லாயிருக்காது என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன் என்றாலும், இவ்வளவு பேசிவிட்டு
"நயன்தாராவை பற்றி பேசலனா என் ஆத்மா சாந்தி அடையாது என்பதால்" அவங்கள பத்தியும் சொல்லிடுவோம், அம்மன் வேடத்தில் வருங்காட்சிகளை விட மப்டியில் வரும் காட்சிகளில் மனதை கவருகிறார்!! இயல்பாக அமர்ந்து வெள்ளரிக்காய் தின்பது பால் பொங்கல் சாப்பிடுவது என்று அவர் வரும் காட்சிகளில் எல்லாம் உண்மையிலேயே அந்த குலதெய்வத்தின் அருள் அந்த நாயகனுக்கு எப்படி அக்கறையுடன் கிடைக்கிறது என்று உணரும்படி இருக்கிறது
"இந்து மதத்தை அழிக்க இந்துக்களே போதும்!! என்ற மகாவாக்கியத்தின் அர்த்தத்தை இந்த படம் அழகாக சொல்கிறது"
நிச்சயமாக போலிகளின் பின்னால் சென்று புண்ணியன் அடியை கைவிடும் இந்துக்களுக்கு இந்த படம் ஒரு கண்திறப்பாக அமையலாம் என்று தோன்றுகிறது
*திருச்சிற்றம்பலம்*




No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...