Thursday, November 26, 2020

கர்மா_வலியது.

 மறைந்ந பிரதமர் இந்திராவால்

சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சிபெற்றார். ராஜீவ்காந்தி விமாளியாகப் பயிற்சி பெற்றார்..
ஆனால்...ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமானவிபத்தில் மாண்டார்.
ஸ்டாலினும் சசிகலாவும் 30 வருசமா முதல்வர் கனவில் இருந்தாங்க... ஆனால்...
ஓபிஎஸ், ஈபிஎஸ் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள்...
எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே...
ராஜீவும், பிரபாகரனும் தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள் ..அதுவும் வேரொருவரால் கொல்லப்பட்டார்கள்...
ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்... ஆனால்... தனது சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் மூத்திர வாளியோடு சுற்றித்திரிந்தார்...
ஜெயலலிதா சிறைக்கு போகனும்னு கருணாநிதியும்....கருணாநிதி சாகணும்னு ஜெயலலிதாவும் நினைத்தார்கள்...
கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா சிறைசென்றபோது அதை உணரும் நிலையில் கருணாநிதி இல்லை.
ஜெயலலிதா விருப்பப்படி கருணாநிதி இறந்த போது ஜெயலலிதாவே உயிருடன் இல்லை.
மெத்த படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆடினார் ... . ஆனால்...ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு உலகமே ஆடுகிறது...
விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்...ஆனால் ...
பூமி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது.
கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை...
உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றத்
தவறுவதே இல்லை.
நீ ஆசைப்படலாம் தேர்தல்ல நின்னு
எம்எல்ஏ ஆயிடலாம்னு.ஆனால் வேட்புமனு
தாக்கல்செய்யும் நேரம் பார்த்து உனக்கு ஓட்டு இருக்காது..ஆனால்.. ஓட்டுபோடும் நேரத்தில் உனக்கு ஓட்டு இருக்கும்.
இந்தப் அரசியலே வேண்டாம் நாம ஆன்மீகவாழ்க்கைக்குப் போயிடலாம்னு நீ நினைக்கலாம். ஆனால் உன்னைக் கூப்பிட்டுத்தான் திரும்பத் திரும்பப் பதவியைக் கொடுத்து அழகு பார்ப்பாங்க மக்கள்..
உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே சேர்த்து விடும் மிகச்சிறந்த நிர்வாகிதான் கர்மா.
யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்
கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில்
நன்மையை மட்டுமே விதைப்போம்.
நல்லவர்களாக வாழ்வோம்.
கெட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்கிறான்.அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டுப்
பார்க்க வேண்டாம்.
பாவமன்னிப்பு' என்ற மதச்சடங்கு,
இந்து மதத்தில் இல்லாதது
ஏன் தெரியுமா?
பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.
இந்துமதம் பாவத்தின் அளவுக்கு தண்டனையை விதிக்கிறது;
பாவம் உணரப்படும் போது,
குறைந்தபட்ச தண்டனை கொடுத்து மன்னிக்கிறது.
ஆனால், அப்படி ஒரு மன்னிப்பை வழங்குவதற்கு இங்கே யாரையும் நியமிக்கவில்லை.
இந்த விஷயங்களை நேரடியாக இறைவனே கவனிக்கிறான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...