Monday, November 16, 2020

சினிமா உலகத்தில் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு இவர்கள் முதலில் நடிக்கட்டும்.

 ஒரு ரூபாய் கொடுத்து விமானங்களில் பயணிக்க வேண்டும் என்பது தான் "சூரரை போற்று" படத்தின் கருவாம். நிஜவாழ்க்கையில் இது சாத்தியமா என்றால் கண்டிப்பாக இல்லை. ஒத்த ரூபாயில் விமானங்களுக்கு பெட்ரோல் கூட போட முடியாது. அப்படி இருக்கும் போது விமானிகள் சம்பளம், கேபின் க்ரூவிற்கு சம்பளம், ஏர்ப்போர்ட் செலவு என்று எதுவுமே ஈடுசெய்ய முடியாது என்பது தான் உண்மை. இருந்தாலும் ஒரு கற்பனைக்காக நிஜவாழ்க்கையில் இப்படி ஒரு விலை குறைந்த விமான சேவை இருந்தால் அது எப்படி இருந்திருக்கும் என்று ஒரு கற்பனை இதோ:

ஏர் சுக்கான் (ஏர் டெக்கான் இருக்கும் போது, ஏர் சுக்கான் இருக்கக்கூடாதா???) என்பது தான் நமது விமான நிறுவனத்தின் பெயர். ஏர்போர்டிற்கு பார்க்கிங் சார்ஜஸ், டாக்ஸியிங் சார்ஜஸ் எல்லாம் கொடுக்க முடியாது என்பதால் ஏதாவது ஒரு ஹைவேஸிலேயே நிறுத்தி ஏற்றி சேவையை தொடரும் நமது நிறுவனம். Airhostessஆக தேனி குஞ்சரம்மா, பறவை முனியம்மா மாதிரி ரிட்டயர்டு ஆயாக்களை வேலைக்கு அமர்த்துகிறோம். ஃப்ளைட் உள்ளே சீட்டே கிடையாது. இரண்டு மூன்று மணிநேர பயணத்திற்கு எதற்காக சீட்டு என்று அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு அதிக பயணிகளை ஏத்தறோம். எல்லாருமே ஸ்டாண்டிங்கில் தான் பயணிக்க வேண்டும் என்பதால் விமானத்தில் உணவுப்பொருட்கள் எதையும் எடுத்து செல்ல முடியாது.
On flight entertainmentகாக ஒரு பக்கம் பறவை முனியம்மா பாட, மறுபக்கத்தில் இருந்து தேனிகுஞ்சரம்மாவை எசப்பாட்டு பாட வைக்கிறோம். நிஜமான பைலட்டை வேலைக்கு வைத்தால் சம்பளம் அதிகமாக கேட்ப்பார்கள் என்று பத்து வருடங்களுக்கு மேல் experience உள்ள லாரி டிரைவர்களாக பார்த்து பைலட் டிரைனிங் கொடுத்து பைலெட் ஆக ஆக்கிவிடுறோம். எதிர்காலத்தில் சீசன் டிக்கெட், ஸ்டூடண்ட் பாஸ் எல்லாம் வழங்கலாம் என்று ஒரு ஐடியா இருக்கு. பிளைட் ஸ்டார்ட் ஆகாமல் போனால் பயணிகள் இறங்கி தள்ளிவிட்டு ஸ்டார்ட் பண்ண பயணிகள் தான் உதவ வேண்டும் ஒரு நிபந்தனையினை டிக்கெட் வழங்கும் போதே டெர்மஸ் அண்ட் கண்டிஷனில் சேர்த்து விடுகிறோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...