



இன, மத, மொழி பேதமின்றி நம் நாட்டு மக்கள் கோயிலாக இருந்தாலும் சரி, வீடாக இருந்தாலும் சரி தினசரி பூஜைகள், விரதங்கள், ஹோமங் கள், யாகங்கள் என்று பலவாறாக தெய்வத்தை வணங்குகிறார்கள். இப்படி இருக்க நம் நாட்டு பெண்கள் தினமும் வீட்டில் பூஜை செய்வது என்பது ஒரு பழக்கமாக உள்ளது.



சாந்தமான தெய்வங்களே வீட்டுக்கு நல்லது. குடும்பம் சந்தோஷமாக, ஐஸ்வர்யத்துடன் வாழ வேண்டும் என்று அனைவரும் விரும்புவது உண்டு. ஆகையால் உக்ர தெய்வங்களை வழிபடுவது அவ்வளவாக உகந்தது அல்ல.
உக்ர தெய்வங்களை வழிபடுவது என்றால் அதற்கு சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். சில வீடுகளில் சில உக்ர தெய்வங்களை வழிபடுபவர்கள் உண்டு. அப்படி இருக்கும் பட்சத்தில் தனியாக சுத்தமாக இருக்க வேண்டும்.
தெய்வச் சிலைகளை சில பேர் வீட்டில் வைத்து பூஜை செய்வது உண்டு. சிலைகள் எப்பொழுதுமே 2 அடிக்கு மேல் இருக்க கூடாது. மண் சிலைகளாக இருந்தாலும் சரி, விக்ரஹங்களாக இருந்தாலும் சரி, முறையாக பூஜை செய்ய வேண்டும். அப்படி செய்யாமல் வைத்திருந்தால் நமக்கு பலன் ஏதும் இல்லை.

பூஜைக்கு ஏற்ற மலர்கள் என்று பார்த்தால் வாசனை மலர்களால் மட்டுமே அர்ச்சனை செய்வது நல்லது. கண்டிப்பாக செவ்வரளி மலர் வீட்டில் பூஜைக்கு ஏற்றதல்ல. கோவிலில் துர்க்கைக்கு மற்றும் அம்மனுக்கு அரளி பூ உகந்தது. ஆனால் வீட்டில் அரளி பூவால் அர்ச்சனை செய்யக் கூடாது. சிவனுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, விநாயகருக்கு அருகம்புல் பெண் தெய்வங்களுக்கு மல்லிகை, முல்லை, மற்றும் ஜாதி, தாமரை இப்படி அர்ச்சனை செய்து பூஜை செய்தால் நல்லது.
தெய்வங்களுக்கு பொதுவாக நாம் எந்த மலரால் அர்ச்சனை செய்கிறோமோ அதற்கு ஏற்ற பலன் இப்பிறவியில் மட்டுமேயன்றி, மறுபிறவிக்கும் அது பயன் தரும்.



No comments:
Post a Comment