Sunday, November 29, 2020

வாட்டி வதைக்கப்படும் வர்த்தகர்கள்... போட்டி போடும் அதிகாரிகள்...

 வரி விதிப்பு முறைகளில் லஞ்சத்தையும், தாமதத்தையும் ஒழிப்பதற்கு நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தினாலும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினாலும் நடைமுறைகளில் உள்ள சிக்கல்களைப் பயன்படுத்தி, காசு பார்ப்பதில் அதிகாரிகள் கில்லாடிகள். ஜி.எஸ்.டி.,

வாட்டி வதைக்கப்படும் வர்த்தகர்கள்...   போட்டி போடும் அதிகாரிகள்...

நடைமுறைகளில் வர்த்தகர்களை வாட்டுவதில் மத்திய, மாநில அதிகாரிகளுக்கு இடையே பெரும் போட்டியே நடக்கிறது.

ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017 ஜூலை முதல் தேதி நடைமுறைக்கு
வந்தது. அதற்கு முன், உற்பத்தித்துறையைச் சார்ந்து கலால் மற்றும் சுங்க வரிகள் விதிக்கப்பட்டன. வர்த்தகம் சார்ந்த மற்ற துறையினருக்கு மதிப்புக் கூடுதல் வரி (வாட்), சேவை
வரியினங்கள் வசூலிக்கப்பட்டன.

அனைத்து வரிகளையும் ஒருங்கிணைத்து தேசிய அளவில் ஒரே மாதிரியான ஒரு வரி வடிவமாக ஜி.எஸ்.டி.,யை அறிமுகம் செய்தபோது, உற்பத்தித்துறையைக் கருத்தில் கொண்டே, பெரும்பாலான விதி முறைகளையும், நடைமுறைகளையும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தேசத்தின் மிகப்பெரிய சந்தையைக் கையாளும் அத்தியாவசியப் பொருள் வர்த்தகத்துறையைக் கருத்தில் கொள்ளவேயில்லை.

அதன் விளைவு, உடனடியாகத் தெரியவில்லை. ஆனால் நடைமுறை என்று வந்த பின், மூன்று
ஆண்டுகளில் இந்தத் துறையினர், பலவிதங்களிலும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். குளியல் சோப், சலவை சோப், டூத்பேஸ்ட், ஷாம்பு, எண்ணெய் வகைகள், உணவுப்பொருட்கள் என பொதுமக்கள் தினமும் பயன்படுத்தும், 1,500 விதமான அத்தியாவசியப் பொருட்களை கையாள்வோர் இத்துறையினர்தான்.

ஐந்து லட்சம் நடுத்தர மற்றும் சிறு வர்த்தகர்கள்தான், 80 லட்சம் சில்லரை விற்பனைக் கடைகள் மூலமாக இந்தப் பொருட்களை மக்களிடம் கொண்டு செல்கின்றனர். இவர்கள் ஜி.எஸ்.டி., வரி செலுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நடைமுறைகள், பெரும் சிக்கலையும் பலவிதமான பாதிப்புகளையும் உருவாக்கி வருகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல; எளிதில் களையக்கூடியதும் கூட.

ஒவ்வொரு பொருளுக்கும் அதிக பட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. இது ஜி.எஸ்.டி., அமலாவதற்கு முன்னும், பின்னும் ஒரே மாதிரியாகவே உள்ளது; வர்த்தகத்துக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அதே விலையிலேயே, 'பில்லிங்' செய்யப்படுகிறது. ஜி.எஸ்.டி., வரி விதிப்பின் முழுப்பலனும் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதில் இப்போதும் எந்தத் தடைகளும் இல்லை.

ஆனால், ஜி.எஸ்.டி., கீழ்வரும் வர்த்தகம் சார்ந்த நடைமுறைகள், விதிமுறைகள் அனைத்துமே தெளிவின்றி வடிவமைக்கப்பட்டுள்ளன. 2017 ஜூலை முதல் தேதியன்று, வர்த்தகர்களாலும், வணிக நிறுவனங்களாலும் ஒப்படைக்கப்பட்ட இறுதி ஸ்டாக் உள்ளீட்டு வரி குறித்த குழப்பம் இன்று வரையிலும் தீர்ந்தபாடில்லை.

இந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு, மத்திய, மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி., துறை அதிகாரிகள், நோட்டீஸ் மேல் நோட்டீஸ் அனுப்பி வர்த்தகர்களை வாட்டி வதைக்கின்றனர். இந்த நோட்டீஸ்கள் எதற்காக அனுப்பப்படுகின்றன... இந்த நோட்டீஸ்களை வைத்து வர்த்தகர்களிடம் அவர்கள் எதிர்பார்ப்பது என்ன... 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...